“ஒரு கல் ஒன்றை தூக்கி காலில் போட்டுக் கொண்ட முட்டாள்கள் என்று ஏகாதிபத்தியங்களைப் பற்றி நையாண்டி செய்வார், தோழர் மாவோ.

அதுபோல மனுதர்மத்திலும், வேத, ஆகமங்களிலும் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை பற்றி ஒரு ‘ஹைகோர்ட்’ (உபயம் எச். ராஜா) அளவு கூட தெரியாத பார்ப்பன கழிசடைகள் மற்றும் அவர்களின் பாதம் தாங்கிகள் ஆன சங்கி முட்டாள் கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர், ஆ. ராசா மனுதர்மத்திலும், வேதங்களிலும் சூத்திரர்கள், பஞ்சமர்களைப்  பற்றி எந்த அளவிற்கு இழிவாகவும், கீழ்த்தரமாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் ஒரு முறை தான் பேசினார்.

ஆனால் முட்டாள் சங்கி கூட்டமோ, அதை சுவரொட்டி எழுதி ஒட்டுவது, யூடியூப் சேனல்களில் கதறுவது, மாமிகளை வைத்து வைய வைப்பது, நீதி அரசர்களின் மூலம் கருத்து சொல்பவர்களை ஒடுக்குவது போன்று, பல ‘அவதாரங்களை’ எடுத்ததால் இன்று இளைஞர்கள் மத்தியில் அந்த மனுதர்மம் மற்றும் வேத, ஆகமங்களில் என்ன ஹைகோர்ட்தான் இருக்கிறது என்று தேட ஆரம்பித்து விட்டார்கள்.

தந்தை பெரியாரின் புத்தகங்களுக்கு மீண்டும் ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. வாழ்நாள் முழுவதும், பார்ப்பன இந்து மதத்தை தோலுரித்த டாக்டர் அம்பேத்கரின் நூல்கள் அனைத்தும் கூகுளிலும், அமேசான் புத்தக சந்தையிலும் கிராம, நகர, பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் தேடப்படுகிறது. இத்தகைய ஒரு சூழலை உருவாக்கிய சங்கி முட்டாள் கூட்டத்திற்கு நாம் நமது நன்றியை செலுத்திக் கொள்வோம்.

நாம் நூறு கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்தாலும் இது போன்ற ஒரு பொது விவாதத்தை தூண்டி இருக்க முடியாது. அந்த வகையில் அவர்களின் இந்த வேலையை நாம் வேறு ஒரு வகையில் எதிர்கொள்வோம்!

இதையும் படியுங்கள்மனுதர்மத்தின் ஆட்சியும், பாலியல் கொலை குற்றவாளிகள் விடுதலையும்!

அவர்கள் முடித்து வைத்த இடத்தில் இருந்து துவக்கி மீண்டும் மீண்டும் வேத, புராண, இதிகாச, மனுதர்ம சாஸ்திர குப்பைகளை வீசி எறிவதை பற்றியும், அதன் மீது உள்ள அரைகுறை பிரமை, நம்பிக்கை அனைத்தையும் உடைத்து எறியும் வகையில் தீவிரமாக பிரச்சாரம் செய்வோம்.

இந்து மத சிறையில் அடைக்கப்பட்டு சூத்திரர், பஞ்சமர் என்று பல நூற்றாண்டுகளாக இழிவுபடுத்தப்பட்டு வரும் அவமானத்தையும், ஒடுக்கு முறைகளையும் விட சிறை கொடுமை பெரிய விஷயம் அல்ல.

கைது செய்வார்கள், சிறையில் அடைப்பார்கள் என்று ஒருபோதும் அஞ்சவோ, பின்வாங்கவே கூடாது. பார்ப்பன கும்பல் வகுத்து வைத்திருக்கும் சட்டங்களையும், அடக்கு முறைகளையும் தகர்த்தெரிந்து பார்ப்பன கோட்டைக்குள் புகுந்து கலகத்தை செய்வோம்.

  • வவுனியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here