ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

செய்தி வெளியீடு

275வது நாள், 28 ஆகஸ்ட் 2021.

••• இன்று அரியானா முதல்வர் கட்டார் தொகுதியான கர்னலில், போராடும் விவசாயிகள் மீது காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலை, எஸ்.கே.எம். கடுமையாகவும், கண்டிக்கிறது – காவல்துறையினருக்கு, துணை பிரிவு மாஜிஸ்டிரேட் ஆயுஷ் சின்ஹா உத்தரவு கொடுத்த வீடியோ வெளியான நிலையில், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று எஸ்.கே.எம் கோருகிறது !

••• தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில், 3 விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை SKM வரவேற்கிறது !

அரியானாவில் பாஜக-ஜேஜேபி அரசாங்கம், இன்று கர்னலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூர வன்முறையை ஐக்கிய விவசாயிகள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இது முதலமைச்சரின் தொகுதியில் நடந்தது. உள்ளூர் விவசாயிகளால் நடத்தப்பட்ட ஒரு போராட்ட நிகழ்ச்சியின் பின்னணியில், முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்புக் கொடி போராட்டத்தின் போது இது நடைபெற்றது. அரசாங்கத்தின் இந்த மிருகத்தனமான நடவடிக்கை, மற்றும் கர்னலில் இன்று காவல்துறையினருக்கு “மண்டைகளை உடைக்க” துணை பிரிவு மாஜிஸ்டிரேட் கொடுத்த முற்றிலும் சட்டவிரோதமான, கொடூரமான உத்தரவுகள் கண்டனத்திற்குரியது. இது நமது ஜனநாயகத்திற்கு அவமதிப்பையும், அவமானத்தையும் தருகிறது. பிரதமர் மோடி ஜாலியன் வாலாபாக் (கணினியால் உருவாக்கப்பட்ட) மெய்நிகர் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​கர்னாலில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஜாலியன் வாலாபாக் ஆகிய இரண்டுமே அவமானகரமானது. விவசாயிகள் பின்வாங்க மாட்டார்கள் என்று கட்டார்-சவுதாலா அரசாங்கத்தை எஸ்.கே.எம். எச்சரிக்கிறது. மக்கள் விரோத அரசின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களால், தற்போதைய வரலாற்று சிறப்புமிக்க இயக்கத்தை ஒடுக்க முடியாது. அரசாங்கத்தின் அடக்குமுறை முயற்சிகள், விவசாயிகளின் உறுதியையும், அமைதியான போராட்டத்தையும் வலுப்படுத்தும். வரும் நாட்களில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என எஸ்.கே.எம் கூறியுள்ளது.

எல்லா இடங்களிலும் நெடுஞ்சாலைகளை மறிக்க அரியானா மக்களுக்கு எஸ்.கே.எம் அழைப்பு விடுத்துள்ளது. கர்னல் நகர துணை பிரிவு மாஜிஸ்டிரேட் ஆயுஷ் சின்ஹா, போராட்டக்காரர்களின் மண்டைகளை உடைக்க உத்தரவிட்டதற்கு ஆதாரமாக உள்ள ஒரு வீடியோ வைரலாகியுள்ளதையடுத்து, அவரை உடனடியாகப் பணியிலிருந்து நீக்க எஸ்.கே.எம் கோருகிறது.

குருக்ஷேத்ரா, அம்பாலா, ஜிந்த், ரேவாரி, நர்வாணா, ஃபதேஹாபாத், சிர்சா, கிட்லானா டோல், கோஹனா, ரோஹ்தக், பிவானி போன்ற பல இடங்களில் நெடுஞ்சாலையில் நெரிசலை விவசாயிகள் ஏற்படுத்தியபோது, காவல்துறையினரின் ​​அடக்குமுறை நடவடிக்கைகள் மாநிலத்தின் மற்ற இடங்களிலும் போராட்டங்களைத் தூண்டியது. உத்தரகண்டின் பல்வேறு இடங்களில் இப்போதும் இந்தச் சாலை நெரிசல் தொடர்கிறது.

ஜாலியன் வாலாபாக் நவீனமயமாக்கல் தொடக்க விழாவில், பிரதமரின் மெய்நிகர் பேச்சுக்கு எதிராக, அமிர்தசரஸில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை SKM கண்டிக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்திற்குச் செல்ல விரும்பினர். ஆனால் அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திரு. நரேந்திர மோடியின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தங்களுக்குத் தார்மீக உரிமை உள்ளது என்று இளைஞர்கள் வாதிட்டனர்.

மோடி அரசின் 3 விவசாயிகள் விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கருப்பு சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதை எஸ்.கே.எம் வரவேற்கிறது. பல மாநில அரசுகள் இந்தச் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியும், விவசாயிகள் போராட்டங்களுக்குப் பல்வேறு வழிகளில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் உள்ளன.

செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் முசாபர்நகர் மகாபஞ்சாயத்திற்கு அதிக அளவில் மக்களைத் திரட்டவும், செப்டம்பர் 25ஆம் தேதி பாரத் பந்த்-ஐ வரலாற்று வெற்றியாக செய்யவும், தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் மற்றும் பிற முற்போக்கான குடிமக்கள் குழுக்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளுக்கும் SKM வேண்டுகோள் விடுத்துள்ளது.

அறிக்கையை வழங்கியவர்கள் –

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here