ஹிஜாபின் நிறம் சிவப்பு

ஹிஜாபின் நிறம்
இனி கருப்பல்ல சிவப்பு
எம் குருதியின் நிறம்
இனி சிவப்பல்ல கருப்பு

கல்விக்கு காவி தேர்வாகுமா?
உன் மதவெறி வீம்புக்கு நீட் நீளுமா?
எம் அறிவுகள் அதுவரை கை சூம்புமா!
எம் அறிவின் நிறம் கருப்பு
அரணாய் படருது சிவப்பு

ஹிஜாப் மதத்தின் நெறியல்ல
மனித மாண்பை உணர்த்திய நெறி
மதிப்பெண்ணா மாணவர் வாழ்க்கை
மனித மாண்பை காப்பதே வாழ்க்கை
இதை எமக்கு உணர்த்திய நெறி

ஹிஜாப் முகத்தின் திரை அல்ல
வகுப்பில் முடங்கிய எமக்கு
புரட்சித் திசையை காட்டிய விளக்கு

வண்ணங்களில் அமைவதா வாழ்க்கை
மனித எண்ணங்களில் அமைவதே வாழ்க்கை
எம் எண்ணங்களின் எல்லை
மனிதமும் இயற்கையும்
ஆனந்தமாய் கொஞ்சி மகிழும்
பொன்னுலகின் பேரழகு…
அதற்கு கலங்கரை சிவப்பு
சிவப்பின் திசை செல்லும் கருப்பு
கார்ப்பரேட் காவியை தகர்ப்பது மாண்பு
மக்கள் அதிகாரமாய் திரள்வதே அறிவு

படிப்பும் எழுத்தும்
எம்மை உயர்த்தும் கருவி மட்டுமா?
காவிக் கிருமியை வதைக்கும்
போராயுதம்!

எம் சிந்தையில் நிறைகிறார் மார்க்ஸ்
எம் எழுத்தில் எழுகிறார் திப்பு
எம் படிப்பில் உயர்கிறார் ஜெய்பீம்
எம் பேச்சில் நிற்கிறார் பெரியார்
எம் செயலில் விரைகிறார் பகத்சிங்
மக்கள் மூச்சாய் முழங்குவோம் நாங்கள்!

இனி எங்கள் தேர்வு
காவிகள் கொடுக்கும் தாள்களில் அல்ல!
காவிக் கரையை முடிக்கும் தெருக்களில்…

புதியவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here