பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மை வகுப்பினர் மற்றும் பெண்களை நீதிபதியாக்கு கர்நாடகத்தில் உரிமை முழக்கம்.
=====================
கர்நாடகத்தில் பிஜேபி, காங்கரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இவைகளை சுற்றியே ஊடகவணிகர்கள் செய்திகளை கட்டமைக்கின்றனர். ஊடகங்களின் ஒளிவட்டத்தால் கர்னாடக மாநிலம் ஏறத்தாழ ஆர். எஸ். எனின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றும். உண்மை அப்படி இல்லைஎன்பதை சமீபத்திய செய்தி நமக்கு உணர்த்துகிறது. கர்நாடகம் இருவேறு கூறுகளாக பிளவுபட்டு வருவதை சமூக ஊடகளின் மூலம் உணர முடிகிறது.
கர்னாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்ட நீதிபதி எஸ். ஹெச். ரேனுகாதேவி பணிஒயவு பெறுவதால் (28-02-2022) அப்பதவிக்கு மல்லிகார்ஜுனா கவுடா நியமிக்கப்பட்டார். கடந்த குடியரசு தினவிழாவில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப்படத்தை விழாநிகழ்விடத்திலிருந்து அகற்றும்படி கட்டளையிட்டடுள்ளார். இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்பாட்ங்களை நடத்தியுள்ன.
“எல்லா நீதி மன்றங்களிலும் அண்ணல் அம்பேத்கார் புகைப்படத்தை நிறுவு
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மை வகுப்போரையும் பெண்களையும் நீதிபதியாக்கு” என்றகோரிக்கையை முன்வைத்து 18-02-2022 அன்று பெங்களூரில் நடத்திய கண்டன ஊர்வலம் ஊடகங்களின் இருட்டிப்புகளை கடந்து உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளது. நீலக்கடல் பெங்களூருக்குள் புகுந்ததுவிட்டதோ என்று எண்ணுமளவிற்கு நீலச்சட்டைகளின் பங்கேற்பு இருந்துள்ளது மறைக்க முடியாத ஒன்று.
இராவணன்.
மாநில இணை பொதுச் செயலாளர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தமிழ்நாடு.