ம்மு காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13-ந் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1931-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மன்னரான ஹரிசிங்கின் டோக்ரா படையினரால் காஷ்மீர் பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 13. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13-ந் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுவது வழக்கம்.

2019 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டு ஜ்ம்மு காஷ்மீரை உடைத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது பாசிச மோடி அரசு. இந்நிலையில் ஜூலை 13 தியாகிகள் தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதித்திருந்ததார் அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர்.

ஜூலை 13 அன்று தியாகிகளின் கல்லறையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அஞ்சலி செலுத்த யாரையும் அனுமதிக்கவில்லை.  ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் பலரும் தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல விடாமல் வீட்டில் சிறைவைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கும் அஞ்சலி செலுத்த தடைவிதித்திருந்தனர். தடையை மீறி சென்ற உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்த நிலையில் தடையை மீறி தியாகிகள் நினைவிடத்திற்குள் சுவர் ஏறி குதித்து அஞ்சலி செலுத்தி வந்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இதுதான் நிலை.

இந்தியாவில் வரலாற்றை பார்ப்பனியத்தின் வரலாறாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் சங்பரிவார் கும்பல் நாட்டு மக்களின் போராட்ட வரலாற்றை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான் காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம். பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக ஸ்ரீநகர் மத்திய சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தியபோது ஹரிசிங்கின் டோக்ரா படைகளால் 22 பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை உமர் அப்துல்லா ‘காஷ்மீரின் ஜாலியன் வாலாபாக்’ என்று ஒப்பிட்டு பேசியதற்கு காஷ்மீர் பாஜக எம்பி கொதித்தெழுந்துள்ளார்.

முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா இந்த அடக்குமுறையை கடுமையாக விமர்சித்தார். “ஜூலை 13 படுகொலை காஷ்மீரின் ஜாலியன் வாலாபாக். தங்கள் உயிரை தியாகம் செய்த மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவே செய்தார்கள். காஷ்மீர் பிரிட்டிஷ் பரமவுண்டியத்தின் கீழ் ஆளப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் போராடிய உண்மையான ஹீரோக்கள் இன்று அவர்கள் முஸ்லிம்களாக இருந்ததால் மட்டுமே வில்லன்களாகக் காட்டப்படுகிறார்கள் என்பது எவ்வளவு அவமானம், ”என்று அவர் X இல் ஒரு பதிவில் கூறினார். இன்று அவர்களின் கல்லறைகளைப் பார்வையிட நமக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம், ஆனால் அவர்களின் தியாகங்களை நாம் மறக்க மாட்டோம்.

நிச்சயமாக உமர் அப்துல்லா கூறுவது போல் இஸ்லாமியர்களை ஹீரோக்களாக காட்ட சங்பரிவார் கும்பல் விரும்பவில்லை என்பதே உண்மை. ஹரிசிங்கின் டோக்ரா படை நடத்திய படுகொலைகளை மறைப்பதும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை மறைப்பதுமே இவர்களின் நோக்கமாக உள்ளது.

படிக்க: காஷ்மீர்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி! ஆனால் அதிகாரம் ஆளுநரிடம்!

2019 ஆம் ஆண்டு 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரை இந்துத்துவமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாசிச பாஜக. கடந்த வருடம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவினாலும் துணைநிலை ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு ஜம்மு காஷ்மீரை மறைமுகமாக அதிகாரம் செலுத்தி வருகிறது. தியாகிகள் தினம் அரசு விடுமுறையாக காஷ்மீரில் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை ரத்து செய்துள்ளது. ஷேக் அப்துல்லாவின் பிறந்தநாள் விடுமுறை தினத்தையும் ரத்து செய்துவிட்டு 2022க்கு பிறகு மன்னர் ஹரிசிங்கின் பிறந்த நாளை பொதுவிடுமுறை நாளாக மாற்றியுள்ளது.

இந்தியாவின் ‘மகாத்மா’ என்றழைக்கப்படும் காந்தியை கொன்ற கோட்சேவை கொண்டாடுவதற்கும், ஆங்கிலேயனிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து பென்சன் அவர்களிடமே பென்சன் பெற்ற சாவர்க்கரை கொண்டாடும் சங்பரிவார் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் நாட்டில் தான் ஆங்கிலேய காலனியாதிக்க கும்பலுக்கு எதிராக போராடி கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கிடையாது என்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களை தியாகிகளே இல்லை என்கிறார்கள் சாவர்க்கரின் வாரிசுகள்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here