தொடரும் ஆலைச்சாவுகள்
கடந்த 7 நாட்களில் இரண்டாவது ஆலைவிபத்து. கடந்த வாரம் குஜராத்தின் ரசாயன ஆலையில் நடந்த ஆலை விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியானர்கள். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் நிலை என்னவென்று இஅதுவரை தெரியவில்லை.
இன்று ஆந்திராவில் உள்ள ராசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். 13 பேர் காயமடைந்துள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.
ஆந்திர மாநிலம் எலூர் மவட்டத்தில் உள்ள போரஸ் லேப்ரட்டரிஸ் என்ற பெயரில் இராசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவுப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இரவு 11.30 மணியளவில் ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பெரும்பாலான ஆலைகளில் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளின் பாதுகாப்பை ஆலை முதலாளிகள் கவனத்தில் கொள்வதில்லை. பலர் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு ஆலையை விட்டு துரத்தப்படுகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள ஆலைகளில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பயிற்சி தொழிலாளிகளே. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கூட யாரும் கண்டு கொள்வதில்லை. விபத்து பெரிய அளவில நடந்தால் மட்டுமே செய்திகள் வெளியே வருகிறது. தினம் தினம் ஆலை சாவுகள் நடந்த வண்ணம் உள்ளது. ஆனால் முதலாளிகள் எக்காரணம் கொண்டும் உற்பத்தியை நிறுத்துவதில்லை. ஆலை சாவுகளுக்கு எந்த முதலாளியும் பொறுப்பேற்பதும் கிடையாது. அவர்க்ளை தண்டிக்க ஆளும் அரசுகளுக்கு துப்பில்லை. முதலாளிகளால் உருவாக்கப்பட்ட அரசு அவர்களை எப்படி தண்டிக்கும்?
போபால் விசவாயு கசிவு முதலாளித்துவ படுகொலைக்கு மிகப் பெரிய உதாரணம். 1984-ல் நடந்த விசவாயு கசிவால் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பலர் பார்வையிழந்தனர். பல தலைமுறை கடந்தும் இன்றும் பிறக்கக்கூடிய குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றன. இப்பேற்பட்ட படுகொலைக்கு யூனியன் கார்பைட் நிறுவன முதலாளி ஆண்டர்சனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை 1 லட்சம் ரூபாய் அபராதம். அவ்வளவு தான் முதலாளிக்கு எதிரான நடவடிக்கைகள்.
இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கொடுத்தால் போதுமா? ஆலைப்படுகொலைகளை தடுக்க இந்த அரசிடம் எந்த வழியுமில்லை.
முதலாளித்துவம் தனது லாபவெறிக்காக தினம் தினம் ஆலைப்படுகொலைகளை நடத்தி வருகிறது. லாபத்திற்கான இந்த உற்பத்தி முறை தொடரும் வரை இது நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கும். தொழிலாளி வர்க்கம் இதை உணர்ந்து சாதி, மத, இன வேற்றுமைகளை கடந்து ஒன்றிணைந்து போராடமல் லாப வெறிப்பிடித்த முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது.
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்