ஜெய்பீம் படம் குறித்த கூட்டறிக்கை

ஜெய்பீம் படத்தை ஆதரித்துப் பல்துறைச் செயல்பாட்டாளர்கள் வழங்கிய கூட்டறிக்கை இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தருவோர் இதைத் தத்தம் சமூக ஊடகப் பகுதியில் பகிருமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.

அறிக்கை

சனநாயக இயக்கத்தினர், எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பெண்ணிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரது கூட்டறிக்கை.

வணக்கம்.

சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து வெளியான ஜெய் பீம் திரைப்படம், தமிழக மக்களின் பரவலான ஏற்பைப் பெற்று மிகப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்த் திரை உலகின் நட்சத்திர நடிகரான சூர்யா அவர்கள் நடித்த ஜெய்பீம் படத்தை த.செ. ஞானவேல் அவர்கள் இயக்கியிருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வு, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் துயர் சூழ்ந்த வாழ்வு ஆகியவை பற்றியது ஜெய் பீம் திரைப்படம்.

சமூக நீதி பற்றிய இந்த ஜெய் பீம் திரைப்படம், தமது சாதிக்கு எதிரானது எனத் தமிழகத்தில் உள்ள ஒரு சாரார், இந்தப் படத்திற்கும், இதன் இயக்குனர் த.செ. ஞானவேல் அவர்களுக்கும், ஜெய் பீம் படத்தைத் தயாரித்து நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள்.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள், ஒரு சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இத்தகைய அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்பே ஜெய் பீம் படத்தின் இயக்குனர்
த. செ. ஞானவேல் அவர்கள், தாமாகவே முன்வந்து ஆட்சேபத்திற்கு உரியது எனச் சொல்லப்படுகிற குறியீட்டுப் பிம்பத்தை அகற்றி இருக்கிறார்.

இதற்குப் பின்னும் ஜெய் பீம் படக் கலைஞர்கள், அவர்தம் குடும்பத்தினர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள், பொது ஊடகங்களில் தொடர்ந்து பேசியும், நிர்பந்தித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்கள்.

வன்முறையான அழுத்தங்கள் தருவதன் மூலம் கலைஞர்களைப் பணியைச் செய்வது என்பது, எதிர்காலத்தில் இனி எந்தக் கலைஞரையும் சுதந்திரமாகப் படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதினின்றும் முடக்கி விடும் ஆபத்துக் கொண்டது என நாங்கள் கருதுகிறோம்.

இத்தகைய போக்கு, சாதி மத பேதங்கள் கடந்த, பொதுச் சமூகத்தின் சொத்தான கலைஞர்களின் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல, குடிமைச் சமூக உரிமைகளுக்கே எதிரானது எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தவிரவும் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை வலியுறுத்தி நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளன என்பதையும் இத்தருணத்தில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழகத்தின் சமூகநீதிக்கும், சமூக அமைதிக்கும் எதிரான வன்முறையைத் தூண்டும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைச் சனநாயக இயக்கத்தினர், மனித உரிமையாளர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பெண்நிலைவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்களான நாங்கள் கண்டனம் செய்கிறோம்.

நீதியான, சமத்துவமான, அமைதியான தமிழகத்தை விழைகிற அனைவரும் இத்தகைய வன்முறைக்கு எதிராக, எம்முடன் இணைந்து சனநாயகக் கடமையாற்ற வருமாறு கனிவுடன் அழைக்கிறோம்.

நன்றி.

தமிழ்நாடு
——————
வசந்தி தேவி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்

எஸ்.வி.ராஜதுரை
மார்க்சிய / பெரியாரிய ஆய்வாளர்

பெருமாள்முருகன்
எழுத்தாளர்

ச.தமிழ்ச்செல்வன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

சொக்கலிங்கம்
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம்

கொளத்தூர் மணி
திராவிடர் விடுதலைக் கழகம்

கு. இராமகிருஷ்ணன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

இரா. அதியமான்
ஆதித்தமிழர் பேரவை

தியாகு
தமிழ்த்தேச விடுதலைஇயக்கம்

ப.பா.மோகன் Balu Mohan
மூத்த வழக்குரைஞர்

இந்திரன் Indran Rajendran
எழுத்தாளர்

பொழிலன்
தமிழக மக்கள் முன்னணி

வழ. ஹென்றி திபேன்
மக்கள் கண்காணிப்பகம்

திருமுருகன் காந்தி
மே 17 இயக்கம்

நாகை திருவள்ளுவன்
தமிழ்ப் புலிகள் கட்சி

ட்ராட்ஸ்கி மருது
ஓவியக்கலைஞர்

மாலதி மைத்ரி Malathi Maithri
எழுத்தாளர்

கார்முகில்
தமிழ்நாடு மார்க்சிய இலெனினியக் கட்சி

குடந்தை அரசன்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி

வி.பி.குணசேகரன்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

அருண்
தமிழ் ஸ்டுடியோ திரைப்பட இயக்கம்

வாலாசா வல்லவன்
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி

பேரா. சரசுவதி
அன்னையர் முன்னணி — தமிழ்நாடு

பாலமுருகன்
மக்கள் சிவில் உரிமைக் கழகம்

மீ. தா. பாண்டியன்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

கயல் (எ) அங்கயற்கண்ணி
தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்

ஆழி செந்தில்நாதன் Aazhi Senthil Nathan
மொழி நிகர்மை உரிமைப் பரப்பியக்கம்

சுப்ரபாரதிமணியன்
எழுத்தாளர்

பாலன்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

புலியூர் முருகேசன்
எழுத்தாளர்

நிலவழகன்
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

வீ. அரசு
தமிழ் ஆய்வாளர்

செந்தில்
இளந்தமிழகம்

கோவன்
மக்கள் கலை இலக்கியக் கழகம் — தமிழ்நாடு

பா. செயப்பிரகாசம்
எழுத்தாளர்

வ.கீதா
எழுத்தாளர்

கவிதா முரளீதரன்
ஊடகவியலாளர்

திவ்யபாரதி Divya Bharathi
ஆவணப்பட இயக்குநர்

கவின்மலர் Kavin Malar
(ஊடகவியலாளர்

இரா. பாரதிநாதன்
எழுத்தாளர்

கீற்று நந்தன்
ஊடகவியலாளர்

சுதிர் செந்தில் Sudheer Sendhil
ஆசிரியர் – உயிர் எழுத்து

நா. பெரியசாமி
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம்

சுதா இராமலிங்கம்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

பிரின்சு கஜேந்திரபாபு
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

சுப. உதயகுமார்
பச்சைத் தமிழகம் கட்சி

இராசேந்திர சோழன்
எழுத்தாளர்

சே. வாஞ்சிநாதன்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

பொதியவெற்பன் Pothi
எழுத்தாளர்

அஜீதா
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

பாமரன்
எழுத்தாளர்

மணா
பத்திரிகையாளர்

த. செயராமன்
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

இரா. முருகவேள்
எழுத்தாளர்

சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்

ஜமாலன் Jamalan Tamil
எழுத்தாளர்

புனித பாண்டியன்
ஆசிரியர் — தலித் முரசு Dalit Murasu

மதிவண்ணன்
எழுத்தாளர்

கோபாலகிருஷ்ணன்
எழுத்தாளர்

கே. பாலகிருஷ்ணன்
சுயஆட்சி இயக்கம்

வளர்மதி
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்

பாத்திமா பாபு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

நிழல்வண்ணன்
மொழிபெயர்ப்பாளர்

மருதுபாண்டியன்
சோசலிச மையம்

தி. அரசு
நிழல் திரைப்பட இயக்கம்

கி.நடராசன்
சாதி ஒழிப்பு இயக்கம்

கி.வே.பொன்னையன்
தற்சார்பு விவசாயிகள் சங்கம்

பரிமளா
ஐ.டி. ஊழியர் சங்கம்

ஆர்.ஆர்.சீனிவாசன்
ஆவணப்பட இயக்குனர்

செல்வி
மனிதி

லட்சுமி
அனைத்திந்தியப் புரட்சிகரப் பெண்கள் இயக்கம்

இரா. முரளி
உயர் கல்விப் பாதுகாப்பு இயக்கம்

பா.ஜீவசுந்தரி
பெண்ணியச் செயற்பாட்டாளர்

எச்.பீர்முகமது
எழுத்தாளர்

இராமசாமி துரைபாண்டி
தமிழ்க் கணியாளர்

க.பூர்ணசந்திரன்
எழுத்தாளர்

பால் மைக்கேல்
சமூகச்சிந்தனையாளர்

வீ.ந.சோமசுந்தரம்
திருச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்

வழ. ஆனந்தன்
எழுத்தாளர்

அமரந்த்தா
எழுத்தாளர்

கல்பாக்கம் நடராசன்
அறிவியலாளர்

பெ.விஜயகுமார்
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம்

இரா.செல்வம்
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு

ஷீலு பிரான்சிஸ்
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு

வெ. கோவிந்தசாமி
மொழிபெயர்ப்பாளர்

கோ. திருநாவுக்கரசு
தமிழ்நாடு உழவர் இயக்கம்

முத்தமிழ்
புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றம்

ஒப்புரவாளன்
தமிழ்நாட்டுக் கல்விஇயக்கம்

வழ.கு.ஞா. பகவத்சிங்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் — போராட்டக் குழு

இரா.தெ. முத்து
எழுத்தாளர்

சங்கரலிங்கம்
சுய ஆட்சி இந்தியா

ரமணி Ramani
சாதி ஒழிப்பு முன்னணி

இரா. பாலு
சமூகச் செயற்பாட்டாளர்

வழ. பிரிட்டோ Vaan Muhil
மனித உரிமை ஆர்வலர்

ஆசீர்வாதம்
மக்கள் கண்காணிப்பகம்

சோ. பிலிப் சுதாகர்
குடிபெயரும் ஆதரவற்ற தொழிலாளர் நலப்பணிக்குழு

நலங்கிள்ளி நலங்கிள்ளி
எழுத்தாளர்

வழ. தமயந்தி
புரட்சிகர விடியல் பெண்கள் மையம்

சிவகாமி
தமிழ்நாடு அறிவியல் மன்றம்

சிபிச்செல்வன்
கவிஞர்

கோச்சடை
சமூகச்செயற்பாட்டாளர்

சிவ. செந்தமிழ்வாணன் siva
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்

வழ. தமிழ் இராசேந்திரன்
கரூர் மக்கள் மன்றம்

தேவநேயன்
குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்

அரசெழிலன்
விழிக்கொடை விழிப்புணர்வு இயக்கம்

சுடரொளி
குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம்

வேலிறையன்
சமூகச்செயற்பாட்டாளர்

லிங்கன்
வழக்கறிஞர்

சிவ. செந்தில்நாதன்
த. மு. எ.க. ச.

அருள்
மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு

வழ. செ. குணசேகரன்
அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்கம்

நா.அன்பழகன்
குறும்பட இயக்குநர்

கலைக்கோவன்
எழுத்தாளர்

கோ.வெ.குமணன்
தாய்த்தமிழ் கல்விப்பணி

அறிவன்
கவிஞர்

பொன். சந்திரன்
கோணங்கள் திரைக்கழகம்

விசுவநாதன்
தொழில் முனைவோர்

பூ.அ. இரவீந்திரன்
தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்கம்

தங்க. குமரவேல்
செவ்வானம் – யூ டியூப் சேனல்

இரவிச்சந்திரன் குமாரசாமி
கவிஞர்

பேரா. கு.பாலசுப்ரமணியன்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

நிலவன்
நீரோடை

இரா. தமிழ்ச்செல்வன்
தமிழர் கழகம்

எழில் சுப்பிரமணியன்
தாய்த்தமிழ்க் கல்விப்பணி அறக்கட்டளை

இரா. பாலு
சமூகச்செயற்பாட்டாளர்

கணேஷ் சீரங்கராஜ்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

பேரா.ஆர்.பாலகிருஷ்ணன்
எழுத்தாளர்

சிலம்புச் செல்வன்
சமூக ஆர்வலர்

செ. சண்முகசுந்தரம்
எழுத்தாளர்

அபிலாஷ் சந்திரன்
எழுத்தாளர்

பா. பிரபாகரன்
எழுத்தாளர்

புலம் பெயர் நாடுகள்
————————————–
கௌரி பரா
சமூக நீதிக்கான சட்ட ஆலோசகர் இங்கிலாந்து

ரூபன் சிவராஜா
எழுத்தாளர், நோர்வே

சுஜித் ஜி
திரைப்பட இயக்குனர் இங்கிலாந்து

கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம்
நாடகநெறியாளர், நோர்வே

பா. நடேசன்
ஊடகவியலாளர்
இங்கிலாந்து

கவிதா லட்சுமி
கவிஞர், நோர்வே

சாரா ராஜன்
செயல்பாட்டாளர், இங்கிலாந்து

மு.புஷ்பராஜன்
கவிஞர், கனடா

மன்மதன் பாஸ்கி
திரைப்பட நடிகர், பிரான்ஸ்

புதியவன் ராசைய்யா
திரைப்பட இயக்குனர் இங்கிலாந்து

செல்வம்
இதழாசிரியர், கனடா

மீராபாரதி
எழுத்தாளர், கனடா

நா.வே. அருள்
கவிஞர், கனடா

அருள் பாரதி
பொறியாளர், கனடா.

தமிழக ஒருங்கிணைப்பு

கண. குறிஞ்சி Gana Kurinji
தமிழ்நாடு மக்கள்உரிமைப் பேரவை.

புலம்பெயர் நாடுகள் ஒருங்கிணைப்பு
யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran
இலண்டன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here