டிசம்பர்- 6 நம்மால் மறக்கமுடியாத நாள். இந்தியப்பெருமையும், இழிவும் ஒரேநாளில் அமைந்திருக்கிறது. இது இயற்கையான நிகழ்வல்ல. பார்ப்பன பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதிச்செயல்.

இந்திய துணைக்கண்டத்தின் இருபதாம் நூற்றாண்டு அறிஞர்களில் தலைசிறந்த ஒருவராக திகழ்ந்த மாமேதை பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாள். அவருடைய நினைவு நாளில் பாபர்மசூதியை இடித்த சனாதன சங்கிகள் இனிப்புகொடுத்து மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பார்ப்பன வேதமதத்திற்கு எதிராக சமணமதத்தை உருவாக்கிய வர்த்தமான மகாவீரர் நினைவுநாள் தீபாவளி மகிழ்ச்சி கொண்டாட்டமாக மடை மாற்றப்பட்டது. மகாவீரர் மறைக்கப்பட்டார். நரகாசுர புனைக்கதை உருவாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் சனாதன பார்பனர்களின் “கலாச்சார அடிமைகள்”ஆக்கப்பட்டார்கள். நாளை அம்பேத்கருக்கும் இதே நிலை உருவாகலாம்.

அம்பேத்கரை திருதராஷ்ட்டிர ஆலிங்கனம் (அரவணைத்து கொல்லுதல்) என்ற சதிச்செயலை ஆர்எஸ்எஸ் சனாதன சங்கிகள் தொடங்கி அரங்கேற்றி வருகிறார்கள். அர்ஜூன்சம்பத் போன்றவர்கள் தெரிந்தே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைக்கும் இழிபிறவிகளாக உருவாகிவிட்டார்கள். அர்ஜூன்சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி இழிபிறவிகளின் அம்பேத்கர் நினைவுநாள் சுவரொட்டி அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

காலம்காலமாக பஞ்சமர்களாக ஒதுக்கிவைத்து ஒடுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுகங்களுக்கு இது ஒர் எச்சரிக்கை. டிசம்பர் ஆறாம் நாளை பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அம்பேத்கர் நினைவு நாளை கடைபிடிக்கப்போகிறோமா? அல்லது ஆர்எஸ்எஸ் சங்கிகளுடன் இணைத்துக்கொண்டு பாபர் மசூதி இடிப்பு நாளாக கொண்டாட போகிறோமா? என்பதுதான் இன்றைய கேள்வி.

அநாரியன் பதிவு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு காலை 9 மணிக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் தோழர். வழக்கறிஞர் ஜானகிராமன், விவசாயிகள் விடுதலை முன்னணி தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் மற்றும் தோழர்கள் மாரி, தாமு ஆகியோரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில பொது செயலாளர் தோழர் . அன்பு, மற்றும் தோழர்களும் பங்கேற்றனர்.

டாக்டர் அம்பேத்கரின் அறைகூவலை ஏற்போம்!!!

சனாதன-பார்ப்பன இந்து ராஜ்யத் திட்டத்தை அமல்படுத்தும் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்!!!

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

என முழக்கமிட்டபடி விருத்தாச்சலம் பாலக்கரை அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு வட்டாரச் செயலாளர் தோழர் செந்தாமரை கந்தன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு உறுதி ஏற்கப்பட்டது.

மக்கள் அதிகாரம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜூ, தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பாலு மற்றும் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தஞ்சையில் இரயிலடியில மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் சேவையா மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த தோழர்கள் அம்பேத்கருக்கு மலரஞ்சலி செலுத்தி உறுதி ஏற்றனர்.

திருவாரூரில் அணைத்து கட்சிகள் இயக்கங்கள் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம் நடத்தி நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முக சுந்தரம் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியாக அர்ஜுன் சம்பத் கைது செய்யக் கோரி சென்னையில் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டபடி எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here