ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
இந்தியாவில் தற்போது நடைமுறையில் பேசப்படுகின்ற பல்வேறு மொழிகள் மத்தியில் தமிழ் மொழிக்கு பல நூற்றாண்டு கால வரலாறு உள்ளது.
தமிழ் மொழியை பேசுகின்ற மக்கள் உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்கள் தற்போது கீழடி மற்றும் கொடுமணல் ஆகியவற்றில் கிடைத்துள்ள சான்றுகள் நிரூபித்து வருகிறது.
இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுதுவதற்கான அனைத்து தேவையும் கீழடியில் ஆய்வில் நமக்கு கிடைத்துள்ளது.
திராவிட மொழிகளில் முதன்மை மொழி என்பது மட்டுமின்றி, பல்வேறு இலக்கிய வளங்கள் சொற்கள், இலக்கணங்கள் மற்றும் உயர்ந்த வாழ்வியல் முறை ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் மொழி இன்று சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தியின் ஆதிக்கத்தின் மூலமாக ஒழித்து கட்டப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்து-இந்தி-இந்தியா என்ற அகண்ட பாரத, இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல், பல்வேறு தேசிய இனங்களின் மொழியை நசுக்குவதன் மூலம் அந்த இனத்தை தனது ஒற்றை ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
2023 notice-2 (1)பார்ப்பனர்கள் மற்றும் சொற்ப எண்ணிக்கையிலான மக்கள் சிலர் மட்டும் பயன்படுத்தும் சமஸ்கிருதத்தை, தேவ பாஷை என்ற முறையில் பல்லாயிரம் கோடி செலவு செய்து உயிர்பிப்பதற்கு முயற்சி மேற்கொள்கிறது. அதற்கு ஆரம்பக்கல்வி தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை அனைத்திலும் மானியங்கள் வழங்குவது, தனி பல்கலைக்கழகங்களை உருவாக்குவது என்றெல்லாம் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இத்தகைய சமஸ்கிருத-இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி உயிர் நீத்த வரலாறு
தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு உள்ளது.
நடராசன், தாளமுத்து துவங்கி கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் வரை தமிழ் மொழியின் பெருமைகளையும், மொழி உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஆதிக்கம் புரிவதற்கு கொண்டுவரப்பட்ட இந்தி திணிப்பை எதிர்த்து போராடுவதற்கும் முன்னிலையில் நின்றனர். அதனால் தனது இன்னுயிரையும் ஈகினர்.
இதையும் படியுங்கள்: பார்ப்பன ஆதிக்க மொழி தான் இந்தி!
அந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவது மட்டுமின்றி இந்தியாவை, பார்ப்பன சனாதனத்தின், பார்ப்பன பாசிசத்தின், காவி அடக்கு முறையின் கீழ் கொண்டு வருவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜகவிற்கு எதிராக போராடுகின்ற போர்வாளாக உயர்த்தி பிடிப்போம்.
மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வரலாறை மீண்டும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் பரப்புவோம். சமஸ்கிருத இந்தி திணிப்புக்கு எதிராக எழுச்சியை உருவாக்குவோம்.
பார்ப்பன மற்றும் மேட்டுக்குடி கும்பல் இட ஒதுக்கீடு என்ற பெயரில் மீண்டும் நமது தலைமுறையின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்ற அனைத்து முயற்சிகளையும் முறியடிப்போம்.
கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக போர்ப்பரணி பாடி திருச்சியில் ஒன்று கூடுவோம்.
அனைவரையும் அழைக்கிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
திருச்சி மாவட்டம்.