பாப்ரி மசூதியிலிருந்து கியான்வாபி வரை – இந்திய நீதிமன்றங்கள் எப்படியெல்லாம் மசூதிகள் இருப்பிடங்களை கோயில்கள் என்று இந்து மதவெறியர்கள் கொண்டாடுவதற்குத் தூண்டிவிட்டன?
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் 1986-ல் வழங்கிய ஆணை தான் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்துத்துவ குண்டர்களால் “அயோத்தி பாப்ரி மசூதி அழிக்கப்படுவதற்கும், சங்கிலித் தொடர் போன்ற நடவடிக்கைகளையும் தூண்டிவிட்டது” என்று 2010-ல் அயோத்தி சொத்துரிமை வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி s.u.கான் குறிப்பிட்டார்.
1986 நீதிமன்ற ஆணை தான் பாப்ரி மசூதியின் பூட்டுக்கள் திறக்கப்பட காரணமாயிற்று. அதுவே “தேசிய அளவில் (ஏன் சர்வதேச அளவில் கூட) தாவாவை உசுப்பித் தூண்டிவிட்டது”. என கான் அவ்வாறு சுட்டிக் காட்டத் தவறவில்லை. மேலும், “இந்துத்துவா பற்றி அயோத்தி, பைசாபாத் எல்லை தாண்டி வெளியே யாருக்குமே தெரியாது” என்றார் கான்.
அவரது அறிக்கை மதசம்பந்தமான சொத்து (இட) வழக்கில் ஏற்பட்ட பல தகராறுகளில் ஒரு குறிப்பிட்ட வகை மாதிரிப் படிவத்தைத் தொகுத்துக் கூறியது. எடுத்துக்காட்டாக அயோத்தி பாப்ரி மசூதி, வாரணாசி கியான் வாபி, மதுராவில் ஷாஹி இத்கா மசூதி, டெல்லி குதுப்மினார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கமால்-உத்-தின் மசூதி போன்ற தகராறுகளில் குறிப்பாக கீழமை நீதிமன்றங்கள் தீவிரப் பங்காற்றியுள்ளன என்பதைக் கவனம் கொள்ளுங்கள்.
பாப்ரி மசூதியின் பூட்டுக்கள் திறக்கப்பட்டன
முதலில் அயோத்தியில் வெட்ட வெளிச்சமாக/ வெளிப்படையாக தொடங்கியது. 1949க்குப் பல பத்தாண்டுகளுக்கு பிறகு பாப்ரி மசூதிக்குள்ளே புதிர் போல இந்து மதக் கடவுளான ராமனின் சிலை கொண்டு வைக்கப்பட்டது. உள்ளே சென்று மதச் சடங்குகள் செய்ய 2 பூசாரிகளே அனுமதிக்கப்பட்டனர். இடையே ஒரு கம்பிக் கிராதி – அதன் வழியே தான் பொதுமக்கள் உள்ளே பார்க்கமுடியும்.
Also read: பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?
ஆனால் 1986-ல் இந்த தகராறிலேயே சம்பந்தமில்லாத ஒரு வழக்குரைஞர், பைசாபாத் மாவட்ட K.N. பாண்டே என்ற நீதிபதி முன்னால் ஜனவரி 31, 1986 அன்று ஒரு முறையீடு செய்தார். ஒருநாள் கழித்து அது அனுமதிக்கப்பட்டது. அவ்வழக்கில் இந்துக்கள் வழிப்படுவதற்காகக் கதவுகள் திறக்கப்படவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பாணை வழங்கினார். தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே பாப்ரி மசூதியின் வாயில்கள் திறக்கப்பட்டன.
வழக்கில் சம்பந்தப்பட்ட வாதிகளுக்கு (Original Parties) இந்த நடப்புகள் பற்றி எதுவுமே தெரியாது. அவரும் இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்து இணைக்கப்படாதவர். வழக்கு மன்றத்தில் அப்போது ஆஜராகி இருந்த கீழமை நீதிமன்ற நீதிபதியும், காவல்துறை கண்காணிப்பாளரும் (S.P) பூட்டுக்கள் திறக்கப்பட்டால் ஒரு பிரச்சனையும் வராது என்று சொன்னார்கள்.
2010-ல் நீதிபதி S.U. கான் நடப்புகளின் வரிசையை ஆய்வு செய்தவர் அதிர்ச்சி அடைந்தார். வழக்குக்குச் சம்பந்தமில்லாத “அயல் ஆள்” அவ்வாறு முறையிட்டது “செல்லுபடி ஆகாது”. அதே வழக்கில் வழக்குக்குச் சம்பந்தமுள்ள (முசுலீம் தரப்பு) ஒருவர் தன்னை இணைத்துக்கொள்ளக் கோரியது “தவறுதலாக தள்ளுபடி செய்யப்பட்டது”(!) ; இக்காரணத்தாலேயே “முறையீட்டை எதிர்ப்பதற்கு மன்றத்தில் ஒருவரும் இல்லாமல் போனது”.
Also read: டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு கருப்பு தினம்!
நீதிபதி S.U. கான் முக்கியமாக “அப்படி தேவைக்கும் அதிகமான படி வரிசை” நடைமுறையில் வருவதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை என்றார்.
கியான் வாபியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வு :
முகலாய கால கட்டத்தின் கியான் வாபி மசூதி பற்றிய ”இந்துத்துவ உரிமைக் கோரிக்கைகள்”, சம்பந்தமான இரண்டு வாரணாசி சிவில் கோர்ட் வழக்குகள் தகராறைப் பற்றவைத்தன.
முதலாவது வழக்கு, 1991-ல் வாரணாசி (பொது உரிமை வழக்கு) சிவில் கோர்ட்டில் “சுயம்புக் கடவுள் விஸ்வேஸ்வர்” மற்றும் “பக்தர்கள்” சார்பாகப் போடப்பட்ட வழக்கு – கியான் வாபி மசூதி நிலத்தில் (பூமியில்) ஆரம்பத்தில் (மூலவகைகளில்) கோயில் இருந்தது ; அந்தச் சொத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரியது. 1997-ல் நீதிமன்றம், கோரிக்கைகளின் சில பகுதிகள் “1991 – வழிபாட்டுச் சட்டம் (சிறப்பு விதிகளின் படி)” அனுமதிக்கத்தக்கதல்ல என்று மறுத்தது. இந்தச் சட்டம் அயோத்தி கோயில் இயக்கத்தின் போது 15.08.1947 அன்றைய நாளில் குறிப்பிட்ட மத – மரபுப் பண்பு என்னவாக இருந்ததோ அதுவே நிர்வகிக்கப்படவேண்டும் என்று தெளிவுப்படுத்துவதற்காகவே நிறைவேற்றப்பட்டதாகும்.
மேல் முறையீட்டில், ஒரு மாவட்ட நீதிபதி செப். 1998-ல் இந்த ஆணையை ஒத்திவைத்தார்; போதிய அளவு ஆதாரம் திரட்டாமல் இப்படிப்பட்ட பிரச்சினைகள் தீர்மானிக்கப்படமுடியாது என்று அவர் கூறினார். பிறகு அதே ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது.
Also read: குதூப்மினாரை ‘விஷ்ணு ஸ்தம்பம்’ என பெயர் மாற்றக்கோரி சங்கபரிவாரங்கள் போராட்டம்!
இந்த தடுப்பாணை 2020 வரை அமலில் இருந்தது. ஆனால் 2018 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தெளிவாக வரையறுக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டாலொழிய, 6 மாதத்துக்கு மேல் அமலில் இருக்கமுடியாது. வாதியின் கோரிக்கை பேரில், எந்த சிவில் கோர்ட்டில் (பொது உரிமை கோர்ட்டில்) நிலுவையில் உள்ளதோ அங்கேயே மீண்டும் வாதிட எடுக்கப்படும் வரை அவ்வாறே நடக்கும். பிப்ரவரி 2020-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுபடி தடையாணை ஒன்றைப் பிறப்பித்தது; மார்ச் 2020-ல் தீர்ப்பைத் தள்ளிவைத்தது.
இதற்குப் பிறகு சிவில் கோர்ட் விசாரணை மறுபடி தொடங்கியது. ஏப்ரல் 2021-ல் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை ஆய்வொன்றைச் செய்து மசூதி கட்டப்படும் முன் அங்கே கோயில் இருந்ததா என்று கண்டறியப்பட வேண்டுமென்று உத்தரவு போட்டது. Scroll.in இது குறித்து அப்போது எழுதியது. இப்படிப்பட்ட ஆய்வே “வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின்” கீழேயே விதிவிலக்கைக் கோருவதற்கான நிலைக்கு எடுத்துச் செல்லப்படக்கூடும் என்று எழுதியது. கட்டுமானங்கள்/நினைவுச் சின்னங்கள் – வரலாற்று முக்கியத்துவமாகவும் நூறாண்டு பழமையானதுமாக இருக்குமானால், அவை இச்சட்டத்திலிருந்து விலக்கு கோரலாம் என்று கூறியது.
செப்டம்பர் 2021-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம், அவ்வாறு உத்தரவிட்டது குறித்து சிவில் கோர்ட்டைக் கண்டித்ததோடு தொல்லியல் ஆய்வுக்கான வழிகாட்டலைத் தடுத்து நிறுத்தியது. “(அலகாபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பாணைக்குக் காத்திருக்கவேண்டும் என்ற) நீதிமன்றங்கள் பின்பற்றவேண்டும்; ஆனால் கண்டறியவே முடியாத காரணங்களால் அவை பின்பற்றப்படவில்லை” என்று மன்றம் சுட்டிக்காட்டி விமர்சித்தது.
கியான் வாபியை வீடியோ எடுத்த செயல்
ஆகஸ்டு 2021, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ள போதே, ம்ற்றொரு மனு வாரணாசி சிவில் கோர்ட்டில் பதியப்பட்டது. கியான் வாபி வளாகத்தில் (இந்துக் கடவுளர்க்கான) பூசையும், சடங்குகளும் செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்று அது கோரியது: “இந்துக் கடவுளரான மா சிருங்கார் கவுரி, கணேசர், அனுமன் மற்றும் காணத்தக்க, கண்டுணர இயலாத தெய்வங்களை “அங்கே பாதுகாக்கவேண்டும், அவை அங்கே நிலைத்து வாழ்கின்றன என்று அந்த மனு உரிமையை வலியுறுத்தியது.
ஏப்ரல் 8, 2022 – சிவில் நீதிபதி ஒருவர், அஜய்குமார் என்பவரை வழக்குரை ஆணையராக நியமித்தார். மசூதியை வீடியோப் படம் எடுத்து, மன்றத்துக்குக் கொடுக்கவேண்டும். தேவையானால் அவர் காவல்துறை உதவியைப் பெறலாம். முசுலீம் தரப்பு, அஜய்குமார் நியமனத்தை எதிர்த்தது; ஏனென்றால், அவரது பெயரை வாதித்தரப்புத்தான் முன்மொழிந்திருந்தார்கள்.
மே 12, கோர்ட் அஜய்குமார் நியமனத்தை மாற்றவில்லை; மாறாக, மேலும் இரண்டு வழக்குரைஞர் ஆணையர்களை அவருக்கு உதவியாக நியமித்தது. தேவையானால் பூட்டுக்களை உடைக்கவும், அதனை மறிப்பவர் மீது முதல் தகவல் அறிக்கையை (FIR) பதியவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவும் பிறப்பித்தது, மே 17க்குள் அறிக்கை கொடுக்கவும் கேட்டுக்கொண்டது.
மேனாள் அலகாபாத் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அமர் சரண் “தி க்யூண்ட்” (The Quint) தளத்திற்குத் தெரிவித்ததாவது; “வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு இது எதிரானது; அதே சமயம் ஒரு வழிபாட்டு இடத்தை வேறு ஒன்றாக மாற்றுவதைத் தடுக்கும் வழியையும் செய்யக்கூடியது”.
அறிக்கை கொடுக்கப்பட இருந்த திங்கட்கிழமைக்கு முன்பாகவே, மசூதியைப் பிரதிநிதித்துவம் செய்யும் நபர்கள் உடன் இல்லாமலேயே ஒரு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது “உள்ளே ஒரு சிவலிங்கம் (அதாவது, இந்துக் கடவுளான சிவனின் சிலை இருந்தது” என்ற வாதியின் முறையீட்டை அனுமதித்தது – உள்ளே இருக்கும் குளத்திலிருந்து அதைக் கண்டெடுத்ததாகச் சொன்னதையும் அனுமதித்தது. இதை முன்வைத்து அந்த கோர்ட், கியான் வாபி மசூதியின் ஒரு பகுதி பாதுகாப்பாக மூடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் மசூதிக்குள்ளே சென்று தொழுகை நடத்த 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறிவிட்டது.
மசூதித் தரப்பு இந்த உரிமைக் கோரிக்கையை எதிர்த்தது, அவர்கள் சொல்கின்ற இடம் உண்மையில் ஒரு நீரூற்று என்றும் குறிப்பிட்டது. அடுத்தநாள் வழக்குரை ஆணையர் ஊடகத்துக்குத் தகவலைக் கசியவிட்டதற்காக நீக்கப்பட்டார் என்றும் மற்ற இரு ஆணையர்கள் மே 19- அன்று அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
முசுலீம் தரப்பு என்ன செய்தது? அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் முன், வீடியோ ஆய்வு எடுக்கப்படுவதை எதிர்த்து முறையிட்டது. ஆனால் இதே போன்ற முறையீட்டை ஏப்ரல் 2021-ல் மன்றம் தள்ளுபடி செய்திருந்தது, காரணம் – கோர்ட்டின் உத்தரவுகள் “எதையும் முடிவு செய்யப் போவதில்லை, அது நிகழ்ச்சிப் போக்கின் நடவடிக்கை மட்டுமே, அந்த அறிக்கையும் உள் பதிவாக/ அலுவலகப் பதிவாக மட்டுமே இருக்கப்போகிறது” என்று தெரிவித்தது.
கியான் வாபி மசூதி நிர்வாகக் கமிட்டி அலகாபாத் உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்குச் சென்றது; செவ்வாயன்று உச்சநீதிமன்றம் முசுலீம்கள் உள்ளே நுழைந்து தொழுகை நடத்த ஏற்படுத்தப்பட்டிருந்த எல்லா தடுப்புக்களையும் நீக்கியது. ஆனால், ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட கட்டுமானத்தை பாதுகாக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.
மதுரா வழக்கு
இதற்கிடையே மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி பேசுபொருளாக மாறியது; பன்னிரெண்டு வழக்குகளுக்கு மேல் பல்வேறு கீழ் நீதிமன்றங்களிலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் அந்தப் பிரச்சனை மீது வழக்குப் போடப்படுகிறது. இந்துக்கள் பலர், இந்துக் கடவுள் கிருஷ்ணனின் பிறப்பிடத்தில் தான் அந்த மசூதி கட்டப்பட்டுள்ளது என்று உரிமை கோரினார்கள். அந்த நிலத்தைக் கையகப்படுத்தவும், அந்த மசூதிக்குள்ளே பூசை நடத்தும் உரிமையையும் தாங்கள் பெற்றே தீர வேண்டுமென்று – தங்கள் மனுக்கள் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வருவதற்க்கு முன்பே கேட்டார்கள்.
இவற்றின் முதல் தொகுப்பு வழக்குகள் செப்டம்பர் 2020-ல் தொடங்கி வைக்கப்பட்டன; அதாவது, அயோத்தி தகராறு 2019-ல் இந்துக்களுக்குச் சார்பாக/ஆதரவாக முடிவான பிறகு இது நடந்தது; மதுராவில் உள்ள ஒரு சிவில் கோர்ட்டில் ரஞ்சனா அக்னி ஹோத்ரி என்ற வழக்குரைஞர் மசூதி (அவ்விடத்திலிருந்து) அகற்றப்படவேண்டும் என்று மதுரா கோர்ட் ஒன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அக்னி ஹோத்ரியின் மனு செப்டம்பர் 2020-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்கு பிறகு அது மறுமுறையீடு செய்யப்பட்டது. ஒரு மாவட்ட நீதிபதி இவ்வழக்கை மறுபடி எடுக்க அனுமதித்தார். ஒரு மதுரா மாவட்ட கோர்ட், வழக்காடுபவருக்கு உதவலாமா என்று பரிசீலிப்பது பற்றி மே 19 அன்று தீர்ப்பைத் தள்ளி வைத்தது.
மற்றொரு மனு, டிசம்பர் 2020 அன்று பல வழக்குரைஞர்களும் அமைப்புகளும் சேர்ந்து “ஐக்கிய இந்து முன்னணி, தர்ம ரக்ஷ சங் விருந்தாவன்” என்று உருவாக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் அடுத்த வாய்தா ஜூலை 1.
Also read:தாஜ்மகாலை குறி வைக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்!
ஜனவரி 2021 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் சட்ட ரீதியான எழுத்துப்பூர்வமான மனு ஒன்றை இதுவும் மசூதியை அப்புறப்படுத்தக் கோரியதே ஆகும். ஏற்காமல் தள்ளுபடி செய்தது. காரணம் வாதி நேரில் வரவில்லை என்பதே. ஆனால், மார்ச் 2022ல் அதே மனுவின் கோரிக்கையை உடனே வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மனு ஜூலை வாக்கில் பட்டியலுக்கு ஏற்றது.
இப்படிப்பட்ட பல மனுக்கள் வழக்கு மன்றத்தில் ஒன்றரை ஆண்டு காலமாக, கோரிக்கைகள் மறுக்கப்படாமல் கிடப்பில் இருந்தன. வழிபாட்டுத் தல தாவாக்கள் பற்றி (வழக்குகள் தடை செய்யப்பட்டிருந்தாலும்) கணக்கில் எடுக்கப்படவே இல்லை. அதாவது அசட்டை செய்யப்பட்டன. தவிர, 2019 அயோத்தி தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டதாவது; வழக்கு மன்றங்கள் (இனி) “இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது முகலாய மன்னர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக எழுகின்ற எந்த ஒரு கோரிக்கையையும் அனுமதிக்கக் கூடாது”.
இவ்வாறு ஒரு மனுதாரர் தங்களது விண்ணப்பங்கள் மதுரா சிவில் நீதிபதி ஒருவரால் எடுக்கப்படவில்லை என்று முறையிட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடிய போது, மே 12ம் நாள் அலகாபாத் உ.நீ. மன்ற கிருஷ்ண ஜன்ம பூமி தகராறு பற்றிய பல வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து அவற்றை விரைந்து முடிக்கவேண்டும், அதிகபட்சம் 4 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என்று வழிகாட்டியது.
அண்மையில், கியான் வாபி தகராறு சம்பந்தமாக கோர்ட் தீர்ப்பை மேற்கோளிட்டு, பல மனுதாரர்கள், மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதிக்கும் அதே போன்றதொரு வீடியோ ஆய்வு மேற்கொள்ளும்படியும் அங்கே பல வழிபாட்டு மூர்த்தங்கள் (உருவங்கள்) வசிப்பதாகவும், அவற்றை முசுலீம்கள் “அகற்ற முயல்வதாகவும்” இப்படியாக உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்தனர். மே 18 அன்று மதுரா உள்ளூர் கோர்ட் ஒன்று இக்கோரிக்கையை விசாரிக்க ஏற்பதாகத் தெரிவித்தது. வரும் மாதங்களில் கோர்ட் அந்த மனுக்கள் மீது தீர்ப்பளிப்பதாக உள்ளது.
மத்தியப் பிரதேசம் : கமால் – உத் –தீன் மசூதி
மத்தியப் பிரதேசத்தில் மே 11ஆம் நாள் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அது 2003-ஆம் ஆண்டு தொல்பொருள்துறை அறிவித்த ஆணைப்படி கமால் – உத் –தீன் மசூதி வளாகத்தை இந்துக்களும் முசுலீம்களும் வேறு வேறு நாட்களில் தத்தமது மத வழிபாடு நடத்தப் பயன்படுத்தவேண்டும் என்று கண்டிருந்தது. இதனை தற்போது ஒரு ‘இந்துக்குழு’ (?) கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. அந்தக் கட்டுமானம் போஜ்ஷாலா என்று அழைக்கப்படும் சரஸ்வதி தேவியின் கோயில் என்றும், அல்ல அது ஒரு மசூதி என்று முசுலீம்களாலும் உரிமை கோரப்படுகிறது.
டெல்லி குதுப்மினார்
டெல்லியில் மே 24 அன்று சாகேத் கோர்ட் குதுப்மினார் சம்பந்தப்பட்ட வழக்கொன்றை விசாரிக்கிறது. வாதி தரப்பிலிருந்து அந்த இடத்தில் உள்ள பல இந்து, ஜைன கோயில்களை அழித்துவிட்டு அங்கே மசூதியும், நினைவுச் சின்னம் ஒன்றும் (அ.து. குதுப்மினார்) எழுப்பட்டதென்று சொல்லப்படுகிறது. இது கோர்ட்டிற்கு வருவது இரண்டாவது முறை. முதலில் சிவில் கோர்டில் விவாதிக்கப்பட்டது. அது நவம்பர் 2021. கோர்ட் வழக்கைத் தள்ளுபடி செய்தது. “கடந்த கால வரலாறுகளை அடிப்படையாக வைத்து இன்றைய சமூக அமைதியைக் குலைப்பதை அனுமதிக்க முடியாது” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
முந்தைய வழக்குகளில் எல்லாம் மதவெறித் தகராறுகளை உசுப்பவதும் ஊக்குவிப்பதாகவும் அவை புண்ணாகிச் சீழ் பிடித்து மடியும் அளவுக்கும் கோர்ட்டுகளால் அனுமதிக்கப்பட்டன. இது வழக்கம். ஆனால் எல்லா வழக்குகளிலிருந்தும் வேறுபட்டதாக ஆக்ரா தாஜ்மகால் மீதான வழக்கில் அவ்வாறான முயற்சிகள் முனையிலேயே கிள்ளப்பட்டன.
மே 12 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ராஜ்னீஷ் சிங் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை (PIL) (அவர் பா.ஜ.க. அயோத்தி ஊடகத் துறைப் பொறுப்பாளர்) முற்றிலுமாகத் தள்ளுபடி செய்தது. தாஜ்மகாலை தொல்பொருள் ஆய்வுத்துறை ஆய்வுக்கு எடுக்கவேண்டும் என்பதே அவர் கோரிக்கை. உயர்நீதி மன்றம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் “சட்டத்துறை வரம்புக்குள் வரவில்லை”, அவற்றை வரலாற்றாசிரியர்களுக்கு விட்டுவிடுவதே சிறந்தது என்று பளிச்சென்று தீர்ப்பளித்தது.
ஆதாரம் : உமங் பொத்தார், Scroll.in
தமிழில் மறு ஆக்கம் மற்றும் குறிப்பு : இராசவேல்
குறிப்பு : பாசிஸ்டுகள் நீதி, நியாயத்துக்கு எதிரானவர்கள். இந்து மதவெறி விஷமிகள் இன்னமும் மதுரா கோர்ட் போல பல இடங்களில் ஒளிந்துள்ளார்கள். தற்போது கிருஷ்ண ஜென்ம வழக்கில் மசூதியை அகற்றக் கோரும் மனுவை, ’91 சட்டத்துக்கு எதிராக விளக்கம் கொடுத்து அனுமதித்துள்ளார்கள்(வழக்கு, 19.05.2022) . பார்ப்பன இந்து மதவெறியை வீழ்த்தி ஜனநாயக ஆட்சி காணும் வரை அந்தச் சக்திகளுக்கு எதிரான போர் ஓயப்போவதில்லை.