சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு! தொடர் கட்டுரை

தொடர்ச்சி…

னாதன தர்மம் என்ற பெயரில் இன்று முன்வைக்கப்படுகின்ற கருத்துகள் யாவும் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை நிபந்தனையின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைதான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

பார்ப்பன சாதியினரை பற்றி விமர்சனங்கள் எழும் போதெல்லாம் ஆரிய, திராவிட கோட்பாடு, பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாத ஒரு கோட்பாடு போன்றவை அனைத்தும் இன வரைவியல் என்று தர்க்கம் புரிகின்றனர் பொருள் முதல்வாத அறிவற்ற சிலர். பிராமணர்களை பார்ப்பனர்கள் என்றால் கூட அவர்கள் மனம் புண்பட்டு விடும் என்று பவ்யமாக பேசுகின்றனர் சிலர்.

சனாதன தர்மம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் மீண்டும் ஆதிக்கம் செய்வதற்கும், ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கும், பல வகைகளில், பல கோணங்களில் வேலை செய்து வருகிறார்கள் என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து, 90களில் இருந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

பார்ப்பனர்கள் ஒன்றுமில்லாத சவுண்டி பார்ப்பானாக இருந்தாலும் சரி, சாஸ்திரங்கள் விதித்த விதிகளை மீறி கடல் கடந்து சென்று அங்கேயே குடியேறிக்கொண்டு பார்ப்பன தர்மத்தை விடாமல் தூக்கிப் பிடிக்கும் கார்ப்பரேட் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி, பிறப்பின் அடிப்படையிலேயே தங்களுக்கு மேன்மை இருப்பதாகவும், அதனால் தனக்கு முன்னுரிமை வேண்டும் என்று நாக்கூசாமல் பேசுகின்றனர்.

பார்ப்பனர்கள் ஒன்றுமில்லாத சவுண்டி பார்ப்பானாக இருந்தாலும் சரி, சாஸ்திரங்கள் விதித்த விதிகளை மீறி கடல் கடந்து சென்று அங்கேயே குடியேறிக்கொண்டு பார்ப்பன தர்மத்தை விடாமல் தூக்கிப் பிடிக்கும் கார்ப்பரேட் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி, பிறப்பின் அடிப்படையிலேயே தங்களுக்கு மேன்மை இருப்பதாகவும், அதனால் தனக்கு முன்னுரிமை வேண்டும் என்று நாக்கூசாமல் பேசுகின்றனர். இதை பச்சையாக கூறினால் முதுகுத்தோல் பழுத்து விடும் என்பதால் சனாதன தர்மம், பாரம்பரியம், பழமையை பாதுகாப்பது என்றெல்லாம் கம்பு சுத்துகின்றனர்.

தமிழக அமைச்சர்களுள் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி விலை வைத்து ரவுடி சாமியார் ஒருவன் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்க முடிகிறது. அதற்குப் பின்னும் எச். ராஜாக்கள் போன்ற பார்ப்பன ஆதிக்க வெறியர்கள் அதனை நியாயப்படுத்தி பேசுகிறார்கள். சமூக ஊடகங்களில் உள்ள கருப்பு பார்ப்பனர்களும், பதிலி பார்ப்பனர்களும் தன்னுடைய நிலைமை என்னவென்று புரிந்து கொள்ளாமல் ஆர்எஸ்எஸ்- பாஜகவிற்கு துதி பாடுகின்றனர்.

சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு - பாகம் 2
உதயநிதி தலைக்கு 10 கோடி அறிவித்த இந்துமதவெறி ‘சாமியார்’

திமுகவின் மீது உள்ள வன்மத்தின் காரணமாக உதயநிதி தலைக்கு 10 கோடி விலை வைத்ததை நியாயப்படுத்தி மீம்ஸ் போடுகிறார்கள். இயல்பாகவே சாதி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள இத்தகைய கேடு கெட்ட அடிமைகளின் தயவில்தான் பார்ப்பனர்கள் கொட்டமடிக்கின்றனர்.

அப்படி என்னதான் சனாதன தர்மம் கூறுகிறது என்பதை “தேங்காய் மூடி” பார்ப்பனர்கள், அதாவது கதாகாலட்சேப பஜனைகளில், பிரசங்கங்களில் பண முடிப்புக்காக, பிதற்றுகின்ற காவி உடை தரித்த, ரெக்ரூட் பார்ப்பனர்களை விட ‘லோக குரு’ என்று பார்ப்பனக் கும்பலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரன் முன்வைத்த தெய்வத்தின் குரல் என்ற நூலில் இருந்து சில பகுதிகளை பார்ப்போம்.

“நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்ந்து பார்த்தால் என்ன தெரிகிறது? மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது. நவீன யுகத்தில் ‘சமத்துவம்’ (equality) என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்துக்கு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது?

அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது.” என்று வர்ண தருமத்தை, அதாவது இந்து என்று தன்னை ஏற்றுக்கொண்ட மக்களை நான்கு வர்ணங்களாக பிரிப்பதை நியாயப்படுத்தி உபதேசம் செய்கிறார் சங்கராச்சாரி.

சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு - பாகம் 2
சங்கராச்சாரி

அப்படி பிரிப்பதால் தான் பிறப்பால் தலித்துகள் எப்படிப்பட்ட உயர்ந்த சோப்பை போட்டு குளித்தாலும் அவர்களின் பிறவி அழுக்கு அதாவது தீண்டாமை போகாது என்று பட்டவர்த்தனமாக பேசிக் கொண்டே சங்கராச்சாரிகள் துணிச்சலாக நடமாட முடிகிறது.

செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன்  தனது உபதேசங்களில் “தீண்டாமை க்ஷேமகரமானது’ என்று கூறினார் (“ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள்”). உடல் முழுவதும் சாதி ஆதிக்க திமிரும், பார்ப்பனக் கொழுப்பும் அண்டி போயிருந்த சங்கராச்சாரி சனாதன தர்மத்தை யாருடைய நலனுக்காக முன்வைத்து வாதம் புரிந்தார் என்று சொல்லாமலேயே விளங்கும்.

தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு பல்வேறு சதித்தனங்களை செய்த பார்ப்பனர்களை பற்றி ஒன்றும் தெரியாத அப்ராணிகளை போல நாம் கருத வேண்டும் என்பதற்காக சங்கராச்சாரி கூறுவது இதுதான், “ஆயிரம் பதினாயிரம் வருஷமாக, வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவகளையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொடுப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெரும்பான்மையாக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா? இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தார்களா? அதுவும் இல்லை. குறைந்த பட்சம் திரவிய பலமாவது அவர்களுக்கு இருந்ததா? அப்படிக்கூட இல்லை.

இதையும் படியுங்கள்: 

 இந்து மதம்  பார்ப்பனீயம் | பகுதி 1
 இந்து மதம்  பார்ப்பனீயம் | உபநயம் | பகுதி 2

பிராமணன் பணம் சேர்ப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணமும் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெருமாபான்மையாக இல்லாமல் இருக்கிறவர்கள் விதித்த சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?”என்று தெய்வத்தின் குரலில் உபதேசிக்கிறார்.

“ஓட்டலில் சர்வராக இருந்து கொண்டு டேபிள் துடைக்கும் பார்ப்பான் கூட வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யும் நேரத்தில் சாமி என்று ஆகிவிடுகிறார்” என்று பார்ப்பனர்களில் உள்ள ஏழைகளின் நிலைமை பற்றி தோலுரித்து காட்டினார் எழுத்தாளர் பிரபஞ்சன். சாதி ஆதிக்கத்தை எதிர் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு பெயர்தான் சனாதன தர்மத்தை ஆதரிக்கும் உளவியலாகும்.

பிறப்பால் பார்ப்பனர்களைத் தவிர பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட கருப்பு பார்ப்பனர்கள், பதிலி பார்ப்பனர்கள் இந்து மதம் என்பது பார்ப்பனர்களில் மேலாதிக்கத்தை தவிர வேறொன்று இருப்பதைப் போல புரிந்து கொண்டிருக்கிறார்கள். கோவிலுக்கு செல்பவர்கள், மத சடங்குகளை கடைப்பிடிப்பவர்கள், மத விழாக்களை கொண்டாடுபவர்கள் போன்ற அனைவருமே நிபந்தனையின்றி பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்க வேண்டும் என்பதுதான் சனாதன தர்மம். இதனை ஏன் தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பதைப் பற்றி சங்கராச்சாரி கூறுவது என்ன?

“பழைய காலத்தில் செத்தை, எரிமுட்டை எல்லாவற்றையும் கொளுத்திப் போட்டே அடுப்பு மூட்டுவார்கள். மழை நாளில் அடுப்பு பிடித்துக்கொள்ள ரொம்ப சிரமமாயிருக்கும். நாலு நெருப்புப் பொறி கிளம்பினால்கூடப் போதும், உடனே விசிறு, விசிறு என்று விசிறி அதைப் பற்ற வைத்து விடுவார்கள். அதுமாதிரி, இன்னமும் முழுக்க அணைந்து போகாமல், ஒரு சில பெரியவர்களிடமாவது இருக்கிற நாலு பொறி ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.”

என்று காலாவதியாகிப் போன சனாதன தர்மத்தின் மகிமைகளை எடுத்துக் கூறி மொத்த சமூகத்தையும் சனாதன தர்மத்திற்கு உட்பட்டு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அது மட்டுமல்ல, “நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்” என்று ஆத்திரத்துடன் உபதேசிக்கிறார் சங்கராச்சாரி.. பார்ப்பன இந்து மதம் சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் இழைத்து வரும் கொடுமைகள் மட்டுமின்றி, அது இயல்பிலேயே பெண்களுக்கு எதிரானது என்பதை சங்கராச்சாரியே நிரூபித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:

 பார்ப்பன பொறுக்கி பத்ரிக்கு பெரியாரை கொண்டு வக்காலத்து வாங்கும் அறிவுஜீவிகள்!
 பார்ப்பன சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுருக்கு கயிறு!

“இவர்கள் விதவைகள் முகத்தில் விழிக்க மாட்டார்கள். ஆனால் இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது மறைந்த சங்கராச்சாரியாரைப் பார்க்க விரும்பினார். இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? நடுவிலே நீர் இருந்தால் தீட்டு போய்விடும் என்று சொல்லி ஒரு சிறிய கிணற்றின் ஒரு புறத்தில் சங்கராச்சாரியாரையும், மறுபுறமாக இந்திரா காந்தி அம்மையாரையும் அமர வைத்தார்கள்….”.(இந்து தேசியம் – தொ.பரமசிவன்). வீட்டில் இருக்கும் சாதாரண பெண்கள் முதல் நாட்டின் உயர் பதவியில் இருந்த இந்திரா காந்தி போன்ற பெண்மணி வரை யாராக இருந்தாலும் பார்ப்பன (இந்து) மதம் பெண்களை இழிவாக கருதுகிறது என்பதுதான் சனாதன தர்மம்.

ஆளுநர் ஆர் என் ரவி முதல் அமெரிக்க அம்பிகள் வரை தூக்கிப் பிடிக்கும் சனாதன தர்மத்தின் யோக்கியதை இதுதான்.

  • சண்.வீரபாண்டியன்

(தொடரும்…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here