பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யா ரயிலில் பொருட்களை ஏமாற்றி விற்பது போல் காட்சி வரும். குறிப்பிட்ட பொருளை ஏலம் விடும் சூர்யா கம்பெனிக்கு கட்டுப்படியாகாத காரணத்தால் சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா என்று ஒன்றை கொடுத்து ஏலம் எடுத்தவரை ஏமாற்றுவார்.

அதுபோல்தான் மோடியின் கதையும். 2014 ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, கருப்பு பணத்தை மீட்டு அனைவரும் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வரவு வைக்கப்படும், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் அது எதுவும் கடந்த 10 ஆண்டுகளில் நடக்கவில்லை. ஆனால் மக்கள் கேட்காத, மக்களுக்கு தேவையில்லாத, சூர்யா கொடுத்த சோப்பு டப்பா போல ராமர் கோவிலை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்.

ராமர் கோவில் கட்டி திறப்பதினால் இந்திய மக்களுக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஏதோ இந்திய மக்களின் பல ஆண்டு கனவு போலவும் கோவில் கட்டி திறந்த பின்னர் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து பாலாறும் தேனாறும் ஓடும் என்பது போலவும் பில்டப் கொடுக்கிறது ஆர்எஸ்எஸ் பிஜேபி சங் பரிவார் கும்பல்.

பிரதமர் மோடியோ ராமர் கோவில் திறப்பிற்காக விரதம் இருப்பதாகவும், வெறும் தரையில் படுத்து உறங்குவதாகவும், லட்சம் ரூபாய் மதிப்புள்ள உடைகளை அணிந்து கொண்டு துறவி வாழ்க்கை வாழ்வதாகவும் Godi மீடியாக்கள் மங்கலம் பாடுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் மோடி இந்திய மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய பேரழிவை பற்றி வாய் திறக்காமல் ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலின் விசுவாசமான நாய்களை போல செயல்படுகிறது மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள்.

இந்திய மக்களின் தற்போதைய தேவை ராமர் கோயிலா? இல்லை. பசி பட்டினியுடன் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பும், உணவுமே அடிப்படைத் தேவையாக உள்ளது. பிச்சை எடுத்து உணவு வாங்கினால் கூட அதற்கும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று அவல நிலையில்தான் இந்திய மக்கள் வாழ்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:

வறுமையை போக்குவதற்கோ, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கோ சிறு துரும்பையும் கிள்ளி போடாத பாசிச மோடி, கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்திய மக்களை ஒட்டச் சுரண்டியதே நடந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களையும் அதன் சொத்துக்களையும் சுமையாக கருதிய பாசிஸ்டுகள் கார்ப்பரேட்டுகளுக்கு கூறு போட்டு விட்டுள்ளார்கள். பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டி அம்பானியின் ஜியோ நிறுவனத்தை ஊட்டி வளர்த்தது பாசிஸ்ட் மோடியே.

எல் ஐ சி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்லாயிரம் கோடிகளை அதானிக்கு வழங்கியும் பொதுமக்களின் பணத்தை ஏப்பம் விட்டதும் பாசிச மோடி. இதையெல்லாம் மக்களா செய்யச் சொன்னார்கள்.

பணமதிப்பிழப்பு எனும் முட்டாள்தனமான முடிவால் சிறுகுறுத் தொழில்கள் நட்டமடைந்தும் அதில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கும் காரணமாய் இருந்ததும் பாசிஸ்ட் மோடியும் அவர்களது அரசாங்கம் தானே. இதை மக்களா செய்ய சொன்னார்கள்.

வேலையிழந்தும், வேலை கிடைக்காமலும், வாங்கிய கடனை கட்ட முடியாமலும் மனமுடைந்து பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். விவசாயிகள் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயத்தில் கார்ப்பரேட்டுகள் தலையீட்டால் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாகவும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

 

இந்த அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காமல் ராமர் கோவிலை திறப்பதன் மூலம் வரும் 2024 மக்களவைத் தேர்தலை இலக்கு வைத்து மக்களை மத மயக்கத்தில் ஆழ்த்த முனைகிறது ஆளும் இந்துத்துவ பாசிச கும்பல்.

பாசிச மோடி அரசு 10 ஆண்டுகளில் மக்கள் மீது தொடுத்த தாக்குதலை கணக்கு தீர்க்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதம் எனும் மாயையில் இருந்து விலகி மக்கள் திருப்பி அடிக்க வேண்டும். பாசிஸ்டுகளை தேர்தலில் வீழ்த்துவது மட்டுமல்லாமல் தெருவிலும் வீழ்த்த களத்தில் போராட மக்கள் தயாராக வேண்டும்.

எங்களது தேவை ராமர் கோவில் அல்ல என்பதனை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியை விரட்டி அடிப்பதன் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here