ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பியின் கைப்பாவையாகவும்
ஏவல்துறையாகவும் செயல்படும் NIA ,CBI ,EP ஆகியவை கண்டித்து PFI தலைமையில் SDPI கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் இணைந்து ஆம்பூரில் சாலை மறியல்…

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவை அம்பலப்படுத்தியும் அவற்றின் செயல்பாடுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிராகவும் அஞ்சாலும் தொடர்ந்து களத்தில் இருக்கும் SDPI மற்றும் PFI அமைப்புகளை முடக்குவது, அச்சுறுத்துவது, களங்கத்தை ஏற்படுத்துவது என்ற நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ க வின் கைப்பாவையாகவும் ஏவல்துறையாகவும் செயல்படும் NIA, CBI, EP ஆகிய மூலம் கடந்த தினங்களில் இந்தியாவிலுள்ள 13 மாநிலங்களில் PFI அமைப்பின் தேசிய, மாநில, மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகளின் வீடுகளில் (இரவில் )சென்று சோதனை என்ற பெயரில் அராஜகமாக அத்துமீறி நடந்து கொண்டதை கண்டித்தும்
எந்த ஒரு ஆதாரமும் இன்றி PFI தேசிய தலைவர், மாநில மாவட்ட நிர்வாகிகள் என
100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது கண்டித்தும்… PFI அமைப்பின் தலைமையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைப்பெற்றது..

அதன் ஒருபகுதியாக நேற்று PFI தலைமையில் மாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் OAR SIGNAL நான்கு முனை சந்திப்பில் சென்னை to பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதில் SDPI மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்..சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசாரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு இரவு விடுவித்தனர்..

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பலே.. ஒன்றைறொன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்.. இது போன்ற நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும்
நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்… பின்வாங்க மாட்டோம்…
நீ ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க நெரிக்க அது இன்னும் வீரியமாகவே எழும்பும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்..

கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம்! வீழ்த்த ஒன்றுபடுவோம்!
தமிழகத்தை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலின் கல்லறையாக்குவோம்!

தகவல்:
தோழர் கார்த்திக்
மாவட்ட செயலாளர்
திருப்பத்தூர் மாவட்டம்
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு:8682873857

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here