மோடி அரசின் வரிக்கொள்ளையை கண்டித்து
மே 2 ஒரு நாள் பெட்ரோல் பங்க் புறக்கணிப்பு!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் ! ஆதரிப்பீர் பங்கு பெறுவீர்!
உழைக்கும் மக்களே ! பொறுத்தது போதும்! எதிர்ப்பை பதிவு செய்வோம்!

ஒன்றிய அரசே!
பெட்ரோல் விலை ரூ.50 கேஸ் விலை ரூ.450 வழங்கு!
அம்பானி அதானிகளுக்கு வழங்கும் பல லட்சம் கோடி வரிச்சலுகையை ரத்து செய்!
பெட்ரோல் டீசல் மூலம் வசூலித்த ரூபாய் 26 லட்சம் கோடி வரிப்பணத்தை திருப்பிக்கொடு!

அன்பார்ந்த பொது மக்களே!

உழைக்கும் மக்களைக் கொள்ளையடித்து அம்பானி அதானிகளின் குடும்பங்களுக்கு வாரியிறைக்கும் பாசிச மோடி அரசு ஒழிய வேண்டும். சமையல் கேஸ் விலை உயர்வில் உலகில் இந்தியா முதலிடம்ரூ 1000 மேல் விற்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இந்தியா மூன்றாவது இடம் ரூ.100 மேல் உள்ளது. ஐந்து மாநில தேர்தலுக்காக 4 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த பெட்ரோல் விலை உயர்வு தேர்தல் முடிவு வந்தவுடன் தனது வழிப்பறியை தொடங்கிவிட்டது இன்று பெட்ரோல் விலை மும்பையில் ரூபாய் 120, கொல்கத்தாவில் ரூபாய் 115 சென்னையில் ரூபாய் 110. .கடந்த மார்ச் 9 ஆம் தேதி கச்சா எண்ணெய் 128 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட போதும் தேர்தலுக்காக விலையேற்றாமல் இருந்த மோடி அரசு இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் தினம்தோறும் விலையை ஏற்றி கொள்ளை அடிக்கிறது. இந்த எட்டு ஆண்டுகால மோடி ஆட்சி பெட்ரோல் டீசலில் மட்டும் 26 லட்சம் கோடி வரியாகச் சுரண்டி இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.50 மட்டுமே மீதி 60 ரூ ஒன்றிய மாநில அரசுகளின் வரி. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட போதும் பெட்ரோல் விலை உயர்வை பற்றி பேச மோடி அரசு அனுமதிக்கவில்லை.

ரூ 450-க்கு விற்ற சமையல் எரிவாயு மானிய விலை இன்று 1050 ஆக உயர்ந்து ஏழை-எளிய குடும்பங்களின் கழுத்தை நெரிக்கிறது. அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக கடலை எண்ணெய், பாமாயில், உணவு தானியங்கள் பருப்பு என எல்லா அத்தியாவசிய பண்டங்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. தொடர்ச்சியான ரசாயன உரங்களின் விலை ஏற்றம் விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கிறது. பெட்ரோல் டீசல், கேஸ் போன்றவற்றின் விலை உயர்வின் தொடர் விளைவுகள் நாம் அறியாததல்ல. போக்குவரத்து காய்கறி, உணவு பண்டங்கள் என அனைத்து பொருட்களும் விலையேறுகின்றன. வேலையின்மையும், வருவாய் வீழ்ச்சியும் அதிகரித்து வரும் நிலையில் இந்த விலையேற்றம் கோடிக்கணக்கான குடும்பங்களை வறுமையில் தள்ளி வருகிறது.

விலை ஏற்றம் தவிர்க்க முடியாததா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம், அந்நியச்செலாவணி ஏற்ற இறக்கம், உக்ரைன் போர் என கலர் கலராக ரீல் விடுகிறது மோடி கும்பல். பெட்ரோல் மீது போடப்படும் அநியாய வரி தான், விலை உயர்வுக்கு அடிப்படையான காரணம். இந்த வரி இல்லாவிடில் இப்போதும் லிட்டர் 50 ரூபாய்க்கு கொடுக்க முடியும். வரி போடாமல் எப்படி ஆட்சி நடத்துவது என கேட்கலாம். ஆம் வரி அவசியம் தான். ஆனால் யாருக்கு வரி போடுவது எவ்வளவு போடுவது என்பதுதான் கேள்வி.

அதிக வருமானம் உள்ளவர்களுக்கு அதிக வரியும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு குறைந்த வரி அல்லது வரி விலக்கு என்பது தான் முதலாளித்துவ உலக நடைமுறை. அதேபோல் நேர்முக வரி அதிகமாகவும் மறைமுக வரி குறைவாகவும் இருப்பதுமே பொதுவானது. ஆனால் பாசிச மோடி அரசின் நடைமுறை இதற்கு எதிரானது. ஏழை எளிய மக்களை கசக்கிப் பிழிந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி கொடுப்பது என்ற மக்கள் விரோத முறையே அது. இந்தியாவில் 166 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து சுமார் 57 லட்சம் கோடி. இத்தகைய பணக்காரர்கள் மீது போடப்பட்ட ஒரு சதவீத சொத்து வரியை மோடி அரசு 2017ல் நீக்கியது. இந்தியாவின் பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்ட இந்த சலுகை மூலம் வருவாய் இழப்பு மிகக்குறைவாக ஆண்டுக்குப் பத்து லட்சம் கோடி. 2019 இல் கார்ப்பரேட் வரி 8 சதவீதம் குறைத்தது இது தவிர குறைந்த வட்டிக்கு கடன் மற்றும் கடன் தள்ளுபடி என கணக்கின்றி கார்ப்பரேட்டுகளுக்கு வாரி கொடுக்கிறது மோடி அரசு. இந்த எட்டு ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் 57 சதம் உயர்ந்திருக்கிறது. அவர்களின் சொத்து நாளொன்றுக்கு 2,200 கோடி என்ற வேகத்தில் உயர்ந்து வருகின்றது.

ஆனால் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் கடன் கடந்த ஆண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறது. சாதாரண குடும்பங்களின் கடனும் அதிகரித்திருப்பதை மோடி அரசின் புள்ளி விவரங்களே அம்பலப்படுத்துகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளை மேலும் மேலும் கொழுக்க வைக்கும் வகையில் பொது சொத்துக்களான ரயில்வே ஏர் இந்தியா போன்ற ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கிறது மோடி அரசு.

தொண்ணூறு சத இந்திய மக்களின் வாழ்வை நாசமாக்கும் மோடி தலைமையிலான காவி பாசிஸ்டுகள் தேசபக்தி, தேச பாதுகாப்பு,தேச வளர்ச்சி, தேச ஒற்றுமை என பசப்புகிறது. ஹிஜாப், லவ் ஜிகாத், மாட்டுக்கறி என இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறது. மக்களின் அடிப்படையான பிரச்சினைகளிலிருந்து நாட்டு மக்களை தொலைக்காட்சி ஊடகங்களை புதிய காவி பாசிச நடவடிக்கைகளை் மூலம் திசை திருப்புகிறது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி என அமித்ஷா அறிவிக்கிறார். தமிழக ஆளுநர் ரவி மாநிலங்களின் வளர்ச்சி நல்லதல்ல என தமிழகத்தின் வளர்ச்சி பற்றி விஷத்தை கக்குகிறார். தமிழக கவர்னர் மாளிகை ஆர்.எஸ்.எஸ். கிளையாக மாற்றம் செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார். கார்ப்பரேட் முதலாளிகள் இந்துமதவெறி காவி கும்பலின் இந்த கிரிமினல் கூட்டணிதான் இந்திய மக்களின் முதன்மையான எதிரி. இந்த அபாயத்தை முறியடிக்க காவி கும்பலை அதிகாரத்திலிருந்து வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள்வோம். ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க மக்கள் விரோதக் கும்பலைத் தமிழகத்திலிருந்து துடைத்தெறிவோம்.

பொது மக்களே! பாசிச மோடி அரசுக்கு நமது எதிர்ப்பை பதிவு செய்ய மே 2 அன்று ஒரு நாள் மட்டும் பெட்ரோல் பங்க் செல்லாதீர்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு 9597138959

1 COMMENT

  1. பெட்ரோலும் வேண்டாம் !

    மோடியும் வேண்டாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here