ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

பத்திரிகை செய்தி

நவம்பர் 19, 2021, காலை 10.30 மணி


இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜூன் 2020இல் முதன்முதலில் அவசர சட்டங்களாகக் கொண்டு வரப்பட்ட, மூன்று விவசாயிகளுக்கு எதிரான, கார்ப்பரேட் ஆதரவு கருப்புச் சட்டங்களையும் இரத்து செய்யும் இந்திய அரசின் முடிவை அறிவித்துள்ளார். குருநானக் ஜெயந்தி அன்று தேர்வு செய்து அறிவித்திருக்கிறார்.

இந்த முடிவை ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) வரவேற்கிறது மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் மூலம் அறிவிப்பு அமலுக்கு வரும் வரை காத்திருப்போம் என்றும் அறிவிக்கிறது. இது நடந்தால், இந்தியாவில் ஓராண்டு நீடித்த விவசாயிகள் போராட்டத்திற்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாக இது அமையும். ஆனால், இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 700 விவசாயிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலைகள் உட்பட தவிர்க்கக்கூடிய இந்த மரணங்களுக்கு ஒன்றிய அரசின் பிடிவாதமே காரணம்.

விவசாயிகளின் போராட்டம் மூன்று கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்காக மட்டுமல்ல; அனைத்து விவசாய விளைப்பொருட்களுக்கும் நியாயமான விலை, அது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்கும் கூட என்பதை எஸ்.கே.எம். பிரதமருக்கு நினைவூட்டுகிறது. விவசாயிகளின் இந்த முக்கியமான கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும். எஸ்.கே.எம். அனைத்து நிலவரங்களையும் கவனித்து, அதன் கூட்டத்தை விரைவில் நடத்தி மேலும் முடிவுகளை அறிவிக்கும்.

அறிக்கையை வழங்கியவர்கள் –

பல்பீர் சிங் ராஜேவால், டாக்டர் தர்ஷன் பால், குர்னம் சிங் சாருனி, ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் டல்வால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா ‘கக்காஜி’, யுத்வீர் சிங்

சம்யுக்தா கிசான் மோர்ச்சா
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு:
ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here