கோவையில் காவல்துறையினரின் அத்துமீறல்!

படித்து முடித்துவிட்டு பொருத்தமான வேலையும் கிடைக்காமல் சுயமாக தொழில் தொடங்கி அதை நடத்த முடியாமல், அரசின் எவ்வித உதவியும் இன்றி தவித்து வரும் பல லட்சம் தொழில்முனைவோரின் இவரும் ஒருவர்.

கோவையில் காவல்துறையினரின் அத்துமீறல்!

சாலையில் செல்லும் வாகனம் மற்றவர்களை இடித்தால் பார்ப்பவர்கள் தட்டிக் கேட்கத்தான் செய்வார்கள்.

ஆனால் அதுவே நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ் சென்றால் – ஒரு பெண்ணை இடித்து விட்டு சென்றால் கூட அந்த பஸ்சின் டிரைவரை கண்டிக்கக் கூடாதா?

மீறி கண்டித்தால் போக்குவரத்து போலீஸார் கன்னத்தில் பளார் என்று அறைந்து சட்டம்-ஒழுங்கை சாலை விதிகளை நிலைநாட்டுகிறார்கள்.

கோவையில் நன்றாக படித்துவிட்டு, உரிய வேலையில், நிரந்தரமான உத்தரவாதமான சம்பளத்தில் வாழ முடியாத பல நூறு இளைஞர்கள் ஸ்விக்கி, சுமோட்டோவில் கேரியர் சுமக்கிறார்கள்.

அப்படி சுவிக்கியில் வேலை செய்த இளைஞர் தான் துணிச்சலாக நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ் டிரைவரை தட்டிக் கேட்டவர்.

படிக்க:

♦  லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!
♦  தெலுங்கானா என்கவுண்டர்: போலீசு செய்த படுகொலை!

இவர் ஒன்றும் சாதாரண கூலித்தொழிலாளி அல்ல. படித்து முடித்துவிட்டு சுயமாக தொழில் தொடங்கி நடத்தி வருபவர். கொரோனா கால நெருக்கடியால் பகுதிநேரமாக சுவிக்கி வேலைக்கு சென்று கடை வாடகையை கட்டி வருகிறார்.

இப்படி படித்து முடித்துவிட்டு பொருத்தமான வேலையும் கிடைக்காமல் சுயமாக தொழில் தொடங்கி அதை நடத்த முடியாமல், அரசின் எவ்வித உதவியும் இன்றி தவித்து வரும் பல லட்சம் தொழில்முனைவோரின் இவரும் ஒருவர்.

இன்று இவர் ஒரு தொழிலில் மட்டும் சம்பாதிக்க முடியாமல் கூடுதலாக விக்கியில் உழைக்கிறார். இவர்களை மதிக்கவும், இவர்களின் வலியை உணரவும் ஆளும் வர்க்கங்களும் தயாரில்லை – அரசு எந்திரமும் மனிதாபிமானத்தையோ கருணையையோ காட்டுவதில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்கள், கார்ப்பரேட் கல்லூரிகள், கார்ப்பரேட் பள்ளிகள் என அனைத்து வகை கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாலாட்டும் ஏவல் நாய்களாக காவல்துறை செயல்பட்டு வருவதையும் பொதுவிலேயே நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி டிபன் கடை நடத்துபவர்களிடம் போலீசாரின் அணுகுமுறை அடாவடியானதாகவும் நடந்து கொள்வது போலிசு யாருடைய நண்பன் என்பதையே படம் போட்டு காட்டுகிறது.

அடித்த காவலரை கைது, தற்காலிக நீக்கம் செய்வதைத் தாண்டி சரியான நடவடிக்கை எடுத்து, முன்னுதாரணமாக தண்டனையும் தந்தால் தமிழக அரசை பாராட்டலாம். இப்பிரச்னையில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • ஆசிரியர் குழு, மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here