புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் 

பகுதி2

இதன் மூலம் பச்சிளம் குழந்தைகளிடம் மதம் சார்ந்த நச்சுக் கருத்துக்களை, இந்த சமூக சேவகர்களை பள்ளிக்கல்வி முயற்சியில் ஈடுபடுத்துதல் என்பதன் மூலமாக கொண்டு வருகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி பள்ளிக்கல்வி என்பதை வேறு பல வகைகளிலும் அமைக்க வேண்டும் என்கிறார்கள். அது அதிகாரமயபடுத்தப்பட்ட வகையிலும் பள்ளிக்கல்வியை அவர்கள் சொல்கிறார்கள் தொகுப்பாக பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பரவலாக பள்ளிக்கூடங்கள் அமையாமல் ஒரே இடத்தில் பல நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும் என்கிறார்கள். பள்ளி ஒவ்வொரு பகுதிகளிலும், இன்றைக்கு நமது ஊர்களில், அதாவது அடிப்படைக் கல்வியை போதிக்கக்கூடிய இடைநிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் இவை எல்லாம் எவ்வளவு, எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன, எவ்வளவு மைல் தூரத்திற்குள் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன அந்த வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் எப்படி இந்தப்பள்ளிகளைச் சென்றடைந்து படிக்க முடிகிறது. அப்படி படிப்பதற்கான அந்தத் தூரம் என்பதும், அவர்களுடைய கல்விக்கும் உள்ள தொடர்புகள் என்பதும் முக்கியம்.

மிக நீண்ட தொலைவில் ஒரு கல்வி நிறுவனம் இருக்குமேயானால் அங்கு குழந்தைகள் சென்று படிப்பது என்பதும், அவர்கள் பயணம் செய்வது என்பதும் மிகக்கடினமான பணி என்பதை நாம் அறிவோம். இதை ஓரளவு தமிழகச் சூழலில் கண்டறிந்து 1960களிலிருந்து தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர்களுக்கு உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி இவற்றையெல்லாம் உருவாக்கியிருக்கக்கூடிய சூழல் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. ஆனால், இவர்கள் புதிய கல்வித் திட்டத்தின் மூலமாக என்ன சொல்கிறார்கள் என்றால், பல கல்வி நிலையங்களையும், பல பள்ளிக் கூடங்களையும் ஒரே இடத்தில் ஒரு தொகுப்பாக உருவாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எதற்காக ஒரு தொகுப்பாக உருவாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்பது அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அதிகாரமயப்படுத்தி அவற்றை ஆளுகைக்கு உட்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்ற நோக்கத்தில்தான் இதைச் சொல்லுகிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளுக்கான தூரம் அவர்களுடைய வீடுகளிலிருந்து பள்ளிக்கூடங்களை வந்தடைவதற்கான தூரங்களை பற்றி, எந்த விதமான குறிப்பும் இந்த அறிக்கையில் இல்லாமல் இருப்பதன் மூலம் குழந்தைகளை எப்படி தடை செய்கிறர்கள் அதாவது பழைய காலத்தில், அரசர்கள் வாழ்ந்த காலத்தில், பெண்கள் படிக்கக்கூடாது என்ற மனுநீதியாக அவர்கள் வகுத்துச் சொன்னார்கள். ஆகையினாலே சமஸ்கிருதம் ஒரு ஒடுக்கப்பட்ட சூத்திரன் படித்தால் அவன் காதில் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி, ஊற்ற வேண்டும் என்று சொன்னார்கள். அதைப்போல பிற்காலங்களில் – குறிப்பாக, பிரித்தானிய காலனிய காலத்தில் இந்த நிலைமைகளுக்கு எதிராக அவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களையும் பெண்களையும் படிப்பதற்கான பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி கடந்த 200 ஆண்டுகளில் தான் அவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் படித்து வந்திருக்கிறர்கள். இதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று சொல்லப்படுகின்ற அந்த இடஒதுக்கீடு மூலமாக குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்புகள் எல்லாம் மிகுதியாக்கப்பட்டு, பலதரப்பிலிருந்தும் குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கும், உயர்நிலைக் கல்விக்கூடங்களுக்கும் வந்துப் படிக்க்க் கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.

ஆனாலும் கூட அந்தக் குழந்தைகளை அப்படியான படிப்புகளுக்கான வாய்ப்பை நவீன முறையில், நவீன மனு தர்மம் என்று நாம் சொல்லலாம், இன்றைக்கு நீங்கள் ஒரு பெண் என்றோ ஒடுக்கப்பட்டவர் என்றோ கீழ் நிலையில் கல்வி நிலையங்கள் சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லமுடியாது. அதற்கான சூழல் மாறிவிட்டது. ஆனால் அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வரக்கூடாது அவர்களை பள்ளியிலிருந்து தூரப்படுத்துதல் வேண்டும் என்பதே இவர்களது நோக்கம். இந்த நோக்கத்திற்காகத்தான் இவர்கள் பல நிலைகளிலும் இந்த வடிகட்டுதல் முறை மூலமாக, பழைய முறையை, நவீன வடிவத்தில் உருவாக்கி ஒரு குலக்கல்வி – மனுநீதிக் கல்வியை இவர்கள் பள்ளிக் கல்வியாக கட்டமைக்க விரும்புகிறார்கள் என்பதை இந்தப் பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

♦  “தேசியக் கல்விக்கொள்கை 2020” ஏன் எதிர்க்க வேண்டும் – பேராசிரியர் ப.சிவக்குமார் 

அடுத்ததாக உயர்கல்வி என்ற வட்டத்தில் அவர்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கிறார்கள். ஆராய்ச்சி செய்கிற நிறுவனம் என்றும், அதைப்போல போதனை செய்கிற பல்கலைக்கழகம் என்றும், கல்லூரிகள் என்றும் மூன்று பிரிவாக பிரித்திருக்கிறார்கள். இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஓரிடத்திலேயே அமைந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒரு வளாகத்தில் குறைந்தபட்சம் 5,000லிருந்து 25,000 வரை மாணவர்கள் ஒரே இடத்தில் படிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையின் மூலமாக அவர்கள் சொல்கிறார்கள். இந்த அறிக்கையில் ஆராய்ச்சி நிறுவனம் என்பதை தேசிய ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயரிடுகிறார்கள். தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எவ்வகையான ஆராய்ச்சிகள் செய்ய வேண்டுமென்பது குறித்தும் யார் ஆராய்ச்சி செய்வது என்பது குறித்தும் அவர்கள் தெளிவான விளக்கங்களை சொல்லாவிட்டாலும் கூட அவர்களது உள்ளார்ந்த நோக்கம் எனபது தேசியம் என்ற சொல்லின் மூலமாக அவர்களுடைய ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பதற்கான நிறுவனமாகவே ஆய்வு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பது அவர்களுடைய திட்டமாக இருக்கிறது.

அந்த நிறுவனங்கள் நடைமுறைக்கு வருகிறபொழுது, அவை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்படும். இப்பொழுது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் போல, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போல, ஜாதப்பூர் பல்கலைக்கழகம் போல அது நடைமுறைப்படுத்தப்படும். பல்வேறு சுதந்திரமான ஆராய்ச்சி நிறுவனங்களாக செயல்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் இவர்கள் அழித்தொழித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த நிறுவனங்களின் துணை வேந்தர்களாக ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்று அதில் வளர்ந்தவர்களையே நியமிக்கிறார்கள்.

♦  தேசிய கல்விக் கொள்கை 2020ல் பண்பாட்டு திட்டமும், அரசியல் பொருளாதாரத் திட்டமும் 

அங்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை எப்படியெல்லாம் நடைமுறைப் படுத்துவது, ஆராய்ச்சி செய்வது என்பதையே இன்றைக்கு பல்கலைக் கழகங்களினுடைய நடைமுறையாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய பல்கலைக் கழகங்களிலேயே ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள பயிற்சி உடையவர்களை மட்டுமே துணை வேந்தர்களாக நியமிக்கவேண்டும் என்பது இவர்களுடைய மிக முக்கியமான திட்டம். அதை நடைமுறைப் படுத்தவேண்டும் என்பதையே இவர்கள் உயர் கல்வித் திட்டத்தினுடைய நிறுவன அமைப்பு என்பதையும் அந்த நிறுவன அமைப்பின் செயல்பாடுகள் என்பதையும் இவர்கள் வடிவமைக்கிறார்கள். இதில் குறிப்பாக கல்லூரிகள் என்று சொல்லுகிறபோது, அந்தக் கல்லூரிகளை பெரும்பகுதியாக தனியார் நிறுவனங்கள் நடத்துவதற்கு இவர்கள் முழு ஊக்கமும், அங்கீகாரமும், உதவியும் அளிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறர்கள். என்ன கொடுமை என்று சொன்னால், இப்பொழுது உயர்கல்வி படிக்கக்கூடிய நமது குழந்தைகளுக்கு இருக்கக் கூடிய கட்டணச் சலுகை, அதைப்போல இட ஒதுக்கீடு மூலமாக கிடைக்கக் கூடிய சலுகை இப்படி பல்வேறு சலுகைகளையும், இவர்கள் தனியார் கல்வியாக ஆக்கப்பட்டால், கண்டிப்பாக அவற்றை அவர்கள் இழப்பார்கள்.

தொடரும்…

பேராசிரியர். வீ.அரசு

மேனாள் தமிழ்த்துறை தலைவர், சென்னை பல்கலைக்கழகம்

முந்தைய பதிவு

புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் – தொடர் கட்டுரை! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here