தோழர் லெனின் சுப்பையாவிற்கு செவ்வணக்கம் !

புதுச்சேரியில் வாழ்ந்து வந்த தோழர் லெனின் சுப்பையா சமரசம் இல்லாத நாட்டுப்புற கலைஞர்.

துவக்க காலத்தில் பேராசிரியர் குணசேகரனுடன் இணைந்து “தன்னானே” கலைக் குழுவில், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், நாட்டுப்புற கலைகளை அழியாமல் பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தனது குரல்வளத்தால் இசைத்து வந்தார்.
வெறும் குரல் இசைக்கலைஞராக மட்டுமின்றி பாடல்கள் எழுதுவதிலும், அதற்கு உரிய மெட்டுகளை தேர்வு செய்து இசைப்பதிலும் சொந்த முயற்சியுடைய அற்புதமான கலைஞர்.
அம்பேத்கரியம், பெரியாரியம் போன்றவை மார்க்சியத்துடன் இணைந்து செயல்படும்போது தான் சமூக விடுதலை சாத்தியம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

தமது விடுதலை இசை போர்குரல் கலைக் குழுவின் மூலமாக ‘தலித் சுப்பையா’ என்ற அடையாளத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது அவரது குரல்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் துவக்க காலம் முதல் தோழமையுடன் பழகி வந்தார். அனைத்து போராட்ட களத்திலும் துணை நின்றார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட பிறகு தனது எழுத்துக்களை நூலாக கொண்டு வருவதில் ஆர்வத்துடன் செயல்பட்டார்.

கலை இலக்கியக் துறையில் சிறிது பிரபலமானவுடன் சினிமா சான்சுக்கு அலையும் போலி கலைஞர்கள் மத்தியில் இறுதிவரை எளிய வாழ்க்கை வாழ்ந்த தோழர் தனது பெயரையும் லெனின் சுப்பையா என்று மாற்றிக் கொண்டார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் பயணித்த அருமை தோழரை இழந்து துன்புறும் குடும்பத்தினர், தோழர்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் லெனின் சுப்பையாவிற்கு செவ்வணக்கம்!

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here