“அவங்க எப்டி குழந்தை பெத்துக்கிட்டா என்ன?”

“ப்ரியங்கா சோப்ரா, ஷாருக் கான்” இவங்கல்லாம் கூட இப்படித்தான் பெத்துக்கிட்டாங்க.

குழந்தைக்கு உரிமையான அந்த எலிட் மக்கள் மட்டுமே உங்கள் கண்களுக்குத் தெரிகிறாகள். பணத்தேவைக்காக உடல் உறுப்பைக் கடன் கொடுத்த அந்த அடையாளம் தெரியாத பெண்ணும் அவர் வலியும் தெரியவில்லை என்றால் , சாரி, அது தான் எலிட்டிசம். 🙂

தாலி கட்டிக் கொள்வது, கட்டாமல் விடுவது, திருமணத்துக்கு முன்பு சேர்ந்து வாழ்வது எல்லாம் personal choices that involve only themselves.

This is outright exploitation.

Here’s Malathi Maithri ‘s post that could create some awareness on Surrogacy and the lives of Surrogate mothers. <3

தங்கள் குழந்தைக்காக வேறு பெண்ணின் உடலை சிதைப்பது மருத்துவ வன்முறை.

பிள்ளை வேண்டுமென்றால் முடிந்தால் பெத்துக்கனும் முடியலையா தத்தெடுக்கனும் பணத் திமிரில் அடுத்த பெண்ணின் உடலை பாழாக்குவது மருத்துவச் சுரண்டல்.

குழந்தை பெத்தால் உங்க அழகு போயிடும் என்றால் அடுத்தப் பெண்ணின் அழகைக் கெடுப்பது கிரிமினல் குற்றமல்லவா.

கர்ப்ப காலத்தில் மூடு ஸ்விங் மன அழுத்தம், உடல் உபாதைகள், போஸ்ட் டெலிவரி டிப்ரசன், உளவியல் பிரச்சனைகள் மற்றும் இரட்டை குழந்தைகள் என்பதால் பெண்ணின் மெட்டபாலிசம் முற்றிலும் சீர்குலையும். உடல் பெருத்து உடல் வாகு மாறிவிடும். முதுகெலும்பு, இடுப்பெலும்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பனும். உடல் பழைய மாதிரி வராது என்றாலும் உடல்நிலையை கவனித்து பராமரிக்க போதிய வசதியின்மையால் பல தாய்மார்கள் நீடித்த நோயாளிகளாய் மாறிவிடுகின்றனர்.

சரோகேசி தாய்கள் பிரசவத்துக்கு பின் உடல் நலிவடைந்து மருத்துவ செலவு செய்ய முடியாமல் கூலி வேலைக்கும் போக முடியாமல் துன்புறும் கண்ணீர் கதைகள் நிறைய இருக்கு.

ஒரு சரோகேசி தாயின் நேர்காணல் பார்த்தேன். பிள்ளை பெற்றுக் கொடுத்தால் நீங்கள் தெய்வத்துக்கு சமம். குழந்தை இல்லாதவருக்கு உதவுவது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று ஏழ்மையில் தீரா கடனிலிருக்கும்அப்பாவி பெண்களை புரோக்கர்கள் மூளைச் சலவை செய்து பிடிக்கிறார்கள்.சொன்ன பணம் முழுசா கொடுக்காமல் ஏமாற்றுதல், இடுப்பு வலி மூட்டு வலி தீரா வியாதியும் உடன் வந்துவிட்டது. ஆனால் மருத்துவ மாபியாக்களுக்கு கொள்ளையோ கொள்ளை.

சரோகேசி சிஸ்டத்தையே தடை செய்ய வேண்டும்.

Deepa Lakshmi

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here