ந்தியாவை அமெரிக்க மேல்நிலை வல்லரசின் காலடியில் கிடத்துவதற்கு விசுவாசமாக சேவை செய்கின்ற பாசிச மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் செய்த சாதனைகள் என்ற பெயரில் இந்து தமிழ் திசை கீழ்கண்ட செய்தியை பெரும் மகிழ்வுடன் வெளியிட்டுள்ளது.

உடல் முழுக்க அடிமை ரத்தம் ஓடும் ஒருவனால் தான் இவ்வாறு செய்திகளை தொகுக்கவும், அதனை பகிரங்கமாக வெளியிடவும் முடியும் என்பதை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால் 5 பலன்கள்

”1. முதன்முறையாக அமெரிக்க ராணுவம், இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்பங்களை பகிர ஒப்புதல் தெரிவித்துள்ளது. ராணுவ தளவாடங்கள், தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் செமி கண்டக்டர்களுக்கான தயாரிப்பு ஆலையை இந்தியாவில் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

  1. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா சபையில், நீதி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு கிளை அமைப்புகள் உள்ளன. அந்தக் கிளை அமைப்புகளில் பாதுகாப்பு கவுன்சில் அதிகாரம் பொருந்திய அமைப்பாகும். மற்ற ஐநா அமைப்புகளால் பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலிடம் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், இந்தக் கவுன்சிலில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய 5 நாடுகள் மட்டுமே இன்று வரை நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க அமெரிக்க அதிபர் பைடன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
  2. அமெரிக்கவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், பாஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் 2 புதிய இந்திய தூதரகங்கள் திறக்கப்பட உள்ளன.
  3. தற்போது இந்தியா அதன் ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து 31 ஹன்டர் – கில்லர் ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் 50,000 அடி உயரத்தில், தொடர்ச்சியாக 40 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 442 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். 1,700 கிலோ வெடிகுண்டுகளை ட்ரோனில் சுமந்துசெல்ல முடியும். லேசர் தொழில்நுட்பத்துடன் செயல்படும் 4 ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை எதிரிகளின் இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்.
  4. இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பாரம்பரிய கலைப் பொருட்களை, மீண்டும் இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இவை 4,000 ஆண்டுகள் பழமைமிக்கவை என்று கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 640 இந்திய கலைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 578 கலைப் பொருட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.”

இந்திய ஒன்றிய அரசின் பிரதமரான மோடி அமெரிக்காவிற்கு செல்வது இது முதல் முறையல்ல. அமெரிக்க மேல்நிலை வல்லரசு தனது அடிமை நாடுகளுடன் இதுபோன்ற பல ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு சுரண்டுவதும் முதல் முறையல்ல என்ற போதிலும் மோடியின் இந்த ஐந்து அம்ச சாதனைகளை பிரதானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வியாகும்.

படிக்க:

கிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா அமெரிக்காவில் படிக்காமலேயே பட்டம் வாங்கிய மோடி!
♦ 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்து மேலாதிக்கத்தால் பீதியடைந்துள்ளன

இந்தியாவின் அரசியல், பொருளாதார நிலைமைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கடுமையான நெருக்கடியும், ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்ற சூழலும் நிலவுகிறது. குறிப்பாக நாட்டை சூறையாடி வரும் தேசங்கடந்த தரகு முதலாளிகளான அம்பானி, அதானி போன்றவர்களின் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது பல்வேறு தரவுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டு மக்களை ஒட்டச் சுரண்டியும், நாட்டின் தேசிய வளங்களை ஒரு சிலர் கைகளுக்கு அள்ளிக் கொடுத்தும் ஆட்சி நடத்துவதையே ’வளர்ச்சிப் பாதை’ என்பதை ஆர்எஸ்எஸ் பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பொருத்தமாக ஊடகங்களை வளைத்து ஒவ்வொரு செய்தியையும் தனக்கு சாதகமாக மாற்றி வருகின்றனர் என்பதை தான் இந்து தமிழ் திசையின் விசுவாச அடிமை புத்தி நமக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் விவசாய உற்பத்தி பின்னடைந்துக் கொண்டே செல்வதும், கிராமப்புறங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்வதும், நாடோடிகளாக, தினக்கூலிகளாக மாறி வயிற்றைக் கழுவுகின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலைமையில் மேற்கண்ட சாதனைகள் அவர்களது வாழ்க்கையை மாற்றுவதற்கு ஏதாவது உதவுமா என்றால் ஒரு துளி அளவு கூட உதவாது என்பது தான் உண்மையாகும்.

இந்த உண்மையை மறைத்து மேற்கண்ட ஐந்து பேரும் சாதனைகளை மோடியின் சொந்த சாதனையாக கருதி ஏற்றுக் கொண்டால் ஒன்று அவர்கள் அரசியல் அறிவற்ற அடி முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது பின் விளைவுகளை பற்றி யோசிக்காத சங்கி முட்டாளாக இருக்க வேண்டும். இரண்டும் ஒன்றுதான் என்று நீங்கள் கூறினால் அதனை மறுத்துக் கூற முடியாது.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here