மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் புறக்கணி! மாநில கல்விக் கொள்கை குழுவை புனரமைத்திடு! 

கருத்தரங்கம்.

 

15-07-2023, சனிக் கிழமை, இடம்; உழைக்கும் மாமன்றம்,
                                   நேரு பார்க் அருகில், சென்னை.


 மாணவர்களே! பெற்றோர்களே! 

    தமிழ் நாட்டிற்கு தனி கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று திமுக அரசு கடந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அறிவித்திருந்தது.   அதன் அடிப்படையில் மாநில கல்விக் கொள்கை குழு உருவாக்கப்பட்டு, அது கல்விக் கொள்கையை வகுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது. இந்தக் குழு,  மாநிலத்திற்கு இதுதான் கல்விக் கொள்கை என்று முடிவு செய்து, அதனை  முன் வைக்கும் முன்பே, திமுக அரசு தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல அம்சங்களை அமல்படுத்தியது.

குறிப்பாக, இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் போன்ற பல திட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தினார்கள். மேலும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்ளலாம் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறுகின்றார்.

இந்த நிலையில் தான், மாநில உயர்நிலைக் கல்விக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த, பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் கடந்த மே மாதம் பதவி விலகினார். அவர் தனது பத்திரிக்கை செய்தியில், “மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு; இரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையில் செயல்படும் தலைமையைக் கொண்டுள்ளதாலும், சில மூத்த IAS அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களாலும், குறிப்பாக முதல்வரின் தனி செயலாளராக இருந்த உதயச்சந்திரன் அவர்களின்  முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல்   தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவாக, மோடி அரசின்   தேசியக் கல்விக்கொள்கை 2020-ன் அம்சங்களை உள்ளடக்கி மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையை நோக்கி இக்குழு சென்று கொண்டிருக்கிறது.” என்று கூறுகின்றார். இந்த செய்தி, தமிழக அரசு கல்விக் கொள்கையில்  இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறதோ? என்ற  சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும் இத்தகைய செயல்பாடுகள் மூலம், மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவின் திட்டங்கள் கேள்விக்குள்ளாகி இருக்கின்றது.   எனவே தற்போது இருக்கின்ற மாநில கல்விக் கொள்கை வரைவுக் குழுவை கலைத்துவிட்டு, ஜனநாயக பூர்வமாகவும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்ட கல்வியாளர்களைக் கொண்டு புனரமைத்து, விரைவாக கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசை தொடர்ந்து வழியுறுத்தி, நமக்கான கல்வி முறையை வகுக்க, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைவோம்.!

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் ச.அன்பு, மாநில பொதுச் செயலாளர்,
பு.மா.இ.மு. தமிழ்நாடு.

நோக்க உரை:

பேராசிரியர். ஜவகர் நேசன், முன்னாள் ஒருங்கிணைப்பாளர்,
மாநில கல்விக் கொள்கை குழு, தமிழ்நாடு.

ஆசிரியர் உமா மகேஷ்வரி, ஒருங்கிணைப்பாளர்,
அசத்தும் அரசு பள்ளி.

பேராசிரியர்.சிவக்குமார், முன்னாள் முதல்வர்,
குடியாத்தம் அரசு கலைக் கல்லூரி.

பேராசிரியர்.முரளி,
அகில இந்திய செயலாளர்,  PUCL.

வழக்கறிஞர். ராஜூ, மாநில பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு- புதுவை.

நன்றியுரை

தோழர் மா. மணியரசன், மாநில செயற்குழு உறுப்பினர்,
பு.மா.இ.மு. தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here