2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் பாசிச  பயங்கரவாதியான திருவாளர் மோடி, 21-05-2024 அன்று ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், ,”ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்களிடம் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை இருக்கிறது. ஒடிசாவின் நிலையை பார்த்து நான் வேதனைபடுகிறேன் பிஜு ஜன தள் கட்சியின் சிறு நிர்வாகிகளும் தற்போது கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். பூரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது.

 நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகநாதர் கோயில் பொக்கிஷ் அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்” என அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தார்.

தமிழ்நாட்டிலிருந்து பீகாருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட சென்ற மதுரையைச் சார்ந்த வி.கே.பாண்டியன், பீகார் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனி அதிகாரியாக இருந்தபோது அங்கு அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்துவதில் முன்னுதாரணமாக திகழ்ந்தார்.  அதனால்  மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற  அவர், தனது பணியில் இருந்த போதே கட்டாய ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தளத்தில் இணைந்து விட்டார். 

அது மட்டுமின்றி, ஒடிசாவின் அரசியலை தீர்மானிக்கின்ற முக்கியமான நபராகவும் மாறியுள்ளார். இவரது ஆலோசனையின் படி தான் பாஜகவுடன் பிஜூ ஜனதாதளம் கூட்டணி அமைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தமிழர்களின் மீது அவதூறு செய்கின்ற வகையில் பாசிச  பயங்கரவாதி  மோடி பேசியுள்ளார்.

இதற்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரப்புரை செய்த போதும்  இதே போன்ற வகையில், ”உத்திரப் பிரதேச மக்களை இழித்தும், பழித்தும் தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அவதூறு செய்வதாக” தமிழர்களைப் பற்றி  கீழ்த்தரமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

ஆர்எஸ்எஸ் என்ற பார்ப்பன பாசிச பயங்கரவாத அமைப்பு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக தமிழர்களின் மீதும், திராவிட இனத்தின் மீதும் வெறுப்பை கக்கி வருகிறது என்பதின் தொடர்ச்சி தான் இந்த பேச்சு.

ஏனென்றால் ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்திற்கு எதிராக; பார்ப்பன (இந்து) மதத்தின் சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக; மனிதர்களை வர்ணங்களாக பிரித்து பாகுபடுத்தும் பிரிவினைவாத கொடுமைகளுக்கு எதிராக, தொடர்ந்து போராடி வருகின்ற திராவிட இனத்தின் மீது, தமிழர்களின் மீது இயல்பாகவே ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு வெறுப்பு உள்ளது. இதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அத்ன் வன்மத்தை கக்குகிறது.

இன்னொருபுறம், ’சூத்திரன் சம்புகனை கொலை செய்த கொலைகாரனான ராமனை தேசிய நாயகனாக” காட்டுவதற்கு முயற்சி செய்து வந்த ஆர்எஸ்எஸ் பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் முன் வைத்த படி அயோத்தியில் ராமன் கோவிலையும் கட்டி விட்டது. ராமன்  கோவில் கட்டிய சாதனையை முன்வைத்து தேர்தலில் செய்து வரும் பிரச்சாரங்கள், பசி, பட்டினியுடன் நொந்து கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடம் எடுபடவில்லை என்பதால், மதச் சிறுபானமையினருக்கு எதிராக இன வெறியூட்டும் வகையில் முறையில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். தற்போது அதற்கும் கீழே சென்று தமிழர்களின் மீது தாக்குதல் பிரச்சாரம் செய்யத் துவங்கி விட்டனர்.

2025 ஆம் ஆண்டு நூற்றாண்டு காணப் போகின்ற ஆர்எஸ்எஸ், இந்தியாவில் மனுதர்மத்தின் அடிப்படையிலான ஆரிய- பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவும் கனவுடன் வெறித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பார்ப்பனக் கும்பலின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு,  சூத்திரர்களையும், பஞ்சமர்களையும், பழங்குடிகளையும் தனது அடியாட்களாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது

ஆர்எஸ்எஸ்-நாக்பூர் தயாரிப்பான பாசிச மோடி தனது கவர்ச்சிவாத பேச்சுகளின் மூலமாகவும், சிறந்த நடிகனுக்கே உரிய வகையில் நவரசங்களை காட்டி படிப்பறிவற்ற பாமர மக்களையும், இந்து மதவெறியூட்டப்பட்ட ’படித்த முட்டாள் கூட்டத்தையும்’ தனது ஓட்டு வங்கியாக வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகிறார்.

எனினும் இந்த தேர்தலில் வட இந்திய மக்களிடம் அவரின் வித்தைகள் ஏதும் பெரிதாக எடுபடவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வட இந்தியா முழுவதும் பாஜகவின் வேட்பாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் தாக்கப்படுகிறார்கள். கிராமங்களுக் குள்ளேயே நுழைய அனுமதி மறுக்கிறார்கள். வேன் பிரச்சாரங்களில் செல்பவர்களுக்கு அவர்களுக்கு ’புரிந்த மொழியில்’ பதிலளித்து திருப்பி அனுப்பி வருகிறார்கள்.. இதனால் தங்களது கனவு கைநழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் பாசிச பயங்கரவாதி  மோடி வெறித்தனத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

படிக்க:

♦ மதவெறியூட்டும் பொய்யை பரப்பும் மோடி! | தூங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம்| வழக்கறிஞர் ராஜூ

திருக்குறளை பேசுகின்ற மோடி தமிழர்களை திருடர்கள் என்று கூறுவாரா? சூத்திர சாதியில் பிறந்த மோடி பார்ப்பனர்களுக்கு சேவை செய்வாரா? ஏழைத்தாயின் மகனான மோடி கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமாக இருப்பாரா? என்று ஆர்எஸ்எஸ் சங்கிகள் தொடர்ந்து ஊளையிட்டு வருகின்றனர். 

இந்த கேள்விக்கான பதிலை கன்னட எழுத்தாளர் தேவனூர் மகாதேவாவின் எழுத்தில் தேடுவோம்., “நாம் இங்கு ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக என்பது ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள தனக்கென அமைப்புச் சட்டம் இல்லாத அரசியல் கட்சி. அதன் தெய்வங்கள் நாக்பூரில் உள்ள கருவறையில் அமர்ந்துள்ளன. நாக்பூரில் உள்ள தெய்வத்திடமிருந்து வரும் உத்தரவுகளை கட்சித்தலைமை பின்பற்றுகிறது. வலது அல்லது இடதுபுறத்தில் ஒரு பூ விழுவது கடவுளின் சிறப்புச் செய்தியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.”என்கிறார் மகாதேவா..

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான, பார்ப்பன பாசிச பயங்கரவாத அமைப்பின் மோடி போன்றவர்கள் அதன் கைதேர்ந்த பிரச்சாரகர்கள், பாசிச பயங்கரவாதிகள் என்ற உண்மையை அந்த அமைப்பில் உள்ளவர்களுக்கும், மக்களுக்கும் புரிய வைப்போம். 

இந்த உண்மையை புரிந்து கொள்ளாத வரை ஆர்எஸ்எஸ் என்ற  பார்ப்பன பயங்கரவாத அமைப்பில் இருந்து சூத்திரர்களும், பஞ்சமர்களும், பழங்குடியின மக்களும் வெளியேற மாட்டார்கள். அவர்களை அந்த அமைப்பிலிருந்து விடுவிக்கும் மகத்தான பணி நமக்குள்ளது. செய்வோம்.

  • மாசாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here