மேற்குவங்க மாநிலத்தில் துர்கா விழாவின் போது வீதிகளில் மகிஷாசுரனை, துர்க்கை கொல்வதைப் போன்ற சிலைகளை அமைத்து மக்கள் வழிபடுவது என்பது வழக்கமாக உள்ளது.

மீண்டும் கொலை செய்யப்படும் காந்தி:

கொல்கத்தா நகரின் தெற்கு பகுதியில், இந்து மகாசபையால் இப்படிப்பட்ட ஒரு சிலை பொதுமக்களின் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் தந்தை’ என்று சொல்லப்படும் காந்தியை துர்க்கை கொலை செய்வது போல அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சேபனை எழுந்த நிலையில்,காவல்துறை அந்த சிலையை அகற்றுமாறு கூறிவிட்டது. எனவே அந்த சிலையில் உள்ள காந்தி உருவத்திற்கு பதில் மீசை மற்றும் தலை முடியுடன் கூடிய வேறு உருவத்தை அங்கு வைத்து விட்டனர். மேலும் அந்த சிலைக்கு அடியில் ஒரு துப்பாக்கியையும் புதிதாக வைத்து விட்டனர். மகிஷாசுரனின் உருவத்திற்கு பதில் காந்தியின் உருவம் அங்கு வைக்கப்பட்டது என்பது தற்செயலாக நடந்து விட்டதாக சங்கிகள் கூறியுள்ளனர்.

இப்படி காந்தி சிலையை வைத்ததற்கு எதிர்க்கட்சிகள் மட்டும் கண்டனம் தெரிவிக்கவில்லை; பாரதிய ஜனதா கட்சியும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதை எப்படி புரிந்து கொள்வது?

இப்படிப்பட்ட சிலை வைக்கப்பட்டிருந்த அதே பந்தலில், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி இவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

பாலியல் வல்லுறவிற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று காந்தி கூறினாரா?

தன்னை கற்பழிக்க வருபவனை பெண் தன்னுடைய நகம், பற்களால் தாக்கி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி கூறியுள்ளார்.

இப்படி கூறியுள்ள காந்தியைப் பற்றி

அந்த துர்கா பூஜைக்கான பந்தலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனர், கொடூரத்தின் உச்சமாக உள்ளது.

“ஒரு முஸ்லீம், ஒரு இந்து அல்லது சீக்கியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய விரும்புவதாக தெரிவித்தால், அவள் ஒருபோதும் அவரை மறுக்கக்கூடாது, ஆனால் அவருடன் ஒத்துழைக்க வேண்டும் . அவள் நாக்கைப் பற்களுக்கு நடுவே வைத்துக்கொண்டு இறந்தவள் போல் படுக்க வேண்டும். இதனால் கற்பழித்த முஸ்லீம் விரைவில் திருப்தி அடைவார், விரைவில் அவர் அவளை விட்டு வெளியேறுவார்” என்று காந்தி கூறியுள்ளதாக ஒரு பேனரையும் வைத்துள்ளனர்.

காந்தி இப்படி கூறவில்லை என்பதை பலமுறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பின்னரும் இந்த பொய் பிரச்சாரத்தை இவர்கள் நிறுத்துவதே இல்லை.

சங்கிகளின் இரட்டை வேடம்:

இப்படிப்பட்டவர்களை மோடி கைது செய்வது இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்; மோடி இந்த கயவர்களைக் கண்டிப்பது கூட இல்லை.

ஆனால் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி அன்று பிரதமர் மோடி காந்திக்கு மரியாதை செலுத்தினார். அத்துடன் நிற்காமல் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது எப்பேர்பட்ட நடிப்பு?

நேர்மை என்றால் என்னவென்றே சங்கிகளுக்கு தெரியாது. தங்களின் இந்துராஷ்டிர கனவை அடைய எத்தகைய அயோக்கியத்தனங்களை செய்தாலும் அது நேர்மையானது; அது நாட்டின் நலனுக்குத் தேவையானது என்பதுதான் சங்கிகளின் நடைமுறை.

இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவார்கள். அதேசமயம் 20 லட்சம் இஸ்லாமியர்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்றும் பேசுவார்கள். அதற்கும் ஒரு படி மேலே போய் மசூதியில் குண்டு வைத்த பிரக்யா சிங் தாக்கூர் போன்ற பயங்கரவாதியை பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆக்குவார்கள்.

இந்திய நாட்டில் இதன் மூலமாக மத வெறியை, வன்முறையை வளர்ப்பது; இஸ்லாமியர்களையும், இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்களையும் கொன்றொழிப்பது என்பதை செயல் திட்டமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆர்எஸ்எஸ் பார்ப்பன பயங்கரவாதிகள். அவர்கள் பல்வேறு பெயர்களில் அமைப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடினால் புல்டோசர்! வழக்கு போட்டால் கைது! அமுலாகிறது சட்டப்படியான பாசிசம்!

ஒவ்வொரு அமைப்பில் உள்ளவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். ஏன் ஒரே அமைப்பில் உள்ளவர்கள் கூட வெவ்வேறு விதமாக பேசுவார்கள். கேட்டால் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்பார்கள்.

ஆனால் மதவெறியை விதைப்பது, வளர்ப்பது அதன் மூலம் சமூகத்தை இரண்டாக பிளப்பது என்பதன் மூலம் இந்துராஷ்டிரத்தை அமைப்பது என்பதை மறைமுகமான அல்லது வெளிப்படையான செயல்திட்டமாகக் கொண்டு செயல்படுவார்கள்.

இவர்கள் எப்படி இருந்தாலும், செயல்பட்டாலும் அதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இவர்களை தனிமைப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

வாருங்கள் ஒன்றிணைந்து இதை நாம் செய்து முடிப்போம்!

  • பாலன்

செய்தி ஆதாரம்: The wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here