நூல் அறிமுகம்:
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது எப்படி?

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தது எப்படி? என்ற கீழைக்காற்று வெளியீட்டகத்தின் இந்த நூல் 2004ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. அதன் மூன்றாம் பதிப்பு 2020ஆம் ஆண்டு வெளிவந்தது.

தமிழகம் “பெரியார் பிறந்த மண்” இங்கு ஆர்.எஸ்.எஸ்-பாஜக காலூன்ற முடியாது என்று கற்பனை கோட்டையில் மிதக்கின்ற பலர் ஆர் எஸ் எஸ் 1980 களில் இருந்து படிப்படியாக வளர்ந்து வருகிறது என்ற உண்மையை பார்க்க மறுக்கின்றனர்.

தேர்தல் அரசியலில் பங்கெடுக்கின்ற கட்சிகள் அதிமுக, திமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் அமைப்பான பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு பல்வேறு காலகட்டங்களில் துணை புரிந்து உள்ளனர். இன்றும் இந்தக் கட்சிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ரகசியமாக ஊடுருவி செயல்பட்டு வருகின்றனர்.

படிக்க:

♦ நூல் அறிமுகம்: கருப்பும் காவியும்
 கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய வெளியீடுகள்!

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற கடும் போரில் நாம் களம் காண்பதற்கு தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலமே அரசியல் கட்சிகளையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்த கண்ணோட்டத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் என்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்பு எவ்வாறு வளர்ந்து வருகிறது, இன்று அனைத்து துறைகளிலும் ஊடுருவி நிற்கிறது, எதிரிகளை பிளவுபடுத்தி தன்னை பலப்படுத்திக் கொள்கிறது, ஊடகங்களையும், அறிவுத் துறையினரையும் வளைத்துப் போட்டுக் கொண்டு எவ்வாறு தனது இலக்கை நோக்கி வளர்கிறது போன்ற அனைத்தையும் தொகுப்பாக புரிந்து கொண்டால் மட்டுமே கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசை நிறுவ முடியும்.

இந்த நோக்கத்திற்கு மேற்கண்ட சிறு வெளியீடு உதவிகரமாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் நூலை அறிமுகம் செய்கின்றோம்.

பக்கங்கள்: 40
விலை: ரூ.30.00

நூல் கிடைக்கும் இடம்.

கீழைக்காற்று வெளியீட்டகம்.
எண்.17 அருமலைசாவடி,
கண்டோன்மென்ட்,
சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here