பத்திரிக்கை செய்தி :

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா மாரனேரி கிராமத்தில் உள்ள அய்யனார் ஏரி சுமார் 195 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த அய்யனார் ஏரியில் 75 ஏக்கர் நீர் தேக்க பரப்பளவு கொண்ட பகுதியாகும். கல்லணை கால்வாய் வெட்டியதிலிருந்து கடந்த 80 வருடங்களாக நீர்ப்பரப்பு பகுதியை தவிர 120 ஏக்கரில் மாரனேரி கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் 60 ஏக்கருக்கு பட்டா அரசு கொடுத்துள்ளது. 60 ஏக்கருக்கு பட்டா இல்லாமல் கூலி ஏழை விவசாயிகள் 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். தனிப்பட்ட ஒருவரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேற்கூறிய 120 ஏக்கர் நிலங்களும் ஏரிக்கு சொந்தமானது என்றும் இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கக் கூடிய 120 ஏக்கரும் முறைகேடான முறையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று சென்ற ஆண்டு வழக்கு தொடுத்துள்ளார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை விவசாயம் செய்யப்படுகிறதா? இல்லையா? என்பதை பார்க்காமல் பொதுவான தீர்ப்பாக 120 ஏக்கரும் ஏரியின் ஆக்கிரமிப்பு என்றும் ஏரியின் ஆக்கிரமிப்பை 31.07.2021 அன்று அகற்ற வேண்டும் என்றே தீர்ப்பும் வழங்கியுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஏரியை பொதுப்பணித்துறையும் தூர்வாரவில்லை. ஆகவே இந்த தீர்ப்பை எதிர்த்து ஒருபுறம் சட்டரீதியாக எதிர்கொண்டாலும் மறுபுறம் மக்கள் போராட்டத்தின் மூலமே இவற்றுக்கு முடிவுகட்ட முடியும் என்று 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலங்களை அரசு விவசாயிகளிடம் விவசாயம் செய்வதற்கு கொடுக்க வேண்டும் என்பதே அங்குள்ள கூலி ஏழை விவசாயிகளின் கருத்தாகும். 30 ஆண்டுகளாக ஏரியை தூர்வாராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிக நீரை சேமிக்க தரிசாகக் கிடக்கும் நீர் பரப்பளவு பகுதியில் உள்ள 36 ஏக்கர் நிலங்களை ஆழப்படுத்தி விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்ற அடிப்படையில் 26.07 2021 காலை 10 மணிக்கு பூதலூர் நால்ரோடு இடத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயிகள் செய்கிறார்கள். விவசாயிகலுடன் கரம் கோர்த்து விவசாய சங்கங்கள், ஜனநாயக சக்திகள் கண்டன உரை நடத்த இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

.இவண்:
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு, மாரனேரி.
தொடர்புக்கு: 9626210072

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here