சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சார்ந்த மக்கள் அதிகாரத்தின் தோழர் சரவணன் மீது ஆதிக்க சாதி வெறியுடன் தாக்குதல் நடத்திய பாஜக குண்டர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

 

“கலவரங்கள், தாக்குதல்கள் மூலம் தமிழகத்தில் காலூன்ற எத்தணிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் சதி திட்டங்களை முறியடிப்போம்.”

சிவகங்கை மாவட்டத்தில் சாதி ஆதிக்கம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி பல்வேறு சனநாயக இயக்கங்களுடன் இணைந்து போராடி வந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் வைகை சரவணன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.சனநாயக, உரிமைப் போராளிகள் மீது கோழைத்தனமாக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட காலிகளை கொலைமுயற்சி வழக்கில் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என ம,உ.பா.மையம்,மதுரை கோருகிறது.

காளையார் கோவில் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த தோழர் வைகை சரவணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் தாக்குதலுக்கு தூண்டியதாக சந்தேகப்படும் காளையார் கோவில் காவல் ஆய்வாளர் சரவணன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனில் காவல்துறைக்கு எதிராக சனநாயக அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு -சிவகங்கை மாவட்டம்

மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் வைகை சரவனன் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறி பிடித்த சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்.. இந்த வெறி செயலை வேடிக்கை பார்க்கும்
சிவகங்கை மாவட்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்..
இவண்..
தமிழ்ப்புலிகள் கட்சி
சிவகங்கை மாவட்டம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here