இந்திய தத்துவ மரபு இந்து மரபு இல்லை! பாகம் 8-ன்

தொடர்ச்சி…

“வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊணாகி, உயிராகி அதுவரை” வந்துட்டு ஒரு பிரேக் போடறார். வானாகி இருப்பானோ கடவுள், வளியாகி காற்றாகி இருப்பானோ கடவுள்? ஒளியாகி இருப்பானோ? அப்புறம் தான் சந்தேகம் வருது அவருக்கு. அப்படியெல்லாம் இல்ல உண்மையுமாய் இருப்பவனாய் கடவுள் இருப்பானோ? இன்மையுமாய் இல்லாதவனாயும் கடவுள் இருப்பானோ? அதாவது வாரியாருக்கும் இருப்பானோ பெரியாருக்கும் இருப்பானோ என்று அர்த்தம். வாரியாரு இருக்குதுன்னாரு. இவரு இல்லன்னாரு, பெரியாரு. மாணிக்கவாசகர் ரெண்டு பேருக்கும் அல்வா குடுத்தாரு. உண்மையுமாய், இன்மையுமாய், கோனாகி, குடியாகி, யான் எனது என்பவரை கூத்தாட்டு வானாகி, நின்றாயை… இது வரை எல்லாரும் பாடிக்கினு கடைசிவரி வரும்போது என் சொல்லி வாழ்த்துவனே! என் சொல்லி வாழ்த்துவனேன்னு டுபாக்கூர் வேலை பார்க்கிறான்.

இந்த இடத்தில நிறுத்தி கவனிச்சி பார்த்தா இந்திய தத்துவ மரபு எது என்று புரியும். வானோ, மண்ணோ, வையகமோ, வளியோ, ஒளியோ, உண்மையோ, பொய்யோ, கோனோ, குடியோ, எல்லாம் சொல்லிட்டு உண்மையோ இன்மையோ எதுவும் தெரியலடாப்பான்னான். ஆளவுடுன்னு அர்த்தம் இந்தப் பாட்டுக்கு. இல்ல மாணிக்கவாசகருக்கே புரியல. இந்த குச்சி வச்சிருக்கறவன் சங்கரச்சாரிக்கு புரிஞ்சிரிச்சின்னா எப்படிடா நம்பறது. மாணிக்கவாசகரே கைதூக்கிட்டாரு.

வானும், வளியும், ஒளியும், ஊணும், உயிரும், அதுவும், இதுவும் ஏமி தெல்லேதுறா பகவானேன்னு கை தூக்கிட்டான். அதனால்தான் உண்மையுமாய், இன்மையுமாய் கோனாகி, குடியாகி, யான் எனதென்பவரை கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே என்னடாப்பா செய்றதுன்னா, முடிஞ்சு போச்சா கதை. இந்த சிந்தனைதான், சிந்தனை முறைதான் சாங்கியம் தோழர்களே. இது மாணிக்கவாசகன் ஏற்றுக் கொண்ட இந்திய தத்துவ மரபு. இது இந்து மரபு அல்ல, அல்லவே அல்ல. இதற்கு அப்பறம், சில நூற்றாண்டு கழித்து வறான் இன்னொரு பாட்டு. கொஞ்ச கவனிங்க எல்லாரும். கொஞ்சம் கடினமான விசயம், இத எப்படி என்னால சொல்ல முடியும்னு நீங்க நம்புனீங்களோ தெரியல, பொதுக்கூட்டத்துல இத எப்படி சொல்ல முடியும் இவ்வளவு கூட்டத்தில. இது வகுப்பறையில் அங்கங்க போர்டு வச்சுகிட்டு விளக்கக்கூடிய விசயம். ஆனால் நண்பர்கள் எல்லோருக்கும் புரியற மாதிரி சொல்றேன்னு நினைக்கிறேன்.

முயற்சி பண்றேன். மாணிக்கவாசகர் ஐந்தாம் நூற்றாண்டில் அல்லது ஆறாம் நூற்றாண்டில் மறைந்து போகிறார் இறந்து போகிறார். பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து 14 ஆம் நூற்றாண்டில் ஒருத்தர் வரார். கவனியுங்கள், அவர் வந்து பட்டிமன்றம் நடத்த வரார். மாணிக்க வாசகரை வம்புக்கு இழுக்க வரார். அலோ! மிஸ்டர் மாணிக்கவாசகம் தீடச்t தூணித டச்திஞு ண்ச்டிஞீ? கடவுள் எப்படியிருக்கிறார்னு சொன்ன? வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊணாகி, உயிராகி இருக்கிறார்னா சொன்னா. பிளடி நான்ஸன்ஸ், யார்யா உனக்கு சொன்னது. மாணிக்கவாசகர் மறைந்து சில நூற்றாண்டுகள் கழித்து வந்து பட்டிமன்றம் நடக்குது.

மாணிக்கவாசகர் அங்கேயிருந்து சொல்றாரு. நான் தான் சொன்னேன் அடியேன் தான் சொன்னேன்றாரு. ஹாய் பிளடி நான்ஸென்ஸ், இடியட், சட் அப் யுவர் மவுத், நீ சொன்னது தப்பு, நான் சொல்றேன் கேளு. நான் சொல்றதும் நான் சொல்லல. எங்கப்பன் முருகன் சொன்னது. அதுவும் முருகன்னா யாரு “”தேனென்றும், பாலென்றும் உவமிக் கொணா” தேனென்றும் உவமிக்க முடியாதாம். பாலென்றும் உவமிக்க முடியாதாம். அவ்வளவு டேஸ்ட்புல்லா இருக்கற தேனென்றும், பாலென்றும் உவமிக்கொணா தெய்வ மொழி வள்ளி. அந்த தெய்வ மொழி வள்ளி இருக்காளோ இல்லியோ, அவளுடைய டைலாக் வருதோல்லையோ அந்த டயலாக் எப்படி டேஸ்டா இருக்கும் தெரியுமோ, அந்த மணி மொழியாளுடைய குரலிருக்கிறதே அது தேனென்று பாலென்று உவமிக்கொணா தெய்வ மொழி வள்ளி, அந்த வள்ளியோட கோன் ஹஸ்பண்ட் வள்ளிக் கோன், மிஸ்டர் முருகன்தான் சொன்னாரு, எனக்கு அன்று உபதேசித்தது ஒன்றுண்டு. தேனென்று, பாலென்று உவமிக்கொணாத தெய்வ மொழி வள்ளிக்கோனன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறிடிலோ.

இப்பதான் மாணிக்கவாசகருக்கு ஆப்பு, நீ எப்படி சிந்தித்த. சாங்கிய முறைப்படி நீ சிந்தித்த. அதே சாங்கிய முறைப்படி சிந்தனை முறைப்படி கட்டில்லாத சிந்தனை முறைப்படி, கட்டுப்பாடில்லாத சிந்தனை முறைப்படி நான் சிந்தித்தேன். எனக்கு முருகப் பெருமான் என்ன சொன்னார் தெரியுமா? எனக்கு அவர் உபதேசித்தது என்ன தெரியுமா மிஸ்டர் மாணிக்க வாசகா, எனக்கு சொன்னது என்னா தெரியுமான்னு அருணகிரி நாதர் சொல்றாரு கவனியுங்கள். வானன்று, அவர் வானாகின்னாரா அந்தப்பக்கம் நின்னு, இவரு வானன்று, நீரன்று, நிலனன்று, வளியன்று, ஒளியுமன்று, ஊணன்று, உயிரன்று, நீயன்று, நானன்று, நம்பொணாதே. கந்தரனுபூதி பத்தொன்பதாவது பாடல். கந்தரனுபூதியில எழுதியிருக்கிறாரு. இப்போ கூப்பிடு கும்மி கம்பெனிய, இதுல எத நீ ஏத்துக்கப் போறீங்க? இப்படி கட்டற்று சிந்திப்பது, ஹரியானாவுல, மாட்டுத்தோல, பசுமாட்டுத்தோல, உரிச்சிட்டானாம் யாரோ ஒருத்தன். இந்த தொக்காடியா, புக்காடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு அப்படியே நட்டுக்கிச்சாம்.

மாட்டுத் தோல உரிச்சா, மாடு கோமாதான்னா, கோமாதாவே கடவுள்ன்னா, அந்த மசுரு புடுங்கி மாடுல்ல அவன முட்டியிருக்கனும். நீயென்னடா டப்பா டக்கரு. அதான் செத்துபோச்சில்ல. நீ மூடிக்கிட்டு போக வேண்டியதுதான. இப்போகூட மசூதி கட்டினானாம் பாபர், இடிக்கறதுக்குனு போனானுங்க வேல மெனக்கெட்டு. நான் கேட்கிறேன் பாபர் கோயில இடிச்சபோது ராமர் லீவுலயா போயிருந்தார். அவரு பாபரு கைய எட்டி புடிச்சிருக்க வேண்டியதுதானே. அவருக்கே தெரிஞ்சிருக்குது. பாய்கிட்ட வச்சுக்கக்கூடாதுன்னு. இராவணுடைய பத்து தலையில ஒத்த தலைய கூட விடாம சிக்கு சிக்குனு திண்ண புடுங்கி பாபர் கிட்ட சும்மாதான இருந்தாரு. அத்வானி ஏன் அப்படி அரை மரத்து வேப்பிலையை ஒண்ணா கட்டிகிட்டு ஆடறாரு அப்படின்னு நான் கோவம் வந்த கேட்பனா இல்லையா? இப்ப கோவம் வரல. இப்ப இவரு கேக்கறாரு. வானாகி, மண்ணாகி, வளியாகின்னு சொல்றியே அதே சிந்தனை முறைப்படி கட்டற்று சிந்தித்துதான் நான் கேக்கறேன். வானன்று, மண்ணன்று, நிலமும், நீரன்று, ஒளியன்று வளியன்று, ஊணன்று, உயிரன்று எதுவுமில்ல போடான்னா. இப்போ பாய்ங்க காலை மாலை ஐந்து வேளை தொழுகை நடத்தும் போது லாயிலா…உல்லா…ன்றாங்க இதுக்கு என்ன அர்த்தம், இல்லப்பா, இல்லப்பா அல்லாவ தவிர வேற கடவுள் இல்லப்பா அத சொன்னவர் முஸ்தபா ரஸூலல்லா, முகமது சல்லப்பா அத நீ நம்புப்பா, அவ்வளவுதான் அது. அவரு எல்லையற்ற அன்பாளர் எல்லையற்ற அறிவாளர், எல்லாவற்றையும் படைத்து காத்து இரட்சிக்கிறவர், இது பாய் சொல்றது. கவனியுங்கள் தோழர்களே, இந்து தத்துவ மரபு இதை ஏற்கிறதா? மறுக்கிறதா என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here