ஜெய் பீம்
திரைப்படம்
குரு மூர்த்தி என்ற பெயர்,
அக்னி குண்டத்திற்கான
எதிர்ப்புக் குரல் அல்ல.
கலை ,இலக்கியம்
சார்ந்த ஆரிய மத
வெறியர்களின்
நுட்ப அரசியல்
பின்னே ஒளிந்துள்ளது.
அதன் பின் புலம் இதுவே..
நவீன சமுதாயத்திற்கேற்ப
சனாதன தர்மதத்தை
கட்டமைத்திட
ஆர்.எஸ்.ஈஸ்
திட்டமிட்டது.
1964ல் விஷ்வ
ஹிந்து பரிஷத்
என்ற அமைப்பை
கோல்வால்கர்
துவக்கினார்.
1984,தேர்தலில்
பா.ஐ.க.தோல்வியைத்
தழுவியது.
அதன் ஒரு அம்சமாக,
ஆச்சார சம்ஹிதா
என்ற 18அம்சங்களை
முன்னெடுத்தது
வி எச்.பி.
நமது
தமிழகத்தில்
வி.ஹெச்.பி
இந்து முன்னணி
யாக விஷம் தோய்ந்தாக
அழகிய தமிழில் நடை பயின்றது.
அதில் 18 வது அம்சம்
இதுவே…..
இந்து தர்மத்தை,
இந்து சாஸ்திரங்கள்,
இந்து கடவுள்களை,
பெண் தெய்வங்களையும்
நாசுக்காக
பொதுமைப்படுத்துவது.
இந்து வாழ்வியல்
மதிப்புகளை
திரைப்படங்கள்,
கலை, இலக்கியங்களில்,
கிண்டல் செய்வதை
தடுப்பது என்பது தான்.
அந்த முடிவின்
செயல் வடிவமே
இப்போதைய
ஜெய் பீம்
உள்ளிட்ட பல
கலை வடிவங்களை
கருவறுக்கும்
முயற்சியின் தொடர்கள்
இதோ..
ஓவியர். எம்.எப்.ஹூசைன்,
இந்தியாவை விட்டு
வெளியேறி இறந்தது.
சமீபத்தில்
விஜய் சேது பதியை
எட்டி உதைத்துக்
கேவலப் படுத்தியது.
இளம் நடிகர்
விஜய் கிருத்துவர்
என பூதாகரப்படுத்தி
சேட்டை செய்தது
காவி வெறி.
சரணடையா
விஜய்யின்
நிமிர்வு,
வருமான வரி
ரெய்டில் காயடிக்கப்பட்டது.
திரைக்கலைஞர்கள் பிரகாஷ் ராஜ்,
சித்தார்த்தின்
ஜனநாயக
சிலிர்ப்பு
மிரட்டலாய்
எதிரொலித்தது.
அர்த்தநாரிஸ்வரர்
திருவிழாவின்
பாலியல் உரசல்
பற்றி பேசிய
வரலாற்று தரவுகளின்
அடிப்படையிலே
மாதொரு பாகன்
புதினம்.
எழுந்தது.
நாவலை வடித்தவர்
பெருமாள் முருகன்.
அதை எதிர்த்து
ஆர்.எஸ்.எஸ்
பின் புல சாதி வெறி வன்மம்
நாவலைக் கொளுத்திக் குளிர்
காய்ந்தது.
ஓராண்டு
காலம் நீண்ட
உரிமைப் போராட்டத்தை
நடத்தி வரும்,
இந்திய விவசாயிகளின்
குரல் உலகை உலுக்கியது.
உலக மனித
நேயப் பாடகர்
ரியான் போராட்டத்தை
ஆதரிப்பதாக
அறிவித்து கலை உலகை
அதிர வைத்தார்.
ஏழு கிராமி
விருதுகளின் மங்கை
ரியானாவை
ஒழுக்கம் கெட்டவள் வேசி
என்றெழுதின
சங்.சமுக ஊடகக், கூலிக்
காலிகள்
டெண்டுல்கர்
உள்ளிட்ட
பல கிரிக்கெட்
பிரபலங்களை
களமிறக்கி
மலமுடையை நாறவைத்தன.
ரியானாவுக்கு ஆதரவு
கரம் கூட்டிய
ஸ்வீடன் சுற்றுச்சூழல்
போராளி கிரிட்டா
டுவிட் போட்டார்.
அவரது கொடும்பாவியை
கொளுத்திக் கொண்டாடியது
சனாதனக் கூட்டம்.
பத்மாவதி
திரைப்படத்தை
லீலா பன்சாலி
இயக்கினார். ரஜபுத்திர
ராணி பத்மினி
மொகலாய
அரசர் அலாவுதின் கில்ஜியின்
காதலில் வீழ்ந்ததாக
பொய்யைக் கட்டி
அமைத்தன நாக்பூர் கூலிகள்.
ஜெய்பூரில் செட்
போட்டு படப்பிடிப்பு
நடந்தது.
நொறுக்கிக்
கொண்டாடியது
வெறிக்கூட்டம்.
இயக்கிய
பன்சாலி தாக்கப்பட்டார்.
உண்மையில்
ராணி பத்மினி
உள்ளிட்ட பல
நூறு இந்து பத்தினிகள்
நெருப்பில் குளித்த
புனிதத்தையே
காட்சி படுத்தியிருக்கும்.
இந்த படம்
காசி ஆசிரமத்தில்
இளம்
விதவை பிராமணப்
பெண்ணின்
மனப் போராட்டம்
குறித்த கலை வடிவம்
வாட்டர் திரைப்படம்..
பி.கே.திரைப்படம்
வேற்றுலகவாசி
, ஏலியன்பற்றிய
வித்தியாசமான
நகைச்சுவை
திரைப்படம்.
இந்து கடவுளர்களை
கொச்சை படுத்துவதாக,
முக்கின.
சங்..சங்.குகள்
இரண்டு
படப்பிடிப்பு தளங் களிலும்
கலவரம் செய்தனர்
மதநல்லிணக்க
எதிர்ப்புக் கும்பல்.
மன்னர் சிவாஜி
இந்து வெறியர் அல்ல.
இந்து ஆன்மீகத்தை
தழுவியவர் என்று,
வரலாற்று தரவுகள்
மூலம் இலக்கியம்
படைத்தார்தோழர் பன்சாரே.
90 வயதான
கம்யூனிசப்
போராளி
கோவிந்த் பன்சாரே
நடை பயின்றபோது,
ரத்தச் சகதியில் சாய்க்கப்பட்டார்.
பகுத்தறிவு, முற்போக்கு
எழுத்தாளர் கள்
கௌரி லங்கேசு,
கல்புர்க்கி என
எழுத்துப் போராளிகள்
மண்ணில் சாய்க்கப்பட்டனர்.
ஆண்டாளின்
தேவரடியாள்
சமூகம் குறித்து
இலக்கியம் எழுதிய கவிஞர்
வைரமுத்துவை
வம்புக்கிழுத்தனர்.
சைவத்தையும்
வட இந்திய
திணிப்புக்குள் கொண்டு
செல்ல முனையும் கும்பல்.
படி நிலையில்
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஆதிகார மையக்
குவிப்பை
ஒதுக்கீட்டு உரிமைகளை,
கலை,இலக்கிய
ஆளுமைகளை முளையிலே
கெல்லி எரிய முனையும்
மனு புத்திரர்களின்
சதி வேலையே .இது.
விளிம்பு நிலை
மக்களின் வாழ்வியல்
விழுமியங்களை
கலை, இலக்கிய,
பண்பாட்டு
தளங்களில் அடுத்தக்கட்ட
முற்போக்கு
நோக்கிய
நகர்வை
தடுக்க முயல்கின்றன
கொலை வெறி
பாசிசக் கும்பல்.
அசுரன்,மெட்ராஸ், வடசென்னை கர்ணன்,அட்டக்கத்தி,அறம்.ஜிப்சி,கன்னிமாடம்,மகளிர் மட்டும்,மாடத்தி,V1
மர்டர் கேஸ், பரியேறும் பெருமாள்,
பற பற,லாபம்,சார்பட்டா,நாடோடி2, என பல படங்கள் அடிதட்டு
மக்களின் போர்க்குரலை
கலை படைப்பில்
ஊடாட வைத்தன.
இவைகளை
அதே வடிவிலே
களமாடி தோற்கடிக்க
ஆதிக்க சாதி வன்மங்களைக்
கொண்ட ருத்ர தாண்டவம்
போன்ற” ஜீ “களால்
விசிறி விடப்பட்ட
படங்களை பிரமோட்
செய்தன மார்வாடிக் கும்பல்கள்
கூட்டு முறை என்று
பண உதவியும்
செய்து,
சாதி,மத நெருப்பால்
தமிழகத்தை
தகிக்க விட
சில
திரைப்பட
முயற்சிகள்
வேகமெடுத்துள்ளது
கடையிலும்
கடையிலான
இருளர்,
குறவர் மக்களின்
வாழ்வியல் துன்பியலை
அடக்கு முறைகளை
முன் வைப்பதும்,
இடது நோக்கில்
கதை நகர்த்தலையும்
முன் னெடுக்கிறது
சூரியாவின் ஜெய்பீம்
திரைப்படம்.
இது மட்டுமல்லாமல்
மத, சாதிய சக்திகளின்
எதிர்ப்பிற்கு.
நடிகர், தயாரிப்பாளர்
என்ற கட்டத்தில்
மட்டும் சூரியா
பயணப்படவில்லை
கலை படைப்புகளைத்
தாண்டி, சூரியா,
சமுக நீதிக்காக பொது
வெளியில் குரல்
கொடுப்பதுமே.
மொழிப்பற்று,
நீட் எதிர்ப்பு,கோவில்களை
விடக் கழிவறைகள்
தேவை என்பதான
சூரியா குடும்பக்
குரலின் எழுச்சியே
சங்கிகளை அதிர வைக்கிறது.
வன்னியர் சங்க குரு
புனித அக்னி குண்டம்
என்பதெல்வாம்
வன்னிய
விழிம்பு நிலை மக்களை
காத்திடும் குரலல்ல..
சூத்திரனாக
படி நிலையில்
நிரந்தரமாக
வன்னியர்களை
ஒடுக்கிட முயலும்
சத்வன நாக்பூர்
பார்பனியத்தின் குரலே.
27 சத பிற்படுத்தப்பட்ட
சமுக மக்களின்
குரல் வளையை
நெறிக்க
சமூகநீதியை புதைக்க முயலும்
சங்கி தத்துவ கும்பலின்
பின்னணிக் குரலே
இது.
மனு தர்மக் குப்பைக்குள்
மூழ்கிவிடாமல்
சதியிலிருந்து விடுபடுவோம்.
விழித்தெழுவோம்..
நன்றி: ஜேம்ஸ் நவயுகன்
முகநூல் பதிவு