தை… தை… தை…
மக்கள் குடிக்கும்
குடிநீரில் மலத்… தை
கலந்த
சாதீயத்…தை
வேரறுப்போம்!
சாதியத்தின்
ஊற்றுக்கண்…
பார்ப்பனியத்…தை
வருணாசிரமத்…தை
ஒழித்திடுவோம்!
மக்களை பாதுகாக்கும்
சமத்துவத்…தை
சகோதரத்துவத்…தை
மனிதநேயத்…தை
ஏற்றுக்கொள்வோம்!
சாதி, மத, நிற, பிற்போக்கு
சிந்தனைகளை
புறக்கணிப்போம்!
இனவெறி, மொழிவெறி
சூழ்ச்சிகளை
அகற்றிடுவோம்!
உழவனின்,
உழைக்கும் மக்களின் உரிமைகளை,
பாதுகாக்கும்
தை பொங்கல் நாளை உருவாக்கி
கொண்டாடுவோம்!
மற்றபடி சடங்காக
வருடந்தோறும்… கொண்டாடி
கொண்டே இருப்போம்!
- தோழர் ஆனந்தராஜ்
நீலகிரி மாவட்ட செயலாளர்
மக்கள் அதிகாரம்