சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் அதனால் உருவான வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகமாகும் போது அதை தடுத்து வைப்பதற்கு எந்த பெரிய அணைகளும், தடுப்பணைகளும் இல்லாத நிலையில் அங்கு உற்பத்தி ஆகின்ற நீர் நேராக ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலப்பது தான் கொடூரமான நிலைமையாகும்.
தென்பெண்ணையாற்றில் பல இடங்களில், அதிமுக ஆட்சியின்போது சட்ட விரோத மற்றும் அரசு ஏற்படுத்திய மணல் குவாரிகளின் மூலமாக பல ஆயிரம் டன் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் அந்த ஆற்றின் போக்கிலேயே மாற்றம் ஏற்படுத்தும் அளவிற்கு இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக நீரைத் தேக்கி வைப்பதற்கு பொருத்தமான தடுப்பணைகள், படுக்கை அணைகள் இல்லாத நிலையில் சாத்தனூர் மற்றும் திருக்கோவிலூர் அணைக்கட்டில் திறந்து விடப்பட்ட அளவுக்கதிகமான நீரானது, கடலூரில் புகுந்து வெள்ளக்காடாகியுள்ளது.
மழை, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நேரும்போது டெஸ்க் ரிப்போர்ட்டர்களைப் போல, வீட்டிலேயே அமர்ந்து கொண்டு அதை எழுதுவதற்கு பதிலாக, மக்களோடு, மக்களாக களத்தில் இறங்கி வேலை செய்கிறது மக்கள் அதிகாரம்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில், தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய பகுதியில் வெள்ளம் புகுந்த மஞ்சகுப்பம், குண்டு உப்பலவாடி ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகாரத்தின் கடலூர் மண்டல தோழர்கள் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்தனர்.

வீடுகளை சுத்தம் செய்வது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, வீடுகள் புழங்குவதற்கு பொருத்தமான வகையில் தயாரிப்பது, சிற்சில பாதிப்புகளை சரி செய்வது, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்வது போன்ற வகையில் தோழர்கள் நேரடியாக களப்பணி செய்தனர்.
அதன் காட்சி பதிவுகளை இத்துடன் இணைத்துள்ளோம்.
இதுமட்டுமின்றி தற்போதைக்கு அந்த மாவட்ட மக்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலையும் மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம் ஆய்வு செய்து முன் வைத்துள்ளது.
1. போர்வை
2. பாய்
3. தார்ப்பாய்.
4. தரை விரிப்புகள்.
5.கொசுவலை.

மேற்கண்ட பொருள்கள் உடனடி தேவை என்றும் தோழர்கள் முன்வைத்துள்ளனர் வாய்ப்புள்ள நண்பர்கள், ஆதரவாளர்கள் உடனடியாக கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தோழர் து. பாலு.
தலைமை செயற்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுச்சேரி.
81108 15963.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here