பத்திரிக்கைச் செய்தி

நாள் 3-8-2023


தூத்துக்குடியில் 15 பேரை சுட்டுக்கொன்ற ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் ஆக 6-ம் தேதி  சென்னையில் உள்ள சுரானா குழுமம் நடத்தும் பள்ளிக்கு வருகை தருவதை வன்மையாக கண்டிக்கிறோம்!

ஸ்டெர்லைட் முதலாளி தமிழகத்தில் நுழையக்கூடாது!

 1. குடிநீரையும்,காற்றையும் நாசமாக்கி தூத்துக்குடி மக்களை நிரந்தர நோயில் தள்ளியவன்.
 2. தூத்துக்குடி சுற்றுச்சூழலை நாசமாக்கியதற்காக உச்சநீதிமன்றம் அகர்வாலுக்கு 100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது. அகர்வால் யோக்கியமானவர் அல்ல.
 3. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழலை கெடுத்தது தொடர்பாக ஸ்டெர்லைட்டை பல முறை எச்சரித்தும் மயிரளவும் தமிழக அரசை மதிக்காதவர்தான் இந்த அகர்வால்.
 4. பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளி மோடி லண்டன் சென்ற போது அனைத்தையும் இந்த வேதாந்த முதலாளி அகர்வால்தான் ஏற்பாடு செய்தார். அதானி போன்று பாசிச மோடியின் நெருங்கிய கூட்டாளி இந்த அனில் அகர்வால். பொது மக்களுக்கு என்றும் எதிரிதான்.
 5. 2018 ம் ஆண்டு தூத்துக்குடியில் அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு படுகொலை நடத்தி 15 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளி இந்த ஸ்டெர்லைட் முதலாளி அகர்வால்தான்.
 6. ஊழல் முறைகேடு, பொய், பித்தலாட்டம் மோசடி மக்களிடையே பிளவை உண்டு பண்ணுவது, ஊடகங்களுக்கு விளம்பரத்தால் பல கோடி வாரி இறைத்து, தான் உத்தமன் என பம்மாத்து காட்டி வருபவர்தான் இந்த அகர்வால்
 7. போராடிய மக்கள் மீது சிபிஐ வழக்கு போட்டு மதுரை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டபட்டு இன்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
 8. நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் துப்பாக்கி சூடு படுகொலைக்கு காரணமான போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். இன்று வரை அமல்படுத்த முடியாத காரணம் தமிழக அரசு மட்டுமல்ல இந்த அகர்வாலும்தான்.
 9. உச்சநீதிமன்றத்தில் வரும் ஆகஸ்டு 22 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என இந்த அகர்வால் செய்த மேல்முறையீட்டு வழக்கு இறுதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் அகர்வால் தமிழகம் வருவது உள்நோக்கம் உடையது. பொது அமைதிக்கு உகந்தது அல்ல. தமிழக அரசு எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டும்.
 10. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடியில் காற்றின் மாசு இல்லை. மிகவும் குறைந்து உள்ளது என அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து தமிழக அரசு உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.
 11. தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டம், மற்றும் தூத்துக்குடி மக்களின் உயிர்தியாகம்தான் அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது. சென்னை உயர்நீதி மன்றத்தில் அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார் என்பதற்காக, தமிழக மக்கள் மீது உணர்வு கொண்ட, நேர்மையும் துணிவுமிக்க, ஆழ்ந்த சட்ட புலமை பெற்ற அந்த நீதிபதி கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
 12. வேதாந்தா, ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் இவர் நடத்தும் தொழில் பல சுற்று சூழலை நாசம் செய்கின்றன என குற்றசாட்டை சுமந்து கொண்டு இருப்பவர். தமிழகத்தில் அமைதியாக போராடிய தூத்துக்குடி மக்கள் 15 பேரை படுகொலை செய்த அனில் அகர்வாலை எப்படி தமிழகத்தில் அனுமதிக்க முடியும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் எப்படி திறக்க முடியும்?.

தமிழக மக்களே எச்சரிக்கை!

இன்றைய பாசிச அரசியல் சூழலில் எதுவும் நடக்கலாம். எல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஓடும் ரயிலில் போலீசே இஸ்லாமிய பயணிகளை தேடி தேடி சுட்டுக்கொன்று விட்டு மோடிக்கும் யோகிக்கும் ஓட்டு போடுங்கள் என பிரச்சாரம் செய்யலாம்.

மணிப்பூரின் பூர்வக்குடிகளான குக்கி மக்களை இனஅழிப்பு செய்து சொந்த நாட்டில் அகதிகளாக்கி முகாம்களில் தங்க வைத்து அடிமைப்படுத்துவதை சட்டப்படியே பா.ஜ.க செய்ய முடியும் என்றால், இனி எதுவும் நடக்கலாம். நல்லவர்களின் மவுனம் பாசிஸ்டுகளுக்கு திமிரை தருகிறது.

அனைத்து மக்களும் ஒற்றுமையாக அமைதியாக வாழும் மதசார்பற்ற தமிழகத்தில் இனவாதம் பேசிய சீமான் இன்று இஸ்லாமிய கிறித்துவ வெறுப்பையும் இணைத்து பேசுகிறார்.

பாசிஸ்டுகளை, பாசிச கருத்துக்களை, பாசிசத்திற்கு ஆதரவானவர்களை  அனைத்து இடங்களிலும் எதிர்த்து போராடி முறியடிக்க வேண்டும்.

 

பாசிச மோடிக்கு எதிராக முழங்கிய தமிழகமே! கொலைகார  அகர்வாலுக்கு எதிராகவும் முழங்குவோம்!

ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வாலே திரும்பி போ!

அகர்வாலை அழைக்கும் சென்னை மார்வாடி தனியார் பள்ளி நிர்வாகமே
தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் செய்யாதே!

துப்பாக்கிசூடு படுகொலை நடத்தி தமிழகத்தின் அமைதியை கெடுத்த  கொலையாளியே திரும்பி போ!

தூத்துக்குடியில் காற்றையும் மண்ணையும் நஞ்சாக்கிய
மனிதகுல விரோதி அகர்வாலே திரும்பி போ! பாசிச மோடியின் கூட்டாளியே தமிழகத்தில் நுழையாதே!

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

9597138959

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here