திருச்சி
திருச்சியில் சாலை மறியல் போராட்டம்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று 27.09.2021 நாடு தழுவிய பாரத் அறிவித்திருந்தனர். பந்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருச்சியில் இன்று காலை 10.30 மணியளவில் மெயின்காட்கேட்டில் உள்ள பூம்புகாரில் இருந்து பேரணியாக புறப்பட்டு தெப்பகுளம் முன்பு சாலை மறியலில் தோழர்கள் ஈடுபட்டனர்.
பேரணியில் கார்ப்பரேட் முதலாளி விவசாயி மற்றும் தொழிலாளர்களை சங்கிலியில் பிணைத்து இழுத்து வருவதுபோல் தோழர்கள் வேடமிட்டு காட்சிப்படுத்தினர். மோடி அரசை கண்டித்து முழக்கங்கள் இட்டும், பதாகைகள் ஏந்தியும், கறுப்பு பலூன்கள் ஏந்தியும், பாடல்கள் பாடியும் தோழர்கள் போராட்டத்தை பிரம்மாண்டமாக்கினர். அங்கு ஏற்கனவே போராட்டத்தில் பங்கெடுக்க வந்த அரசியல் கட்சிகாரர்கள் மற்றும் தொழிற்சங்க தோழர்கள் நம் போராட்டத்தை பிரம்மிப்புடன் பார்த்தனர்.
இப்போராட்டத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்கள், ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி, அமைப்பு சாரா தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்பை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
பிறகு தெப்பக்குளம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்ப்பட்டோரை போலிசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். மண்டபத்தில் அடைக்கப்பட்ட தோழர்களை சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் சந்தித்து சிறிது நேரம் உரை நிகழ்த்தி கைதான தோழர்களுக்கு தமது வாழ்த்துக்களை கூறினார். ம.க.இ.க கலைக்குழு பாடகர் தோழர்.கோவன் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பாடல் பாடினார். போராட்டதில் பங்கேற்ற அமைப்புகள் மற்றும் சங்க நிர்வாகிகள் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக உரை நிகழ்த்தினர். பின்பு மாலை அனைவரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி.
நாமக்கல்

டெல்லியில் 10 மாதங்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் அறிவித்துள்ள செப்டம்பர் 27 பாரத் பந்த் கடையடைப்பு போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், AITUC, LPF, CITU, AICCTU, HMS, INTUC, LTUC மற்றும் தி.வி.க, தி.க, மக்கள் அதிகாரம், தமிழ் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் இன்று (27.09.2021) காலை 10.30 மணி அளவில் காவேரி R.S ல் ரயில் மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்🚩
நாமக்கல் மாவட்டம்.

கரூர் மாவட்டம்.
அகில இந்திய விவசாயிகள் குழு சார்பாக நாடு தழுவிய பந்த் இன்று நடைபெற்றது. முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக கரூரில் சித்தலவாய் ஜங்ஷனில் ரயில் மறியல் செய்ய முற்பட்டபோது காவல்துறை முன்னரே தடுப்பு போட்டு உள்ளே செல்வதற்கு விடாமல் தடையை ஏற்படுத்தியது. தடையை மீறி போராட்டம் உணர்வு பூர்வமாக நடைபெற்றது . இதில் பெருந்திரளாக ஜனநாயக இயக்கங்கள் முற்போக்கு சக்திகள் தோழமை அமைப்புகள் என 150 பேர் கலந்து கொண்டனர் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக பெண்கள் , குழந்தைகள் , இளைஞர்கள் என 25 பேர் கலந்து கொண்டனர். விவசாயிகள் பிரச்சினைக்காக போராடும் தோழர்களை குண்டு கட்டாக தூக்குவது தள்ளுமுள்ளு ஏற்படுத்துவது முழக்கமிட்ட தோழர்களை குறிவைத்து தூக்குவது கருத்து சுதந்திரத்தை மறுப்பதற்கான செயலாக காவல்துறை கையாண்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் கைது செய்து கிருஷ்ணராயபுரம் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்பு மாலை 06:00 மணியளவில் கைது செய்த தோழர்களை விடுவித்தனர்

தகவல் :
இரா .சக்திவேல்
கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்🚩
கரூர் மாவட்டம்.

பத்திரிக்கைசெய்தி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here