“ஆக்ஸிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட்டை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும்” என்று போராடியவர்கள் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்:

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் / கிராமத்தினர் என்ற பெயரில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இயங்க வேண்டும் என உளவுத் துறையின் கண்ணில் மண்ணை தூவி “டிமிக்கி கொடுத்து” திடீர், திடீர் என போராட்டங்கள் என்ற பெயரில் கொரானோ விதிகளை மீறி காமடி நடந்தது. அதை யாரும் பொருட்படுத்தாதற்கு காரணம் அந்த அரிய வகை போராட்டம் நடத்தியவர்கள் ஸ்டெர்லைட் கைக்கூலிகள் என்பதால்தான்.

இந்த போராட்டங்களை நடத்திய கைக்கூலிகள் பலர் மீதும், ஸ்டெர்லைட் நிர்வாகிகள் PRO கன்ஸியஸ், துணைத்தலைவர் சுமதி மீதும் சிப்காட், புதியம்புத்தூர் உட்பட சில காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த (16-08-2021) மேற்படி வழக்குகளை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக போராடியவர்களுக்கு, மணிக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்கள் P.S.இராமன், A.R.L சுந்தரேசன், மற்றும் I.சுப்பிரமணியன் போன்றோர்தான் ஆஜராகி வாதாடினர். போராட்டம் நடத்தி யவர்களுக்கு இந்த வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தது போராட்டத்தை தூண்டிவிட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் தான். இதன்மூலம் ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் மீது அளவில்லாத அன்பு கொண்ட “ஸ்டெர்லைட் ஆக்சிஜன் பிரியர்கள்” ஸ்டெர்லைட் கைக்கூலிகள் என்ற உண்மை வீதிக்கு வந்து விட்டது.

மேலும் முக்கியமாக குறிப்பிட விரும்புவது, இந்த விசாரணை ஆன்லைனில் நடந்ததை பார்த்தபோது, தமிழக அரசின் வழக்கறிஞர் அன்பு நிதி அவர்கள் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், ஸ்டெர்லைட் வழக்கறிஞர்களின் வாதத்தை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருந்தார் என்பது தான். இது சரியல்ல. மிகுந்த அதிர்ச்சியை கொடுக்கிறது. ஏனெனில் “ஆக்ஸிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க கூடாது என போராடியவர்கள் மீதும் இதற்கு முன்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அரசு இதில் பாரபட்சம் காட்ட வில்லை, நீதிமன்றமும் காட்டக் கூடாது” என்பதையாவது குறைந்தபட்சம் சொல்லியிருக்கலாம்.
——————————————————————-

ஸ்டெர்லைட்டை மூடிய தமிழக அரசாணை செல்லாது எனவும் ஸ்டெர்லைட்டை மீண்டும் நிரந்தரமாக திறக்க வேண்டும் என்கிற வேதாந்தாவின் அப்பீல் மனுவானது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. இது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மிகவும் கவனிக்கப்படக்கூடிய தூத்துக்குடி மக்களின் சுகாதாரமான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தி கொடுக்கும் வழக்காகும். இதில் வாதாட போகும் தமிழக அரசின் வழக்கறிஞர் இதே போல செயல்பட கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசானது, ஸ்டெர்லைட்டிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
94435840497811940678812227571873051723529787195783995276368699653456959894574817

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here