
ஒன்றிய மோடி அரசே!
கல்வியை கார்ப்பரேட் – காவிமயமாக்கும், மாநில உரிமைகளை பறிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்ப பெறு!
மாணவர்களே, பேராசிரியர்களே!
- கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப் போராடுவோம்!
- கல்வியை கார்ப்பரேட் – காவிமயமாக்கும் பாசிச மோடி அரசின் சதித்தனத்தை முறியடிப்போம்!
பாசிச மோடி அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 யை தொடர்ந்து அமுல்படுத்தி வருகின்றது. அதனை அமுல்படுத்தாத மாநிலங்களுக்குக் கல்வி நிதியை தரமறுப்பது, ஆளுநர்கள் மூலம் தொடர்ந்து மாநில அரசுக்கு இடையூறு ஏற்ப்படுத்துவது என்ற முறையில் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தற்போது பல்கலைகழக மானியக் குழு வெளியிட்டுள்ள “Minimum Qualifications for Appointment & Promotion of Teachers and Academic Staff in Universities and Colleges and Measures for Maintenance of Standards in Higher Education வரைவு விதிகள் 2025” ஆளுநர்களே பல்கழைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்குகிறது. குறிப்பாக, துணை வேந்தர்களாக நியமிக்கப்பட ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றி கல்விக்கு எந்த சம்மந்தமும் இல்லாத நபர்களையும் துணை வேந்தராக நியமிக்கலாம் என்று மாற்றியுள்ளது. ஏற்கனவே ஒன்றிய இணை செயலாளர்களாக கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களை நியமித்து அரசு கார்ப்பரேட்மயமாக்கியது போலவே கல்வி நிலையங்களை இந்த புதிய விதிகள் கார்ப்பரேட்மயமாக்கும். அதே போல், கல்வித் துறைக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நபர்களை நியமிக்கலாம் என்று விதியை திருத்துவதன் மூலம் அர்ஜுன் சம்பத் போன்ற முட்டாள் சங்கிகள் கூட துணை வேந்தராக நியமிக்கப்படலாம். துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மாநில உரிமைகளை பறிக்கும் வேலையையும் செய்கிறது. இதன் மூலம் கல்வித் துறையை கார்ப்பரேட் – காவிமயமாக்குவதே மோடி அரசின் சதித்திட்டம்.
இன்னொரு புறம், இதுவரை பேராசிரியர் பணி நியமனத்தில் SC, ST, OBC ஆகிய பிரிவுகளுக்கு கொடுக்கப்பட்ட விதி தளர்வுகளை மாற்றுத்திறனாளிகளுடன் சேர்த்து EWS பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கலாம் என விதிகளை திருத்துவதன் மூலம் பார்ப்பன மேல் சாதியினர் கூடாரமாக மாற்ற முயல்கிறது பாசிச மோடி அரசு. ஒப்பந்த பேராசிரியர் நியமனங்களை அதிகரிக்கும் வகையிலும் விதிகளை திருத்தம் செய்ய முன்வைத்துள்ளதன் மூலம் பேராசிரியர் பணி பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.
மொத்தத்தில், ஒன்றிய மோடி அரசின் UGC முன்வைத்துள்ள இந்த புதிய வரைவு விதிகள் முழுக்க இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிரானது. இந்த வரைவு விதிகள் ஒட்டுமொத்த இந்திய கல்விப் புலத்திற்கே அபாயகரமானது.
எனவே UGC யின் இந்த வரைவு விதிகளை எதிர்த்து பெரும்பான்மை மக்களின் கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வரவும் மாணவர்களின் கல்வியை பறிக்கும் தேசிய கல்விக்கொள்கை 2020 யை தூக்கியெறியவும் போராட்டங்களைக் கட்டியமைப்போம்! என எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) அறைகூவி அழைக்கின்றது.
இவண்;
ச.அன்பு,
மாநில பொதுச் செயாளர்,
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு- 9500792976.