அன்பார்ந்த பொதுமக்களே..!

தூத்துக்குடியை நாசப்படுத்திவந்த ஸ்டெர்லைட் ஆலையை  மக்களின் 25 ஆண்டுகால தொடர் போராட்டமும், 15 பேரின் உயிர்த்தியாகமும் மூடவைத்தது.

மீண்டும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரில் புறவாசல் வழியாக தூத்துக்குடியில் நுழைந்துள்ளது. ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் இயங்குவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இப்போது கொரானோ தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை மேலும் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் சாதகமாக பயன்படுத்தி தூத்துக்குடியிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட்டை திறக்கும் நயவஞ்சக செயலில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஸ்டெர்லைட்டின் இச்செயல் தமிழக அரசின் கொள்கை முடிவிற்கும், தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் “ஸ்டெர்லைட் ஒருபோதும் திறக்கப்படாது” என்ற வாக்குறுதிக்கும் எதிரானது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு, பொதுஅமைதி சீர்குலையும் அபாயம் உள்ளது.

எனவே,

  1. எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை ஜூலை 31-க்கு பிறகு நீட்டிக்க அனுமதிக்க கூடாது!

2. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும்!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (19-07-2021) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கட்சிகளையும் மேற்கண்ட கோரிக்கைகளை ஆதரித்து தமிழக முதல்வரை வலியுறுத்துமாறு கோருகிறோம்.

வரலாற்றுக் கடமையின் தொடர்ச்சியை ஆற்ற நாளை 19-07-21 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு பெருந்திரளாக கலந்துகொள்வோம். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம்.

வழக்கறிஞர்.வாஞ்சி நாதன்; வழக்கறிஞர்.ஹரிராகவன்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும்
ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு – தூத்துக்குடி
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here