திருச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

மக்கள் அதிகாரம் சார்பாக மாநில வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் 12.09.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. தலைமை குழு உறுப்பினர் தோழர் செழியன் தலைமை தாங்கினார். அதில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்ட வரலாறு மற்றும் செப்டம்பர் 27 அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றி மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் விளக்கிப் பேசினார். போராட்டத்தை நடைமுறைப்படுத்துவதும். மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவது பற்றி தலைமைக்குழு உறுப்பினர் மருது விளக்கிப் பேசினார். இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ நடந்து முடிந்த போராட்டங்களின் செயல்பாடுகளை தொகுத்து சிறப்புரையாற்றினார். வந்திருந்த தோழர்களும் போராட்டத்தை வீச்சாக கொண்டு செல்வதாக கூறி உணர்வுடன் கலந்து கொண்டனர்.

♦♦♦

நெல்லிக்குப்பம் பகுதியில் பிரச்சாரம்

பாசிச பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 27 நாடுதழுவிய பந்த். விவசாயிகள் அறைகூவல், அனைவரும் ஆதரிப்போம் பங்கேற்போம் ஒன்றிய அரசே! மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறு விவசாயிகளின் விளை பொருளுக்கு ஆதார விலையை சட்டமாக்கு! என்ற முழக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக நாடு தழுவிய பந்த் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம் அந்த வகையில் கடலூர் மாவட்ட பகுதி சார்பாக நெல்லிக்குப்பம் பகுதியில் கடைவீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

தோழர். பாலு
மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம்
8110815963

♦♦♦

விருதையில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்!

விருத்தாசலம் வட்டார மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று (18/09/2021) காந்திநகர் பகுதியில் வீடுகள் தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. டெல்லி விவசாயிகள் போராட்டம் என்பது நாம் அனைவருடைய உணவு உரிமைக்கான போராட்டம் ஆகும்.

பாசிச மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் 9-மாதம் மேலாக விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியப்படுத்தி வருகிறது.

இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இது ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானமாகும். அந்த வகையில் வருகின்ற செப் 27ல் நடக்கவிருக்கும் அகில இந்திய பந்தில் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தகவல்:

தோழர்.மணிவாசகம்
(வட்டார ஒருங்கிணைப்பாளர்),
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்,
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு:
88703 81056

♦♦♦

கடலூரில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்!

கடலூர் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று (18/09/2021) பெரிய கங்கனாகுப்பம், உச்சிமேடு பகுதியில் வீடுகள் தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. டெல்லி விவசாயிகள் போராட்டம் என்பது நாம் அனைவருடைய உணவு உரிமைக்கான போராட்டம் ஆகும். பாசிச மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் 9-மாதம் மேலாக விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியப்படுத்தி வருகிறது.

இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இது ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானமாகும். அந்த வகையில் வருகின்ற செப் 27ல் நடக்கவிருக்கும் அகில இந்திய பந்தில் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தகவல்:
தோழர் பாலு
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு: 81108 15963

♦♦♦

திருவண்ணாமலை மாவட்டம்

19-09-2021 ஏந்தல் கிராமத்தில் வருகின்ற 27-09-2021அன்று டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

தகவல்:
தோழர்.பார்த்திபன்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

♦♦♦

புவனகிரியில் மக்கள் அதிகாரம் கடைவீதி பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,புவனகிரி வட்டாரம் மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (22/09/2021) புவனகிரி கடைவீதியில் வணிகர்கள் மற்றும் பொது மக்களிடம் டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர் தோழர் ஷவுகத்,(தமுமுக) தோழர் செங்குட்டுவன்,(விசிக)போன்ற ஜனநாயக அமைப்புகளள சார்ந்தவர்கள் நேரில் தோழர்களை சந்தித்து பிரச்சாரத்திற்கு வாழ்த்து தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்வதாக கூறினர். மக்கள் அதிகாரம் சார்பாக கொடுக்கப்பட்ட பாரத் பந்த் ஸ்டிக்கரை புவனகிரி ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோக்களில் ஒட்டிக் கொண்டனர்.

தகவல்:
தோழர் பாலு மகேந்திரன்,
(வட்டார ஒருங்கிணைப்பாளர்) புவனகிரி,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு:
94447 50638
தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here