மிழகத்தில் பாசிச பாஜகவிற்கு எதிரான, அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கின்ற சமூக நீதி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று திமுகவும் அதன் ஆதரவாளர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால் பிரிட்டன் காலனியாதிக்க காலத்தில் கருத்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்த காலனி ஆட்சியாளர்கள் போல தான் தற்போது கருத்துரிமை பிரச்சாரங்களையும், பொதுக்கூட்டம் நடத்துவது, மாநாடு நடத்துவது, ரோடு ஷோக்கள்  நடத்துவது ஆகியவை அனைத்தையும் தடுக்கின்ற முயற்சியில் திமுக இறங்கியுள்ளது.

சமீபத்தில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, “கூடும் மக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து 1 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு அனுமதி கோர வேண்டும், கூட்டங்கள் 3 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும், பங்கேற்பாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை ஏற்பாடு செய்ய வேண்டும், மேடைக்கு பொறியாளர் சான்றிதழ் பெற வேண்டும் போன்ற விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன” என்று திமுக முன் வைத்துள்ளது..

வழக்கம்போல நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அமல்படுத்துவதாக கூறிக்கொண்டு இத்தகைய கொடூரமான, ஜனநாயக விரோத சட்டதிட்டங்களை போடுவதில் திமுக நீண்ட பாரம்பரியம் கொண்டது.

நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் அனைத்திலும் சட்டத்திற்கு புறம்பான போலீசின் ராஜ்ஜியம் மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் ராஜ்ஜியம் நடந்து கொண்டுள்ளது.. அதுபோலவே தமிழகத்திலும் போலீசு ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு திமுக முயற்சிக்கிறது.

பாசிச பாஜகவிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் உயர்த்தி பிடிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், “குடிமக்களுக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமை ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக வழங்கியுள்ளது” என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்..

மேலே சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)-ன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்றும் கூறிக் கொள்கின்றனர்.. ஆனால், மக்கள் பிரச்சினைகளுக்காக அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பேரணி, பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு முன்வைப்புத் தொகை நிர்ணயிப்பது என்பது சிறிய மற்றும் எதிர்க்கட்சிகளின், மக்கள் நலன் விரும்பும் கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் ஜனநாயக விரோதத் தன்மை கொண்டதாக உள்ளது.

மக்களை திரட்டி போராடுகின்ற இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை கூட்டுகின்ற கூட்டங்களுக்கு கீழ்க்கண்ட வகையில் முன்பணம் செலுத்த வேண்டும் என்பது மேலும் ஒரு மோசமான கருத்து சுதந்திரத்திற்கு கல்லறை கட்டுகின்ற முயற்சியாகும்.

இந்த அறிவிப்பின்படி,

  • 5,000 முதல் 10,000 பேர் இருந்தால் – ரூ.1 லட்சம்
  • 10,000 முதல் 20,000 பேர் இருந்தால் – ரூ.3 லட்சம்
  • 20,000 முதல் 50,000 பேர் இருந்தால் – ரூ.8 லட்சம்
  • 50,000 பேருக்கு மேல் இருந்தால் – ரூ.20 லட்சம்.

என்று முன் பணமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளனர். இதன் மூலம் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்ற பொறுப்பை தட்டிக் கழித்து கட்சிகளின் மீது அபராதம் விதிக்கின்ற வகையில் இந்த நடைமுறைகள் உள்ளது.

படிக்க:

 நியூஸ்கிளிக் இணையதள அலுவலகத்தில் ரெய்டு! பத்திரிக்கை சுதந்திரத்தை தடுக்கும் பாசிசம்!

 பீகார்: தேர்தல் வெற்றிக்கு சாதிவெறி-பார்ப்பன மதவெறியுடன் பாயும் பாசிச பாஜக! இண்டியாக் கூட்டணியின் கையாலாகத்தனம்.

அதோடு அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி 10 நாட்கள் முன்பாகவும், 15 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும். மற்ற இடங்களுக்கு 21 நாட்கள் முன்பாகவும், 30 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் கருத்துரிமைக்கும், அவ்வப்போது நிகழ்கின்ற ஜனநாயக விரோத, பாசிச பயங்கரவாத அரசியலுக்கு எதிராக பதிலடி கொடுப்பதை தடுக்கின்ற விதமாக உள்ளது.

பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கின்ற வகையிலான தெருமுனை கூட்டங்கள், ஆலை வாயில் கூட்டங்கள், பேருந்து மற்றும் ரயில் பிரச்சாரங்கள் தெருமுனைப் பிரச்சாரங்கள், கருத்தரங்கங்கள், அரங்க கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மாநாடுகள் போன்றவை அனைத்தும் தற்போதைய சூழலில் மட்டறுக்கப்பட்டு போலீசு அதிகாரிகளின் தயவின் கீழ் தான் ஜனநாயகம், ‘ ரேஷன் முறையில்’ வழங்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும், பேரணிகளையும் நெறிமுறைப் படுத்துகிறோம் என்ற பெயரில், குளிர் பதன அறைகளில் அமர்ந்து கொண்டு, ‘ நவீன நாட்டாமைகளாக’ செயல்படும் உச்ச, உயர் நீதிமன்றங்கள் உத்தரவிடுவதும், அதனை அப்படியே வழிமொழிந்து அமல்படுத்துகின்ற திமுக அரசின் ஜனநாயக விவாத போக்குகளும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மக்கள் சுதந்திரமாக தனது கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்ற ஜனநாயக உரிமைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே பறித்து ஒழித்துக் கட்டப்படுகின்ற பாசிச சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்ற சூழலில் இத்தகைய சட்டங்கள் அனைத்தும் மக்களின் குறைந்தபட்ச அரசியல் உரிமைகளையும், பறிக்கின்ற கண்ணோட்டத்தில் அமுல்படுத்தப்படுவதால் அதனை எதிர்த்து முறியடிக்க வேண்டிய அவசியம் முதன்மை பணியாக மாறியுள்ளது.

  • கணேசன்

புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. சுருக்கமான கட்டுரை எனினும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பான – திமுக அரசின் அடக்குமுறை சார்ந்த பல்வேறு அம்சங்களை தோலுரித்து அம்பலப்படுத்திய கட்டுரையாளர் தோழர் கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here