2015 செப்டம்பர் மாதம் 25-ம் தேதி மே.வங்கம் சிலிகுரியில் உள்ள லாட்டரி ஏஜென்டுகள் மூலமாக ஹவாலா பணம் துபாய் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து தீவிரவாதி தாவூத் இப்ராஹிமிற்கு சென்று சேர்வதாக IB கொடுத்த தகவலின் அடிப்படையில் ED
மே.வங்கம்,சென்னை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது

லாட்டரி மார்ட்டின் நிறுவனமே அத்தொழிலில் கோலோச்சுவதால் மே.வங்கத்திலும்,தமிழகத்திலும் அவருக்கு ஆதரவானவர்கள் வீடுகளிலேயே ED சோதனை நடத்தியது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த லாட்டரி மார்டினுக்கு வேண்டப்பட்டவரான நாகராஜ் கைதும் செய்யப்பட்டார்

லாட்டரி மார்ட்டின்

ஹவாலா பணம்-துபாய்-தீவிரவாதி தாவூத் இப்ராஹிம் பேர் எல்லாம் சம்பந்தப்பட்டதால் சிலிகுரியில் இருக்கு ED அலுவகத்திற்கு தொலைபேசியில் அழைத்து சோதனை உண்மையா என்பதை உறுதிப்படுத்தினேன். மார்டினிடமும் நேரடியாக நானே தொலைபேசியில் பேசி நாகராஜன் கைது குறித்து கேட்டேன்

அப்போது, மிகவும் பதட்டத்தில் இருந்த லாட்டரி மார்டின் எதுவாக இருந்தாலும் தன்னுடைய வழக்கறிஞரிடம் பேசும் படி கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன் பிறகு, மார்டின் இந்தியா முழுவதும் தான் மிகவும் நேர்மையாக தொழில் செய்து வருவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார்

ED இந்த சோதனையை நடத்திய பிறகு, Central board of direct taxes Department அதிகாரிகள் 80 கோடி பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதாவது,தீவிரவாதி தாவூத் இப்ராஹிமிற்கு ஹவாலா மூலமாக பணம் அனுப்புவதாக IB தகவல் கொடுத்ததன் பேரில் ED சோதனை நடத்தியது நிஜம். வழக்கும் பதிவு செய்தது உண்மை

CBI, ED, CBDT, பல்வேறு மாநில காவல்துறையில் வழக்குகளை எதிர்கொண்டு வரும் நபர் லாட்டரி மார்ட்டின். அவரின் மூத்த மகனான ஜோஸ் மார்ட்டின் 2015 ஜூன் மாதம் 22-ம் தேதி பிஜேபியின் முக்கியத்தலைவரான ராம் மாதவ் முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார்.

பிஜேபியில் இணைந்த லாட்டரி மார்ட்டினின் மகனான ஜோஸ் மார்ட்டின்

ஜோஸ் மார்டின் என்ன பொறுப்பில் இருக்கிறார், கட்சியில் இப்போதும் இருக்கிறாரா இல்லையா என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால், ஹவாலா மூலமாக தீவிரவாதி தாவூத் இப்ராஹிமிற்கு பணம் போவதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் பரணுக்கு மேல தூக்கிப்போட்டாச்சு.

தேர்தல் காலங்களில் பிஜேபிக்கு தேவையான பணத்தை விநியோகம் செய்வதில் மார்ட்டினுக்கு மிகப்பெரிய பங்குண்டு. பிஜேபிக்கு 2021-ம் ஆண்டு 100 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த ஒரே நிறுவனம் மார்ட்டினின் Future Games நிறுவனம் மட்டுமே.
இதைத்தவிர ப்ளாக்கில் கைமாறிய பணத்திற்கு கணக்கே தெரியாது

2015-ல் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமிற்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக யாரை சந்தேகப்பட்டு ED சோதனை நடத்தியது என்பதையும்,2021-ல் BJP 100 கோடி ரூபாய் யாரிடம் கட்சிக்கு நன்கொடையாக வாங்கியது என்பதையும் ஏன் சொல்கிறேன் என்றால் !?

நிழலுக தாவுத் இப்ராஹிம்

சிலருக்கு பல கதைகள் தெரியாது அதனால் கூற வேண்டியுள்ளது.
தாவூத் இப்ராஹிமோடு தொடர்பென சந்தேகப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நபரின் நிறுவனத்திடம் இருந்து 100 கோடி ரூபாய் நன்கொடை வாங்கியது ஏன் ?
இந்தியாவிலேயே யாருமே தராத பெருந் தொகையை மார்ட்டின் BJP க்கு கொடுக்க காரணமென்ன ?

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை எந்த காலத்திலும் கிடைக்காது.
ஏன்னா அதுக்கு பேர் தான் அரசியல். நல்லது செஞ்சுட்டு போங்க.
ஆனால், ஐடி விங் வெச்சுகிட்டு பத்திரிகையாளர்களையும் அவங்க குடும்பத்தையும் அசிங்கமாக பேசுவதையே தனித் தொழிலாவே செய்தா எப்படி ! நல்லாவா இருக்கு !?

அப்புறம் நாங்களும் கட்சியின் செயல்பாட்டை கவனிப்பதோடு, சேர்த்து வீட்ல இருக்கும் அண்டா குண்டா வரை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படறோம்.
புரிஞ்சிக்கிட்டு நாகரீகமா நடக்கனும். இல்லேன்னா ஊழலை பொறுக்கி,மறைக்கப்பட்ட உண்மையை பொறுக்கி ஊரெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு

எல்லா அரசியல் கட்சிகளும் மார்ட்டினிடம் பணம் வாங்குகிறது. தவறில்லை ! ஆனால் யார் அதிகம் வாங்குகிறார்கள் ? ஏன் அதிக பணம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது ? அதற்காக என்ன சலுகை செய்து தரப்படுகிறது என்பதெல்லாம் “நேர்மையாளர்கள்”கூற வேண்டியது அவசியமில்லையா ?

  • Arvindakshan

1 COMMENT

  1. கிரிமினல் குற்றக் கும்பல் தலைவனான லாட்டரி மார்ட்டின்
    சில ஆண்டுகளில் 14000 கோடி ரூபாய்க்கு அதிபதி ஆனார்.

    இந்த கிரிமினலின் இரண்டு மகன்கள் ஒருவர் சார்லஸ் மார்ட்டின் பாரதிய ஜனதா கட்சியில் சங்கமம் ஆகி விட்டார்.
    மற்றொருவர் டைசன் மார்ட்டின் அவர் தமிழர் விடியல் கட்சி என்ற ஒரு கட்சி உள்ளதல்லவா. அதில் இணைந்து அண்ணன் திருமுருகன் காந்தி உட்பட அனைவருடன் நெருக்கமாக ‘தமிழ் தேசிய விடுதலையை’ அடைவதற்கு சேவை புரிந்து கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here