தூத்துக்குடி எஸ்.பி அவர்களே இது நியாயமா? சட்டத்தின்முன் அனைவரும் சமமா? ஸ்டெர்லைட்டிடம் அதீத விசுவாசம் ஏன் ? நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு – தெரிந்துதான் இத்தனையும் நடக்கிறதா?
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 7 மணி வரை சிறைவைத்து விடுதலை! ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை என்றாவது கைது செய்துள்ளதா தூத்துக்குடி போலீசு?

ன்று, மே.2.ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பராமரிப்பு நாடகம் வேண்டாம்! உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடத்து! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று! என்ற கோரிக்கையை முன்வைத்து மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

நேற்று இரவு பல்வேறு கிராமங்களுக்கு சென்ற தூத்துக்குடி போலீசு, போராட்டத்திற்கு போகக் கூடாது என மிரட்டியது. எஸ்.பி உத்தரவு என்று சொல்லி கூட்டம் சேர விடாமல் திட்டமிட்டு தடுத்தது. வேனில் செல்லக் கூடாதென மிரட்டி வீடியோ எடுத்தது. போலீசின் கடும் அச்சுறுத்தலையும் மீறி இன்றைய போராட்டம் வெற்றிகரமாய் நடந்தது. ஏராளமான பெண்கள் திரண்டு வந்து போராட்டம் செய்தனர்.

வழக்கமாய், கலெக்டர் அலுவலகத்திற்கு போராட வருபவர்களை அனுமதிக்கும் இடம் வரை இன்று வந்த மக்களை அனுமதிக்கவில்லை. மாறாக, வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.வழக்கமான இடம் வரை அனுமதியுங்கள், அங்கிருந்து 5 பேர் மட்டும் சென்று மனு அளிக்கிறோம் என்ற கோரிக்கையை திட்டமிட்டு நிராகரித்த போலீசு, மக்களை அவமதித்து மறியலுக்குத் தள்ளியது. பின்பு கைது செய்தது. 7 மணி வரை மண்டபத்தில் அடைத்தது.

எமது கேள்வி, ஒவ்வொரு வாரமும் கலெக்டர் அலுவலகம் வரும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களிடம் என்றாவது தூத்துக்குடி போலீசு இவ்வாறு நடந்து கொண்டுள்ளதா? வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளதா? வீடியோ எடுத்துள்ளதா? 15 பேர் கொல்லப்பட்டு, மூடப்பட்ட சட்டவிரோத நிறுவனத்திற்கு இன்றுவரை காவல்துறை ஆதரவாக நிற்பதேன்? அதிமுக அரசின் திட்டமிட்ட அலட்சியம்தான், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை வீரியப்படுத்தியது.தற்போது அதே திசையில் தூத்துக்குடி காவல்துறை பயணிக்கிறது.தொடர் அடக்குமுறை, காவல்துறையின் ஸ்டெர்லைட் ஆதரவு மீண்டும் ஒரு எழுச்சியை தூத்துக்குடியில் உருவாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

வாஞ்சிநாதன்
முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here