அரசியல் சந்தையில்
பக்கெட் பொங்கல் !
( ஒரு ஃப்ரீஸ்டைலில்
எதார்த்தம் ஒட்டிய கற்பனை )

பொங்கல் சந்தையில் ஏதாச்சும் தகராறா?
சல்லிக்கட்டுத் தகராறோ, அல்ல, இருக்காது.
“ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரில் யார்
பாஜகவுக்கு அதிகம் குனிவது?”
— ஓ, அதெல்லாம்கூட பழசு;
அவங்க உட்கட்சித் தகராறே
அன்றாட வாடிவாசலாகிவிட்டதே!

பொங்கல் சீட்டு ஏலத் தகராறோ,
அல்ல அல்ல;
தமிழக ஆட்டுத்தாடி புண்ணியத்தில்
ஜகுனி சரத்குமார் நடத்தும்
ஆன்லைன் ரம்மி எந்நேரமும்
மும்முரமாய் நடக்க
அங்கே ஏலத்தகராறெல்லாம் ஜூஜூபி!

விசயம் இதுதான்.
சங்கிகள் மூளையில் புழுக்கள் அரிப்பதால்
முசுலீமோடு ஹிண்டு பூசலைத் தொடர
வெறுப்பு நெய்யில்
வறுத்தெடுத்த கொழுப்பைத் தின்னும்
சங்கிக் கூட்டத்தில்
புதுப்பூசலை எதிர்பார்த்து
ஒரு உரசல் ஏற்பாடு செய்யத்
தீர்மானித்தார்கள்.

விசயம் இதுதான் —
பார்த்திருப்பீர்கள்
சந்தையில் புதிதாக
‘பக்கெட் பொங்கல்’ அறிவிப்பு!
பக்கெட் பிரியாணிக்குப் போட்டி,
பக்கெட் பொங்கல்!
பின்னணியை அலசிப் பாருங்கள்,
ரகசியம் புரியும்!

“பக்கெட் பிரியாணி – குவார்ட்டர் – கொண்டாட்டம்”னு
கார்ப்பரேட் வாழ்க்கைமுறை
ஹிண்டுவீட்டில் அடுத்த தலைமுறையின்
மூடிய அறைக்குள்ளே
கிளைபரப்பிப் பெருகுவதைக் காணச்
சகியாது எரிச்சல்படும்
தருமபத்தினிகளும்,
‘பிரார்த்தனா பூஜா சாமான்’
ஈயோட்டும் ராயர் கடையை ஒட்டியே
‘ஆம்பூர் ஸ்பெஷல் பிரியாணி’ கடை
ஓயாத நெரிசலும் கும்மாளமுமாய்க்
கல்லா கட்டுவதைக் காணச்
சகியாது ரத்தக்கண்ணீர்விடும்
தர்மராயர் சமூகமும் யோசித்தன.

அடுத்த தலைமுறையான
‘ஜெனரேஷன் நெக்ஸ்ட்’ டிடம்
கெஞ்சின கதறின;
மிரட்டின சாபம்விட்டன.
இளசுகள் பணிவதாயில்லை.
இப்பல்லாம் பசங்களுக்கு
சாபம் எல்லாம் பொய் என்பது
நன்றாகத் தெரியும்;
அக்கிரகார இளசுகள்
பழகிய பக்கெட் பிரியாணியை மறப்பதாயில்லை!
வேறுவழி தெரியாமல்
தருமபத்தினிகளும்
தர்மராயர்களும்
போய்ச்சேர்ந்த இடம்தான்
சங்கிகளின் “ஆலோசனைமந்திர்”,
அங்குபிறந்ததுதான்
பக்கெட்பொங்கல் திட்டம்!

சந்தையில் ஏதாவது தகராறா?
தகராறு இல்லேண்ணே,
எதிர்காலப் பூசலுக்காக
ஒரு தற்கால முதலீடு — அது
பக்கெட்பிரியாணிக்குப் போட்டி
சங்கிகளின் பக்கெட் நெய்ப்பொங்கல்!

புதியதிருமூலன்.

இதையும் படியுங்கள்: தை…தை…தை… கவிதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here