ரே நாடு, ஒரே மொழி எனும் சித்தாந்தத்தில் மிகுந்த கவனம் செலுத்தும் பாசிச பாஜக அரசானது வங்கிகளை ஒன்றுசேர்த்து மூலதன திரட்டலை உருவாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதைப் போல, இவர்களுக்கு ஆதாயம் அளிக்கும் நோக்கில் பல்வேறு பொது அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும் செய்கிறது. அப்படி நான்கு தனித்துவமான பொது அமைப்புகளை ஒரே அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து, அதற்கு தனி அமைச்சரை நியமித்ததுள்ளது.

அந்த அமைச்சர் வேறு யாருமல்ல. டெல்லியில் 2019 ல் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) க்கு எதிராக போராடிய மக்களை மிகக் கேவலமான முறையில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற கொலைவெறியை கக்கி மாபெரும் கலவரத்துக்கு வித்திட்டவர்தான் அவர். இந்த நிகழ்வானது நமக்கு எச்சரிக்கை மணியை அடிக்கிறது. இந்த தனிப்பட்ட நபர் சார்ந்த பிரச்சினை அல்ல இது. இவரது மூதாதையர்கள் நூற்றாண்டு காலமாக வெறுப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, பொய் செய்திகளை பரப்பி, சக இந்திய குடிமக்களை கொடூரமான எதிரிகளாக கட்டமைக்கிறார்கள்.

இவர்களால் கொல்லப்பட்டவர் தான் மகாத்மா காந்தி. அன்று தொடங்கிய வெறுப்புப் பிரச்சாரமும், கொலைகளும் இன்றுவரை நிற்கவில்லை. இப்போது பணபலத்தாலும், ஒவ்வொரு மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பின் மீதும் இரக்கமற்ற கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தியதாலும் பெற்ற தேர்தல் வெற்றியின் மூலம் அவர்கள் மேலும் மமதை கொண்டு திரிகிறார்கள். பெரும்பான்மை பலத்தோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சர்வாதிகாரத்தை நிலைநாட்ட துடிக்கும் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை!

சுதந்திரத்திற்கு பிந்தைய செய்திகள் மற்றும் ஆவணப் படங்களின் தொகுப்புகளை வைத்துள்ள தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மற்றும் திரைப்பட பிரிவின் மீதான அவர்களின் தாக்குதலானது நமது அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரத்திற்காக போராடாத அவர்களின் கைகளில் நமது உண்மையான போராட்ட வரலாறு சிக்கினால், அது சிதைத்து வெட்டப்பட்டு மீண்டும் வேறு வகையில் புதிதாக எழுதப்படும் அபாயம் உள்ளது.

குழந்தைகளின் திரைப்பட சமூகம் (Children’s Film Soceity) மற்றும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகம் ஆகியவை நமது கலாச்சார பாரம்பரியத்தை விரிவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஆகும். இத்தகைய அமைப்புகள் ஒரு விஷத்தனமான ஏஜென்சியின் கீழ் வந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கையில் அச்சம்தான் உருவாகிறது. முன்பு தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகமாக (National Film Development Corporation) இருந்த இந்த நிறுவனம் வணிக திரைப்படங்களுக்கு மாற்றாக தரமான படங்களை தயாரித்து பாலிவுட்டில் வெளியிட்டது. பிறகு அது செயலிழந்து எழுத்தர் அலுவலகம் போல மாறிவிட்டது.

திரைப்பட பிரிவிலாவது ஏற்கனவே உள்ள ஊழியர்கள், உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் திறமையான சில வேலைகள் நடக்கின்றன.ஆனால் NFDC – இன் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே என்பதாக மாறிப்போனது. இதையும் கூட அவர்கள் செய்ய தவறினர்.

இப்போது நான்கு அமைப்புகளை ஒன்றாக இணைத்து லாபம் ஈட்ட வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கினால் என்ன நிகழும்? தனியார்மயமாக்கல் மற்றும் அதன் பொதுச் சொத்துக்களை விற்பது (திரைப்பட பிரிவானது மும்பையில் அதிக விலைமதிப்புள்ள பகுதியில் இயங்குகிறது).  கொள்ளையடிக்க காத்திருக்கும் கயவர்களுக்கான வாய்ப்புதானே இது! கருத்து சுதந்திரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், தகவல் அறியும் ஆர்வலர்கள் இந்த நேரத்தில் சும்மா இருந்தால் நமது ஆவண காப்பகங்கள் மற்றும் மதிப்புமிக்க சொத்துக்கள் விற்கப்படுவது மற்றும் அழிக்கப்படுவது உறுதி. மேலும் கங்கனா ரனாவத்தும், விவேக் அக்னிஹோத்ரியும் இத்தகைய முடிவெடுத்தால் என்ன செய்ய முடியும்!  மேலும் எந்த செய்தியை வலுக்கட்டாயமாக பொதுமக்களுக்கு ஊட்ட வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். இத்தகைய அபாயங்களை முறியடிக்கும் பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது.

–  ஆனந்த் பட்டவர்தன், ஆவணப்பட இயக்குநர்.

செய்தி மூலம்: https://countercurrents.org/2022/03/the-assault-on-the-national-film-archives-and-films-division/

தமிழில் : குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here