“உலகளாவிய இந்துத்துவா பரவலை அகற்றுவது”
கருத்தரங்கின் மீதான தாக்குதல்களுக்கு 700 கல்வியாளர்கள் கண்டனம்.
உலகெங்கிலும் உள்ள முற்போக்கு அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து. இந்துத்துவாவின் நம்பிக்கைகள் அதன் செயல்பாடுகள், பாலியல் அரசியல், சாதி, மதவெறி, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கம் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக செப்டம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கருத்தரங்கம் ஹார்வார்டு, ஸ்டான்போர்ட், கார்நெல் மற்றும் பிரண்ட்ஸ் டேன் உட்பட 49 க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களின் 70 துறைகளால் ஸ்பான்சர் செய்யப்பட்டது. இந்த ஆன்லைன் கருத்தரங்கில் பல இந்திய கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ (லிபரேஷன்) குழுவை சேர்ந்த கவிதா கிருஷ்ணன், திரைப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன், கவிஞர் மீனா கந்தசாமி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆய்ஷா கீத்வாய், டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் மற்றும் சமூகவியலாளர் நந்தினி சுந்தர் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
உலக அளவில் தனது ’இல்லாத மானம்’ பறி போவதை கண்டு அலறும் அமெரிக்க அக்கிரகாரத்து அம்பிகள். இந்த கருத்தரங்கம் நடக்க இருப்பதை கண்டித்து வட அமெரிக்கவில் உள்ள COHNA உள்ளிட்ட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதி இந்துக்களின் கூட்டமைப்பைச் சார்ந்த சங்கிகள் பொங்கி வருகின்றனர். இந்த கருத்தரங்கம் அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர் மற்றும் கணிதவியலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் ஓஹியோ மாநிலத்தின் செனட்டர் நிராஜ் அந்தனி உட்பட பல பார்ப்பன – இந்துமத குழுக்கள் மற்றும் தனி நபர்களால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் பல நாடுகளில் குடியேறிய இந்தியாவின் அக்கிரகாரத்து பார்ப்பனர்கள் பல ஆண்டுகள்ளக கனவுகண்டு கொண்டிருந்த ’இந்து ராஷ்டிரா’ என்கிற பார்ப்பன சாம்ராஜ்ஜியம் அமையப்போவது குறித்து குதூகலத்தில் உள்ள இந்த ’அமெரிக்க குடியேறி நாட்டுப்பற்றாளர்கள்’ இந்து மதத்தை கேவலமாக விமர்சிப்பவர்களின் செயல்தான் இந்த கருத்தரங்கம் என்று தனது பூணூலை உருவிக் கொண்டு கிளம்பி விட்டனர், பார்ப்பனப் பொறுக்கிகளின் காலித் தனங்கள், சாதி அடக்குமுறைகள், அதிகார வெறித்தனம் உள்ளிட்ட பலவும் அம்பலமாகி நாறி வரும் போது புதிதாக இதனை கேவலப்படுத்த ஒன்றுமில்லை என்பதே உண்மை.
இந்த கும்பலை சேர்ந்த அந்தனி என்பவர் “இந்த கருத்தரங்கு அமெரிக்க முழுவதும் இந்துக்கள் மீதான கேவலமான தாக்குதலை பிரதிபலிக்கிறது. இதை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்துக்களுக்கு எதிரான இனவெறி மற்றும் மதவெறி கருத்துக்கு எதிராக நான் எப்போதும் வலுவாக இருப்பேன்” என்கிறார்.
முன்னாள் இன்போஸிஸ் இயக்குநர் டிவி மோகன்தாஸ் பய் தனது டிவிட்டர் பக்கத்தில் ”இந்த கருத்தரங்கின் அமைப்பாளர் யார் என்பது குறித்து தகவல் இல்லை. பேச்சாளர்களில் சிலர் சந்தேகத்திற்கு உரியவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு யார் யார்ரெல்லாம் நிதி உதவி அளிக்கின்றனர் என்ற தகவல் இல்லை. இந்து வெறுப்பை தூண்டும் அறிவார்ந்த செயல்பாடாக கருதப்படுகிறது. இந்த கருத்தை உற்று நோக்கினால் ஆர் எஸ் எஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு எதிரானதாக உள்ளது.“ என்று ஜன்னி கண்டவனை போல பிதற்றுகிறார்.
“மேலும் ஆர் எஸ் எஸ் பணியாளர்களை வேரோடு பிடுங்கும் நடவடிக்கையாக உள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறைக்கான வெளிப்படையாக அல்லது மறைமுக அழைப்பாக உள்ளது. கடந்த காலங்களில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பால் இந்துக்களை அடிமைப்படுத்தினார்கள். இனப்படுகொலை செய்தார்கள்“ என தனது பார்ப்பன மதவெறிக் கருத்துக்களை அள்ளி வீசுகிறார்.
அபிஷேக் பானர்ஜி கூறுகையில், “உலகளாவிய அளவில் இந்துத்துவாவை எவ்வாறு வீழ்த்துவது என்ற நோக்கத்தோடு நடத்தப்படும் இந்த கருத்தரங்கு இந்துக்களை மனிதாபிமானம் அற்றவர்களாக மாற்றுகிறது” என பொய்ப்பிரச்சாரத்தைப் பரப்புகிறார்.
மேலும், கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பல்கலைக் கழகங்கள், முற்போக்கு சக்திகளிடமும், அதன் ஆதரவாளர்களிடமும் தங்களை விலக்கிக் கொள்ளுமாறு அன்புடன் மிரட்டியுள்ளனர்.. ஏனென்றால் இந்த கருத்தரங்கு இந்துக்களை தீவிரவாதத்தின் பக்கம் தூண்டுவதாக உள்ளது என பொய்யாக விமர்சிக்கிறது. மிகவும் கவலைக்குரிய வகையில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை இந்துத்துவா என முத்திரை குத்துகிறது என பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்த பாசிச கோயாபல்ஸ் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம் என்ன என்பது பற்றி 700 பேர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை நிகழ்ச்சிக் குழு தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில், ”இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் இந்து மேலாதிக்கத்திற்கு முடிவு கட்டுவது. இந்துத்துவா சித்தாந்தம் என்பது வரலாற்று ரீதியாக, நாஜி ஜெர்மனி மற்றும் இத்தாலியைச் சார்ந்த முசோலினியின் பாசிச கொள்கைகளால் உத்வேகம் பெற்ற சர்வாதிகார அரசியல் சித்தாந்தம் என மதிப்பிடப்படுகிறது. மேலும், மதச்சார்பற்ற இந்தியாவை இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் அனைவரையும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி ஒரே தேசமாக, ஏக இந்தியாவாக மாற்ற விரும்புகிறது.
இந்துத்துவா சித்தாந்தத்தின் பெயரால் தற்போதைய இந்திய அரசாங்கம் மாட்டிறைச்சிக்கு தடை, மத மாற்றம் மற்றும் மதங்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு தடை போன்ற பாகுபாடான கொள்கைகளை நிறுவியுள்ளது. மேலும், இந்தியாவில் குடியுரிமை சட்டங்களின் மூலம் மதப் பாகுபாட்டை அறிமுகப்படுத்துகிறது. நாடு முழுவதும் மத மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகள், இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள், கொலை மற்றும் கற்பழிப்புகள், ஒடுக்கப்பட்ட தலித்துகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற ஜனநாயக சக்திகளுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
நரேந்திர மோடி அரசாங்கம் கருத்து வேறுபாடுகளை மூடிமறைப்பதற்கு துன்புறுத்தல்களையும், மிரட்டல்களையும் கருவியாகப் பயன்படுத்துகிறது. டஜன் கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் தற்போது அடக்குமுறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் உரிய செயல் முறை இல்லாமல் காலவரையின்றி சிறையில் வாடுகின்றனர்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள அகாடமி மூலம் இந்துத்துவா வேரூன்றுவதை அனுமதிக்க முடியாது. கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கருத்ததாரங்கு பங்கேற்பாளர்களின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட வேண்டும்“ என தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
மொழிபெயர்ப்பு :வண்ணன்
நன்றி: நியூஸ் கிளிக்.
பார்ப்பன இந்து மதம் இரண்டாயிரம் ஆண்டுகளாக உழைக்கும் மக்களை சாதியின் பெயரால் பிரித்து இழிவு படுத்தி ஒடுக்கி வருகிறது. உலகளாவிய நிதி மூலதனம் இன்று காலனி, அரைக்காலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாடுகளில் உள்ள பிற்போக்கு சக்திகளுடன் கூடிக் கொண்டு தனது கார்ப்பரேட் கொள்ளைக்கு பின் நிலமாகவும், அகண்ட சந்தையாகவும் மாற்றி வருகிறது. 5ஜி அலைக்கற்றை, குவாண்டம் கம்யூட்டிங், போன்ற புதிய தொழில்நுட்பம் எதுவும் இந்த பிற்போக்கு கும்பலிடம் அணுஅளவு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே மேற்கண்ட கருத்தரங்கிற்கான மிரட்டல் நிரூபிக்கிறது. இந்திய உழைக்கும் மக்களின் மீது கார்ப்பரேட்- காவி பாசிசமாக ஒடுக்குமுறை செலுத்த வரும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் அடியாட்படையான ஆர்.எஸ்.எஸ் கும்பலை நாமும் விடக் கூடாது. கண்டனம் தெரிவிப்பதுடன் நில்லாமல் பார்ப்பன மதவெறியர்களின் அரைக்கால் டவுசரை கிழித்து ஓடவைக்கும் வரை விடாமல் போராடுவோம்!