அன்பார்ந்த வாசகர்களே.
மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
இது நாங்கள் எதிர்பார்த்தது தான். எமது முகநூல் பக்கம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் விதிகளை மீறிவிட்டதாக எமக்கு தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதாக நம்பிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான முகநூல் வாசகர்கள் தான் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஃபேஸ்புக் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்மின் களாக செயல்படும் நபர்கள், இந்தியாவைப் பொருத்தவரை பார்ப்பனக் கும்பலும் பிற மேல் சாதியினரும் தான். முக்கிய பொறுப்புகளில் இவர்கள்தான் அங்கம் வகிக்கின்றனர் என்பதால் சாதி ஆதிக்கம் குறித்தோ, பார்ப்பன மதவெறி குறித்தோ எழுதுவதோ, பேசுவதோ (அவாள்களுக்கு)அவர்களுக்கு பிடித்தமானது இல்லை. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்று நம்பும் மூடர்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் வகையில் ஃபேஸ்புக் என்ற கார்ப்பரேட் நிறுவன ஜனநாயகத்தின் யோக்கியதையை எதிர்த்து போராட வாசகர்களை அழைக்கிறோம்.
கடைசியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவரான ஆட்டுக்குட்டி அண்ணாமலை கோவில்களை வைத்து அரசியல் செய்த இழி செயலை கண்டித்து எமது முகநூல் பக்கத்தில் வெளியான செய்தி பரவலான கோபத்தில் எமது முகநூல் பக்கத்தை முடக்கி உள்ளனர் என்பதை நாங்கள் அறிகிறோம்.
இந்த சலசலப்புகளுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. எனினும் வாசகர்களின் உதவியில்லாமல் மக்கள் அதிகாரம் ஊடகம் மட்டுமே போராடி வெற்றி பெற முடியாது என்பதால் உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள் ஆயிரக்கணக்கான வாசகர்கள் என்ற நிலையை தாண்டி, லட்சக்கணக்கானவர்கள் மத்தியில் செய்தியை கொண்டு சென்று எதிர்ப்பு அலையை உருவாக்குங்கள் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்!

நன்றி!


ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here