இந்திய தத்துவ மரபு இந்து மரபு இல்லை! பாகம் 11-ன்

 

தொடர்ச்சி…

அடுத்தது வைசேசிகம். பொருளறிவு. எங்கள் பொருளறிவு, உலக பிரசித்திபெற்றது. அதனால்தான் எந்த ஊர்லருந்து என்னத்த ஏற்றுமதி பண்றதுன்னு அந்த காலத்துலயே தெரிஞ்சு இருந்தது. புதுக்கோட்டை பக்கத்துல, பட்டுக்கோட்டையிலும், புதுக்கோட்டையிலும், காப்பர்னு சொல்றாங்களே, தாமிரத்தை, எழுவது நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே கவனியுங்கள் தோழர்களே 70 நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே, காப்பர் என்று சொல்கின்ற தாமிரத்தை எகிப்துக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து, அங்க எகிப்து, சமீபத்துல போனபோது அங்கே எகிப்துல, பார்த்தேன் கெய்ரோவிலே அந்த பிரமிட்களுக்கு பக்கத்திலே ஒரு எக்ஸிபிஸன் மாதிரி வைத்திருக்கிறான். ஓவியக் கண்காட்சி மாதிரி. அந்த எக்ஸிபிஸன்ல இந்த புதுக்கோட்டையில இருந்து அந்த காலத்துல வந்திருக்கற காப்பர்னு போட்டுருக்கான். பொருளறிவு வைசேசிகம். இந்த இந்திய மரபு அறிந்தவர்கள் தமிழர்கள். இவர்கள் இந்துக்கள் இல்லை, இல்லவே இல்லை.

ஏன்னா இந்து தத்துவத்துல வைசேசிகம் பொருளறிவே கிடையாது அதனாலதான் வாழ்வாவதே மாயம், மண்ணாவதே திண்ணம், வெங்காயம் வெள்ளப் பூண்டுன்னு சொல்றான். அவர்களுக்கு பொருளறிவு இல்லை. வேதாந்தம், வேதத்தின் அந்தம் என்று பொருளில்லை அதற்கு. மெய்பொருள் முடிவு என்று பொருள். மெய் பொருள் முடிவு மறைந்திருப்பதை வெளிக் கொணரும் முடிவு. இது தமிழருக்கே உரியது. நேரம் அதிகம் இல்லாமையால் முழு விளக்கம் தர முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு சுட்டிக் காட்டியிருக்கின்றேன். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், வேதம் சார்ந்த, உபநிடதம் சார்ந்த, விபரீதமான மனுஸ்மிருதி சார்ந்த கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும், வாத்சாயணரின் காம சூத்திரமும் சார்ந்த அந்த இந்து மரபு பார்ப்பனர்களுக்குரியது. அவர்கள் கூட இதில் எதையும் இப்பொழுது பின் பற்றுவதில்லை என்பதுதான் விபரீதம். இப்போ கேட்டீங்கன்னா பார்ப்பன இந்து மரபிலே என்ன மிஞ்சியிருக்கிறது என்று கேட்டால் முடிக்கும் போது சொல்கிறேன். கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஊர் எல்லாம் இந்தக் கருத்தை பரப்புங்கள். வாய்ப்பு நேரும் போதெல்லாம் இந்தக் கருத்தை சொல்லுங்கள். இன்றைக்கு இந்து தத்துவ மரபுகூட கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை, வாஜ்பாயும், அத்வானியும் கூட ஏற்பதில்லை. அவனால சொல்ல முடியுமா? தைரியமா? கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை நாங்க ஏற்கிறோம் என்று. வேதத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா அவர்களாலே. நான் சொன்ன மனு ஸ்ம்ருதியை ஏற்றுக் கொள்கிறேன் என்று டிக்ளேர் பண்ண முடியுமா வாஜ்பாயாலே? யாராலயும் முடியாது. காரணம் என்னன்னா பார்ப்பனர்களாலேயே இந்து மதத்தை பின்பற்ற முடியாது என்பதை அறிக. பார்ப்பானாலேயே இந்து மதத்தை பின்பற்ற முடியாதுன்னா அப்போ பாப்பான்கிட்ட இந்து மதம்ங்கற பேர்ல மிச்சமாயிருக்கறது என்ன என்பதை ஆராய்ந்து நாம் எடுக்கற முடிவு கொஞ்சம் குடுமி, கிழிஞ்ச கோவணத்தையும் தவிர இந்து மதத்துல வேற ஒரு மசுரும் இல்ல. கொஞ்சம் குடுமியும், கிழிஞ்ச கோவணத்தையும் தவிர இந்து மதத்துல எந்த மரபும் இல்ல. எங்கள் இந்திய மரபு, தமிழ் மரபு தத்துவ மரபு, சாலப் பரந்தது.

அதுபோதும் இந்துவே இந்த நாட்டைவிட்டு வெளியேறு. இந்திய மரபுடைய உழைக்கும் மக்களான, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், எங்கள் தத்துவ மரபைச் சார்ந்ததாய் எங்கள் ஆட்சி இங்கே வரும். இங்கு உழைக்கும் மக்களின் ஆட்சி மலர வேண்டும். இந்த ஓடு காலிகள் ஓட வேண்டும். அவர்களுக்கு பதிலடி கொடுக்க இங்கு படை வீரர்களாய் திரண்டிருக்கின்ற அனைவருக்கும், என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வணக்கம், நன்றி, வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

முற்றும்.

இந்திய தத்துவ மரபு இந்து மரபு அல்ல! அதாவது பார்ப்பன மேலாதிக்கமும், நால் வர்ண பாகுபாட்டை முன்னிறுத்தும் சாதிக் கொடுமையையும் உள்ளடக்கிய மரபு நமது மரபு அல்ல! வரலாற்று பொருள் முதல்வாத பார்வையில் இந்திய தத்துவ மரபை புரிந்துக் கொள்ளவும் அதனை கையில் ஏந்தி சுழலவும் பேராசிரியர் பெரியார்தாசன் உரை நமக்கு பயன் அளிக்கிறது. இந்திய தத்துவ மரபை உயர்த்தி பிடிப்போம்! காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here