நாடுமுழுவதும் செப்டம்பர்27 அன்று முழு அடைப்பு அடைப்பு நடைபெற உள்ளதையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் மறியல் போராட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு முடிவெடுத்துள்ளது.

தஞ்சாவூரில் 04-09-2021அன்று மாநில ஒருங்கிணைப்பபு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்கூட்டத்தில் மாநில மாவட்டக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செப்டம்பர் 27 நடைபெற இருக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை தமிழ் நாட்டில் வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் வாய்ப்புள்ள இடங்களில் இரயில், பேருந்து மறியல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அனைத்து கட்சிகள் இயக்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று வேண்டடுகோள் விடுக்கப்பட்டது.

அன்று (04-09-2021) மாலை5 மணிக்கு தஞ்சாவூர் இரயில் நிலையம் எதிரில் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விவசாயி சுசில் காஜல்லை படுகொலை செய்த ஹரியானா பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு தலைமை வகித்த மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். கே.பாலகிருஷ்ணன் “ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அவர் மீது நீதி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், கொலை செய்யப்பட்ட விவசாயின் குடும்பத்தாருக்கு 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வருகிற இருபத்தி ஏழாம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய முழுஅடைப்பை மக்கள் வெற்றியடைய செய்யவேண்டும் ” என்றார்.

ஆர்பாட்டத்தில்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ ) மாநிலத் தலைவர் எஸ். குணசேகரன்,
மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வே. துரை மாணிக்கம்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐஎம் )மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்,
துணைப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன்,
மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மற்றும் அருள் தமிழ்நாடு உழவர் இயக்கம் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிவகங்கைகுணசேகரன், தற்சார்பு இயக்கம் ஈரோடு பொன்னையன் AITUC மாவட்ட துணைச் செயலாளர்துரை மதிவாணன்,
தஞ்சை மாவட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்டு பல்வேறு இயக்க நிர்வாகிகள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இருவரும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியும், மோடி அரசையும், ஹரியாணா பாஜக அரசையும் கண்டித்தும், வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

05-09-2021

முக நூல் பக்கம்:
இராவணன். தஞ்சை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here