கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக இழுத்து மூடு!
தூத்துக்குடியின் பொது அமைதியை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட்டை குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு-133ன் கீழ் தூத்துக்குடி சிப்காட்டிலிருந்து அப்புறப்படுத்த தயக்கம் ஏன்?
100 கோடி அபராதம் செலுத்தி உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் ஆலையை திறந்த ஸ்டெர்லைட் மீண்டும் விஷத்தைக் கக்கியது. ஆலையை மூட போராடிய மக்கள் 15 பேரின் உயிரை பறித்தும் அதன் கொலை வெறி அடங்கவில்லை. அரசாணை மூலம் சீல் வைத்த பிறகும் குறுக்குவழியில் ஆலையை திறக்க நலத்திட்ட உதவிகள் என்கிற பெயரில் கோடிக்கணக்கில் பணப் பட்டுவாடா செய்து தனக்கான ஆதரவாளர்களை உருவாக்க முயற்சிக்கிறது. ஸ்டெர்லைட் தனது நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து காவல் துறையிடமிருந்து அனுமதி பெறுவது இல்லை.
சாதி-மத & ஏரியா அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத நயவஞ்சக நடவடிக்கைகளால் தூத்துக்குடி மாநகரத்திலும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் பொது அமைதி குலைகிறது. சமீபத்தில் கூட தூத்துக்குடி பாத்திமா நகரில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பொது அமைதியை கெடுத்து உள்ளனர் அவர்களை கைது செய்யக்கோரி நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இது போல எப்போது மோதல் வெடிக்குமோ? என்ற அச்சத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் உண்டாக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் எதிராக மே 22 2018 நடந்த போராட்டத்தில் உ73 வழக்குகளும், அதற்கு முன்பாக நடந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளுகம், துப்பாக்கிச்சூடுக்கு பின்னர் நடந்து வருகிற போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளும் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. பல்வேறு காவல் நிலையங்களில் இதற்கு எதிரான புகார்கள் வரப்பெற்று ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுமக்கள் -எதிர்- ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என மக்கள் பிளவுபடுத்தப்பட்டு பெரும் மோதல் வரும் சூழல் உள்ளது. தூத்துக்குடியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செயல்படுவதால் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு -133 அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட்டில் இருந்து அப்புறப்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியை பாதுகாக்க வேண்டுகிறோம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.