ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!
நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்!
வெளியில் மக்கள்திரள் எழுச்சி!

ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் நாடகத்தை தற்காலிகமாக முறியடித்த தமிழக அரசிற்கு நன்றி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்காக உச்சநீதிமன்றம் அளித்திருந்த 3 மாத அனுமதி நாளையுடன் முடிவடையும் நிலையில் தொடர்ந்து இயங்க ஸ்டெர்லைட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் ஆலை தரப்பில் நீதிபதி சந்திரசூட் அவர்களிடம் முறையிட்டதில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதுவரை ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை இயங்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மதியம் முதல் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் ப்ளாண்ட் படிப்படியாக நிறுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது. தண்ணீர் விநியோகம் & மின்சார விநியோகம் 1-ம் தேதி அதிகாலையில் முழுவதுமாக துண்டிக்கப்படும் என்று தெரிய வருகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் துரிதமாக செயல்படுத்தி வருகின்றனர்.
மக்களின கருத்தை – எதிர்பார்ப்பை தமிழக அரசு உச்சிமன்றத்தில் தெரிவித்துள்ளதற்கு கூட்டமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்

இம்மனு மீதான விசாரணையில் தமிழக அரசு மிகவும் வலுவான ஆதார – ஆவணங்களோடு வாதிடவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here