க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் 5-3-2023 அன்று சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

2022 ஆம் ஆண்டிற்கான வேலை அறிக்கை, 2023 ஆம் ஆண்டிற்கான வேலை திட்டம் அமைப்பு செயலாளர் தோழர் த.பழனிசாமி அவர்களால் முன்மொழியப்பட்டு அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

மேலும் மாநிலப்பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்களால் 2022 ஆண்டிற்கான நிதி அறிக்கை சமர்பிக்கபட்டது.

காலியாக உள்ள மாநில இணைச்செயலாளர் பொறுப்பிற்கு தோழர் செழியன் அவர்களும், துணை செயலாளர் பொறுப்பிற்கு தோழர் மூர்த்தி அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2023 மே 1 சென்னை அதானி அலுவலகம் முற்றுகை போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் குறித்தும் தமிழகம் தழுவிய பிரச்சாரத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்பதை பருண்மையாக பொதுச்செயலாளர் தோழர் சி.ராஜு அவர்கள் விளக்கி பேசினார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.அதானியின் மோசடி, தில்லுமுல்லு வரி ஏய்ப்பு, பொருளாதார குற்றங்கள் பற்றி ஹிண்டன் பர்க் அறிக்கை ஆதாரங்களுடன் அம்பலபடுத்தி உள்ளது. எனவே கொள்ளைக்கார அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அது போல் பிபிசி ஆவணப்படம் 2002 குஜராத்தில் நடந்த இஸ்லாமிய இனப்படுகொலைக்கு முழு பொறுப்பு மோடி அரசுதான் என்பதையும் அதன் வெறுப்பு அரசியல் இன்றுவரை மாட்டுகறிதடை, ஹிஜாப் தடை, ராமநவமியில் கடை அடைப்பு, லவ் ஜிகாத், பாங்கு ஓத தடை, என வெகுவாக அம்பலபடுத்தி உள்ளது. இந்துத்வா மத வெறி பயங்கரவாத அரசியலை காந்தி கொலையில் தொடங்கி இன்று வரை செய்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். என்ற இரு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 1 அன்று சென்னையில் நடைபெறும் அதானி அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக அமைப்புகளும் பொது மக்களும் ஆதரவு தர வேண்டும் என இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2. இந்தியா உலக ஜனநாயகத்தின் தாயகம் என வெளிநாடுகளில் பிரதமர் மோடி வாய்ச்சவடால் அடிக்கிறார். இந்தியாவில் கருத்து சுதந்திரம் நெரிக்கப்படுக்கிறது. பிபிசி ஆவணப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டதுடன் பிபசி அலுகத்தில் பா.ஜ.க மோடி அரசு சிபிஐ ரெய்டு நடத்தி மிரட்டியது. உண்மையை எழுதும் பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பா.ஜ.க அரசின் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் போராடுவதுடன் பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை முழுமையாக விலக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

3. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அரசியல் சட்டம் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகள் பொறுப்புகளை காற்றில் பறக்கவிட்டு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளர் போல் தமிழக மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக தொடர்ந்து விஷம தனமாக பேசி வருகிறார். திருவள்ளுவர், மார்க்ஸ் டார்வின், ரிஷிகள் பற்றி தவறான கருத்துக்களையும், அறிவியல் வரலாற்றுக்கு புறம்பாக சனாதனத்தை ஆதரித்தும் பேசி வருகிறார்.எனவே, தமிழக ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காலனிய ஆட்சியின் எச்சமான கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் எனவும் இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

4.ஹிண்டர்பர்க் அறிக்கை அம்பலபடுத்திய அதானியின் பொருளாதார குற்றங்களிலும் குஜராத்தில் லட்சாதிபதியாக இருந்த அதானி மிக குறுகிய காலத்தில் மோடி பிரதமர் ஆனதும் உலகப் பணக்காரர் வரிசையில் 3 வது இடத்தை பிடிப்பதற்கு பிரதமர் மோடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உள்ள தொடர்பு பற்றி இந்திய பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றவும் விசாரணை முடியும் வரை பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அனைவரும் போராட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

5. பிரதமர் மோடி பதவி ஏற்ற 2014 முதல் அதானிக்கு கொடுக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். அனைத்து பொதுத்துறை சொத்துக்களும் நிறுவனங்களும் மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

6. தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர் பற்றி தவறான பொய் செய்திகளை பரப்பி கலவரத்தை உருவாக்க முயற்சிக்கும் பாஜக மற்றும் இனவெறி பிடித்த நாம் தமிழர் சீமானையும் இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

7. பாஜக இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற துடிப்பதும் புல்டோசர் ராஜ்யத்தின் மூலம் இந்து – இந்தி – இந்தியா என்ற தனது இந்துராஷ்டிர கனவை நிறைவேற்ற முயல்வதை முறியடிக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு - புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here