விவசாயிகளிடம் பெருகிவரும் ஒற்றுமை உணர்வு புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளது. இதுவரை ஒரு சாதியைச் சேர்ந்தவர் தாக்கப்பட்டால் பிறர் அதற்காக குரல் கொடுப்பது ஒரு மதத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்டால் பிறர் அதற்காக குரல் கொடுப்பதும் என்ற கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டு வர்க்க ரீதியாக விவசாயி பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த குரல் கொடுக்கின்ற புதிய வகையிலான ஒற்றுமை உணர்வு நாடு முழுவதும் உருவாகி வருகிறது. இந்தப் போக்கை நாம் ஊன்றுகோலாக பற்றிக்கொண்டு விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து வேலைகளைக் கொண்டு செல்வோம்.

உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த பாசிச பாஜக மோடி அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கண்டித்து இன்று 04/10/2021  ஐக்கிய விவசாயிகள் முன்னணி விடுத்த அழைப்பின் பேரில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஜனநாயக சக்திகளும் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி அரசிடம் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி! கடந்த 10 மாதங்களாக அமைதியான முறையில் டெல்லியில் கடும் வெயில் ,பனி,மழை பாராது போராடக்கூடிய விவசாயிகளை மதிக்காமல் அவர்கள் மீது வெறுப்பை காட்டி வருகிறது.

மேலும் மத்திய இணை உள்துறை அமைச்சர் மகன் விவசாயிகள் போராட்டத்தில் கார் விபத்தை ஏற்படுத்தி விவசாயிகளை படுகொலை செய்துள்ளான்.

(1) உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அவரது மகன் ஆபீஸ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்!

(2) அமைச்சர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும்!

(3)விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தோழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!

போராட்ட படங்கள்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here