அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக ஆர்எஸ்எஸ் பாஜகவின் கபட நாடகம்.

நாட்டு மக்கள் இவரது உரையைக் கண்டு ஏமாறுவதற்கு தயாராக இருந்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆர்எஸ்எஸ் பாஜக நம்பிக்கை வைத்திருக்கிறது. என்று முட்டாள்தனமாக ஏமாறலாம்.

ந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டு காலம் ஆகிவிட்டது என்ற நிலையில் அது பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இந்த விவாதத்தின் இறுதியில் பதில் அளித்த இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி அரசியலமைப்புச் சட்டத்தை மிகவும் வியந்தும், உயர்த்தியும் பேசியது நாடகத்தின் உச்சகட்டம்.

“ஜனநாயகத்தின் திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 75 ஆண்டுகால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, மிகவும் அரிதான நிகழ்வு. ஜனநாயகத்தின் தாய் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் நாம் கொண்டாட வேண்டிய நேரம் இது. காலங்களைக் கடந்து இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது.


படிக்க: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் புனிதமானதா?


அரசியல் சாசனத்தை வடிவமைத்ததில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்தியாவில் தான் சுதந்திரம் பெற்ற உடனே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இன்றும் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் மையமாக பெண்கள் இருக்கின்றனர். குடியரசுத் தலைவரே பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் தான். கல்வி, வேலை வாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. காலனி ஆதிக்க மனநிலையில் காங்கிரஸ் இருந்து வருகிறது” என்று ஒரு மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மிகப்பெரிய ‘உரையை’ ஆற்றினார்.

நாட்டு மக்கள் இவரது உரையைக் கண்டு ஏமாறுவதற்கு தயாராக இருந்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆர்எஸ்எஸ் பாஜக நம்பிக்கை வைத்திருக்கிறது. என்று முட்டாள்தனமாக ஏமாறலாம்.

டாக்டர் அம்பேத்கர் முன் நின்று எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையும் சட்ட ரீதியான பாதுகாப்புகளையும் கடந்த 10 ஆண்டுகளாக ஒழித்துக் கட்டி வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சி அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று பேசுவது அயோக்கியத்தனமாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான உரையை பேசிய கையுடன் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பதை நியாயப்படுத்துகின்ற வகையில் செயல்படுவதன் மூலம் அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிக்காட்டி விட்டனர்.

ஒரே நாடு ஒரே பண்பாடு; ஒரே நாடு ஒரே தேர்தல்; ஒரே நாடு ஒரே மொழி; என்று பம்மாத்து காட்டுபவர்கள் ‘ஒரே நாடு ஒரே சாதி’ என்று பார்ப்பன (இந்து) மதத்தை மாற்றுவார்களா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் பார்ப்பன (இந்து) மதத்தின் உண்மையான முகமாகும்..

பாசிச மோடி ஆற்றிய உரைக்கு ஒவ்வொரு வரிக்கும் நாம் மறுப்பு கூற முடியும் என்றாலும் அவர்களின் அடிப்படை ‘இந்து, இந்தி இந்தியா’ என்ற பார்ப்பன இந்துராஷ்டிரத்தை உருவாக்குவது தான் என்பதை அம்பலப்படுத்துவதற்கு அவரது உரையிலிருந்து நிறைய வாய்ப்புகள் உள்ளது.. அதனை தொடர்ந்து செய்வோம்.

  • பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here